விவேக் முதல் மாரிமுத்து வரை... தமிழ் திரையுலகில் தொடரும் மாரடைப்பு மரணங்கள் - இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு?
மரணத்தை என்றுமே கணிக்கமுடியாது என்பதை உணர்த்தும் விதமாக சினிமாவில் நிகழ்ந்த எதிர்பாரா மரணங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
vivek, marimuthu
எதிர்நீச்சல் சீரியல் நடிகர் மாரிமுத்துவின் மரணம் தான் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருள் ஆகி உள்ளது. சீரியலில் வில்லனாக இருந்தாலும், நிஜ வாழ்க்கையில் மிகவும் அன்பானவராக அனைவருடனும் பாசத்தோடு பழகக்கூடியவராக இருந்தவர் மாரிமுத்து. அவருக்கு இப்படி ஒரு நிலைமையா என அனைவருமே அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளனர். மாரிமுத்துபோல் இதற்கு முன் மாரடைப்பால் மரணமடைந்த பிரபலங்களைப் பற்றி பார்க்கலாம்.
விவேக்
தமிழ் திரையுலகில் காமெடி ஜாம்பவானாக திகழ்ந்து வந்தவர் விவேக். பல்வேறு சமூக நலப்பணிகளையும் செய்து வந்த இவர், கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா பரவல் தீவிரமடைந்து வந்த நேரத்தில் தடுப்பூசிக்காக விழிப்புணர்வு ஏற்படுத்திய மறுநாளே மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவரின் மரணம் தமிழ் சினிமாவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக அமைந்தது.
மயில்சாமி
நகைச்சுவை நடிகர் மயில்சாமி கடந்த பிப்ரவரி மாதம் சிவ ராத்திரி பூஜைக்காக விடிய விடிய சிவன் கோவிலில் நடைபெற்ற பஜனையில் கலந்துகொண்டு வீட்டுக்கு செல்லும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இவரும் ஏராளமானோருக்கு சமூக நலப்பணிகளை செய்து நன்மதிப்பை பெற்றவர் ஆவார். இவரது மறைவும் பேரிழப்பாக அமைந்தது.
இதையும் படியுங்கள்... “சாப்பிட காசு இல்ல.. 3 நாட்கள் ஊறுகாய் மட்டும் தான் சாப்பிட்டேன்” மாரிமுத்துவின் பழைய பேட்டி வைரல்
மனோபாலா
நகைச்சுவை நடிகர் மனோபாலா, கடந்த மே மாதம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால மரணமடைந்தார். இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். தன்னுடைய கடைசி நாட்கள் வரை சினிமாவுக்காக அயராத உழைத்த மனோபாலாவின் இழப்பு தமிழ் திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.
மாரிமுத்து
இயக்குனராக எட்ட முடியாத உயரத்தை நடிப்பின் மூலம் எட்டிப்பிடித்து உயர பறந்து கொண்டிருந்தவர் மாரிமுத்து. சின்னத்திரையில் அதிக டிமாண்ட் உள்ள நடிகராக இவர் வலம் வந்துகொண்டிருந்த சமயத்தில் இன்று காலை எதிர்நீச்சல் தொடருக்காக டப்பிங் பேச சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார். தினசரி இல்லத்திரைகளில் பார்த்த ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளது ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கி உள்ளது.
இதையும் படியுங்கள்... Marimuthu Passed Away: "எம்மா.. ஏய்.." என்ற உன் வசனத்தில் சிறைபட்டவன் நான்.. கலங்கி நிற்கின்றேன்.. ஜெ. நிழல்.!