விக்கி உடன் ஜோடியாக சென்று ஜவான் வெற்றியை கொண்டாடிய நயன்தாரா - வைரலாகும் Exclusive ஏர்போர்ட் கிளிக்ஸ்
ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி உள்ள நயன்தாரா, முதல் பட வெற்றியை மும்பையில் மாஸ் ஆக கொண்டாடிவிட்டு வந்தபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
vignesh shivan, Nayanthara
கேரளாவை சேர்ந்தவரான நயன்தாராவை பேமஸ் ஆக்கியது தமிழ் சினிமா தான். ஐயா படம் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்த நயனுக்கு முதல் படத்திலேயே மாபெரும் வரவேற்பு கிடைத்தது. அப்படத்தில் அவர் ஆடிய ‘ஒரு வார்த்தை கேட்க ஒரு வருஷம்’ பாடல் அவரை வேறலெவலில் ரீச் ஆக்கியது. ஐயா படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிக்கு ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார் நயன்.
Nayanthara
சந்திரமுகி திரைப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால் நயனின் மார்க்கெட் உச்சத்தை தொட்டது. பின்னர் சிம்புவுடன் வல்லவன், விஜய்க்கு ஜோடியாக வில்லு, அஜித்துடன் பில்லா, ஏகன் என வரிசையாக முன்னணி நடிகர்களின் பட வாய்ப்பை தட்டிதூக்கி டாப் ஹீரோயினாக உயர்ந்தார் நயன்தாரா. ஒருகட்டத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து டிரெண்டை மாற்றினார்.
Nayanthara exclusive photos
அந்த வகையில் இவர் நடித்த அறம் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தான் மற்ற ஹீரோயின்கள் இதுபோன்ற கதாநாயகிகளை மையமாக வைத்து உருவாகும் படங்களை தைரியமாக தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கினர். இந்த விஷயத்தில் நயன்தாரா ஒரு டிரெண்ட் செட்டர் என்றே சொல்லலாம்.
இதையும் படியுங்கள்... ஜெயிலர் பட வசூல் சாதனையை முதல் நாளே சல்லி சல்லியாய் நொறுக்கிய ஜவான் - ஒரே நாளில் இத்தனை கோடி கலெக்ஷனா?
lady superstar Nayanthara
நானும் ரெளடி தான் படத்தில் நடித்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிக்க தொடங்கிய நயன்தாரா, சுமார் 7 ஆண்டுகள் அவரை உருகி உருகி காதலித்து கடந்த ஆண்டு தான் கரம்பிடித்தார். இந்த ஜோடிக்கு உயிர், உலகு என இரட்டை ஆண் குழந்தைகளும் உள்ளனர்.
Nayanthara in mumbai
குழந்தை பிறந்த பின்னரும் சினிமாவில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, ஜவான் படம் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார். அட்லீ இயக்கிய இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துள்ளார் நயன். ஜவான் படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
Nayanthara latest photo
இந்நிலையில், ஜவான் படத்தின் வெற்றியை தன் கணவருடன் சென்று மும்பையில் கொண்டாடி இருக்கிறார் நயன். ஜவான் வெற்றிக்கொண்டாட்டம் முடிந்த கையோடு, அவர்கள் இருவரும் மும்பை விமான நிலையம் வந்தபோது எடுக்கப்பட்ட எக்ஸ்குளூசிவ் புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.
இதையும் படியுங்கள்... கட்டிப்புட்ரா... பொத்தி பொத்தி வளர்த்த மகனை முதன்முறையாக வெளியுலகுக்கு காட்டிய அட்லீ - வைரலாகும் கியூட் போட்டோ