அஜித்தின் நல்ல குணம்.. விஜயின் கெட்ட குணம்.. நடிகர் மாரிமுத்து சொன்ன பிளாஷ்பேக் சீக்ரெட்ஸ் !!
Ethir Neechal and Director Marimuthu Death : நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார். இந்த நிலையில் நடிகர் விஜய் மற்றும் அஜித் குமார் பற்றி இவர் பேசும் பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
Ethir Neechal Marimuthu
திரைப்பட நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக காலமானார். சீரியலுக்கு டப்பிங் பேசிக்கொண்டிருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறபடுகிறது. பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும், விமல் நடித்த புலிவால் ஆகிய தமிழ் படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் கூட இவர் நடித்திருந்தார். மணிரத்னம், வசந்த், சீமான், எஸ்.ஜே.சூர்யா ஆகியோருடன் இவர் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
G Marimuthu passed away
சினிமாவில் இருந்து சமீபத்தில் சின்னத்திரைக்கு வந்தார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளத்தை கொடுத்தது. இதில் நடிகர் மாரிமுத்து, ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் வில்லனாக நடித்தார் . மதுரை தமிழில் இவர் பேசும் வசனங்கள் ரசிகர்களைக் கவர்ந்தன. சின்னத்திரை ரசிகர்கள் எதிர்நீச்சல் தொடரை விரும்பி பார்ப்பதற்கு நடிகர் மாரிமுத்துவும் ஒரு காரணம் என்றே சொல்லலாம்.
Ethirneechal Marimuthu
இந்த நிலையில் இவர் இன்று மாரடைப்பு காரணமாக இறந்துள்ளார். இவரது உடலுக்கு பல்வேறு திரை நட்சத்திரங்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் மாரிமுத்துவின் பழைய பேட்டியில் நடிகர் தளபதி விஜய், அஜித் பற்றி பேசியுள்ளார். அதில் அஜித் பற்றி பேசியபோது, அடுத்தவர்கள் செய்யும் கெட்டதை மறந்துவிடுவார் அஜித்.
G Marimuthu about ajith
கோபம் வந்தால் பேசிவிடுவார். ஆனால் அதையே மனதில் வைத்துக் கொண்டு செயல்பட மாட்டார். யாராவது கெட்டது செய்தாலும் அதை மனதில் வைத்துக் கொள்ளாமல் அவர்களுடன் சிரித்துப் பேசுவார். அது தான் அவரின் குணம்” என்று கூறியுள்ளார். ஆனால் நடிகர் தளபதி விஜய் அஜித் மாதிரி இல்லை. அவருக்கு யாராவது கெட்டது செய்தால் அது எத்தனை நாளானாலும் மறக்கவே மாட்டார்.
G Marimuthu about vijay
படப்பிடிப்பு தளத்தில் நடப்பதை கூட மறக்க மாட்டார். அதை ஓரிரு நாட்களில் இரண்டு மடங்காக திருப்பிக் கொடுத்துவிடுவார். விஜய் எதையும் திட்டமிட்டு செய்வார். படப்பிடிப்பு தளத்திற்கு சொன்ன நேரத்திற்கு வந்துவிடுவார். யாரையாவது அடிக்கும் அளவுக்கு கோபம் இருந்தாலும் அவரிடம் சிரித்த முகமாக பேசிக் கொண்டிருப்பார்” என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி வருகிறது.
ஏ இந்தாம்மா முதல் இந்தியன் 2 கனவு வரை.. எதிர்நீச்சல் குணசேகரனின் யாரும் அறிந்திடாத மறுபக்கம்