ஜெயிலர் பட வசூல் சாதனையை முதல் நாளே சல்லி சல்லியாய் நொறுக்கிய ஜவான் - ஒரே நாளில் இத்தனை கோடி கலெக்ஷனா?
Jawan Box Office collection : அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஜவான் திரைப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.
jawan, Jailer
பாலிவுட் திரையுலகின் பாட்ஷாவாக வலம் வருபவர் ஷாருக்கான். கடந்த 2018-ம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த ஜீரோ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மரண அடி வாங்கி படுதோல்வி அடைந்தது. அப்படத்தின் தோல்விக்கு பின்னர் கடந்த 4 ஆண்டுகளாக அவர் நடிப்பில் ஒரு படங்கள் கூட ரிலீஸ் ஆகவில்லை. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் வெளிவந்த பதான் என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படம் மூலம் தரமான கம்பேக் கொடுத்தார் ஷாருக்கான்.
Jawan
பதான் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் ஹிட் அடித்தது. பதான் வெற்றிக்கு பின்னர் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் தான் ஜவான். இப்படத்தை பிரபல கோலிவுட் இயக்குனர் அட்லீ இயக்கி உள்ளார். அவர் இயக்கிய முதல் பாலிவுட் படம் இதுவாகும். ஜவான் படத்தின் மூலம் நடிகை நயன்தாரா, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரையும் பாலிவுட்டில் அறிமுகப்படுத்தி இருக்கிறார் அட்லீ.
இதையும் படியுங்கள்... 'ஜவான்' படத்தில் நடிக்க ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் வாங்கிய சம்பள விவரம்!
shah rukh khan
பதான் படத்தின் வெற்றியால் ஜவான் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக தன்னுடைய கமர்ஷியல் மேஜிக்கை மீண்டும் நிகழ்த்திக் காட்டி இருக்கிறார் அட்லீ. ஜவான் திரைப்படம் வெளியான முதல் நாளே அதிரிபுதிரியான வரவேற்பை பெற்றது. இப்படத்திலும் ஒரு சில படங்களின் தாக்கம் இருந்தாலும் தன்னுடைய விறுவிறுப்பான திரைக்கதையால் அதையெல்லாம் மறக்கடித்துவிட்டார் அட்லீ என பல விமர்சகர்களே பாராட்டினர்.
jawan box office collection
ஜவான் திரைப்படத்திற்கு கிடைத்த மாஸான ஓப்பனிங்கால் அப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக்குவித்து இருக்கிறது. அதன்படி இப்படம் முதல் நாளில் மட்டும் உலகளவில் ரூ.150 கோடி வரை வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் மட்டும் இப்படம் ரூ.75 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாம். இப்படத்தின் இந்தி வெர்ஷன் மட்டும் ரூ.65 கோடி வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது.
jawan beat Jailer
அதேபோல் தமிழ்நாட்டில் எந்த ஒரு இந்தி படமும் செய்திராத வசூல் சாதனையை ஜவான் நிகழ்த்தி உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் முதல் நாளில் ரூ.5 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்துள்ளதாம். கடந்த மாதம் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் முதல் நாளில் ரூ.98 கோடி வசூலித்து இருந்த நிலையில், அந்த சாதனையை ஷாருக்கானின் ஜவான் சல்லி சல்லியாக நொறுக்கி அதைவிட ரூ.50 கோடி கூடுதலாக வசூலித்து மாஸ் காட்டி உள்ளது.
இதையும் படியுங்கள்... Jawan Leaked: அட கடவுளே... 'ஜவான்' படத்திற்கு வந்த சோதனை! அதிர்ச்சியில் இயக்குனர் அட்லீ மற்றும் ஷாருகான்!