இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

07:43 AM (IST) Jun 06
பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் கோவில் திருவிழாக்களுக்கு மக்கள் அதிகளவில் செல்வது நாகரீகமற்றது என்று கூறியதற்கு அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
12:07 AM (IST) Jun 06
10:52 PM (IST) Jun 05
SSC 2025 வேலைவாய்ப்பு அறிவிப்பு! இந்தியா முழுவதும் 2423 மத்திய அரசு காலிப்பணியிடங்கள். 10, 12, பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கடைசி தேதி: ஜூன் 23, 2025.
10:43 PM (IST) Jun 05
இந்திய விமான நிலையத்தில் 396 காலியிடங்கள் அறிவிப்பு! செக்யூரிட்டி ஸ்கிரீனர், அசிஸ்டன்ட் செக்யூரிட்டி பதவிகளுக்கு 12வது தேர்ச்சி போதும். சம்பளம் ரூ.30,000 வரை. உடனே விண்ணப்பியுங்கள்!
10:36 PM (IST) Jun 05
பெருங்கடல் வாழ்வாதாரம், காலநிலை, பொருளாதாரத்தை ஆதரிக்கிறது. ஆனால் காலநிலை மாற்றம் சிறு தீவு நாடுகளையும் உலக ஸ்திரத்தன்மையையும் அச்சுறுத்துகிறது. கடலைப் பாதுகாப்பது அவசியம்.
10:27 PM (IST) Jun 05
கூகிள் ஜிமெயிலுக்காக ஒரு புதிய AI அமைப்பை உருவாக்கி வருகிறது. இது உங்கள் இமெயில்களை தானியங்குபடுத்தும், உங்கள் பாணியிலேயே பதிலளிக்கும், முக்கிய இமெயில்களை அடையாளம் காட்டும்.
10:19 PM (IST) Jun 05
பணியிட மோதல்களை மரியாதையுடன் கையாள்வது இணக்கமான மற்றும் உற்பத்தி சூழலை உருவாக்குகிறது. அமைதியாக இருப்பதன் மூலம், தீவிரமாகக் கேட்பதன் மூலம் மற்றும் தீர்வுகளை வழங்குவதன் மூலம், நீங்கள் முரட்டுத்தனமாக இல்லாமல் சவால்களைத் தீர்க்க முடியும்.
10:02 PM (IST) Jun 05
வாட்ஸ்அப் பயனர்கள் தனிப்பயனாக்கப்பட்ட AI சாட்போட்களை உருவாக்கும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது. உங்கள் தேவைக்கேற்ப சாட்போட்டின் ஆளுமை, தோற்றம் மற்றும் நோக்கத்தை வடிவமைக்கவும்.
09:59 PM (IST) Jun 05
உலகில் அதிக மரணத்தை ஏற்படுத்தும் நோய்களில் இதய நோய் முதன்மையானது. நவீன வாழ்க்கை முறையில் உட்கார்ந்தே பணிபுரிவதால் இந்நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது.
09:56 PM (IST) Jun 05
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் எதிர்காலம், இளம் வீரர்களின் எழுச்சி, அணிகளின் சவால்கள் மற்றும் T20 உலகக் கோப்பைக்கான தேர்வு குறித்து கும்ப்ளே எடுத்துரைத்தார்.
09:51 PM (IST) Jun 05
தட்கல் டிக்கெட் முன்பதிவு விதிகளில் ரயில்வே மாற்றம் செய்துள்ளது. இப்போது தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன்பு இ-ஆதார் சரிபார்ப்பு அவசியம். இதனால் பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் கிடைப்பது எளிதாகும், முகவர்களின் மோசடி தடுக்கப்படும்.
09:34 PM (IST) Jun 05
மஹிந்திராவின் XUV.e9 மற்றும் BE.6 மின்சார SUVகள் 70 நாட்களில் 10,000 புக்கிங்ஸ்களை எட்டியுள்ளன. ஏப்ரல் மாதத்தில் மட்டும் 3,000 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன.
09:11 PM (IST) Jun 05
ஜிம்பாப்வேயில் அதிகரித்து வரும் யானைகள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த டஜன் கணக்கான யானைகளைக் கொன்று, அவற்றின் இறைச்சியை மக்களுக்கு உணவாக வழங்க ஜிம்பாப்வே வனவிலங்கு ஆணையம் திட்டமிட்டுள்ளது.
08:35 PM (IST) Jun 05
07:43 PM (IST) Jun 05
07:21 PM (IST) Jun 05
ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் கடந்த நிதியாண்டில் 1.36 கோடி மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்துள்ளது. நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
07:08 PM (IST) Jun 05
06:29 PM (IST) Jun 05
மழைக்காலத்தில் அடிக்கடி சரும பிரச்சனைகள் ஏற்படும். சில எளிமையான முறைகளை பின்பற்றி வந்தாலே மழைக்காலத்தில் பொதுவாக வரக் கூடிய சருமப் பிரச்சனையில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியும். மழைக்காலத்தில் என்ன செய்யலாம் என தெரிந்து கொள்ளலாம்.
06:13 PM (IST) Jun 05
மாம்பழங்களை நறுக்கி வைத்தால் சிறிது நேரத்திலேயே அவைகள் கருப்பு நிறமாக மாறி விடும். ஆனால் அப்படி ஆகாமல் நீண்ட நேரம் ஆனாலும் ஃபிரஷாக இருப்பதற்கு எளிமையான 5 டிப்ஸ்களை பின்பற்றி பாருங்க. இந்த டிப்ஸ் நிச்சயம் பெண்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
06:10 PM (IST) Jun 05
1xBet இன் 1xGames பிரிவு அதன் எளிமையான மற்றும் அணுகக்கூடிய கேம்களால் பிரபலமடைந்து வருகிறது, Crash, Crystal, மற்றும் பிற பிரபலமான விருப்பங்கள் இந்தியாவில் வீரர்களை ஈர்க்கின்றன.
06:01 PM (IST) Jun 05
உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என நினைத்து நாம் சில உணவுகளை கண்டிப்பாக தவிர்ப்பது உண்டு. ஆனால் சில டிரிக்கான விஷயங்களை கையாண்டால் ஆரோக்கியமற்ற உணவுகளையும் ஆரோக்கியம் தரக் கூடியதாக மாற்றி விடலாம். எந்த உணவை எப்படி மாற்றலாம்?வாங்க பார்க்கலாம்.
05:52 PM (IST) Jun 05
பருவ மழை பெய்ய துவங்கி விட்டது. இந்த சமயத்தில் அவசரமாக வெளியில் சென்று மழையில் மாட்டிக் கொண்டு நன்றாக நனைந்து விட்டீர்கள் என்றால் வீட்டிற்கு சென்றதும் முதல் வேலையாக கீழே சொல்லப்பட்ட 10 விஷயங்களை எப்போதும் செய்ய மறந்துடாதீங்க.
05:36 PM (IST) Jun 05
05:20 PM (IST) Jun 05
பிஎஸ்என்எல் ஏர்டெல், ஜியோவை ஓவர்டேக் செய்யும் வகையில் ரூ.599 பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பிளான் குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.
05:15 PM (IST) Jun 05
விஜய் டிவி நடிகர் புகழ் கதாநாயகனாக நடித்துள்ள ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
05:09 PM (IST) Jun 05
அதிக அளவில் இனிப்பு சாப்பிட்டு வந்தால் அது தோல்களில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி, மிக விரைவவிலேயே உங்களுக்கு வயதான தோற்றத்தை தந்து விடுமாம். சுகர் சாப்பிட்டால் எப்படி வயதான தோற்றம் வரும் என்ற காரணத்தை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிங்க.
05:01 PM (IST) Jun 05
ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தின் போது 11 ரசிகர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை. கூட்ட நெரிசல் காரணமாக ஏற்பட்ட இந்த துயர சம்பவம் குறித்து அரசுக்கு பல கேள்விகளை நீதிமன்றம் எழுப்பியுள்ளது.
04:49 PM (IST) Jun 05
தன் இளைய மகள் மணிரத்னம் இயக்கிய ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியது குறித்து குஷ்பு நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
04:28 PM (IST) Jun 05
திருவள்ளூரில் சிக்கன் ஃப்ரைட் ரைஸ் சாப்பிட்ட சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். வாந்தி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
04:06 PM (IST) Jun 05
சீதாப்பழம் அதன் தனித்துவமான சுவை மற்றும் மருத்துவ குணங்களுக்காக அறியப்படுகிறது. தமிழகத்தில் குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சீதாப்பழ சாகுபடி விவசாயிகளுக்கு லாபகரமான தொழிலாக உள்ளது. சீத்தா மரத்தின் இலைகள் இயற்கை பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுகின்றன
03:56 PM (IST) Jun 05
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
03:40 PM (IST) Jun 05
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாத 32 மெட்ரோ ரயில்களை தயாரிக்க Alstom Transport India நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. சோதனை ஓட்டங்களுக்குப் பிறகு, 2028-ல் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும்.
03:29 PM (IST) Jun 05
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சின்ன மருமகள்’ சீரியல் தொடர் தற்போது ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
03:29 PM (IST) Jun 05
கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் ஒருவர் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர் என்பதையும் அவர் குறிப்பிட்டார். மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் விமர்சித்தார்.
03:26 PM (IST) Jun 05
இந்தியா AMCA எனப்படும் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத்தை சோதனை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
03:22 PM (IST) Jun 05
03:05 PM (IST) Jun 05
வீட்டுக் கடன் EMI கட்டத் தவறினால் வங்கிகள் அபராதம் விதிக்கலாம். தொடர்ந்து மூன்று மாதம் தவணை கட்டவில்லை எனில், வங்கியானது சட்ட நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கும்.
02:53 PM (IST) Jun 05
லைகா நிறுவனத்திற்கு ரூ.21 கோடியை 30% வட்டியுடன் கட்டுமாறு நடிகர் விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
02:21 PM (IST) Jun 05
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணத்தை உயர்த்திய நிலையில் அதற்கான அரசாணை வெளியாகியுள்ளது.
02:21 PM (IST) Jun 05
விஜய் டிவியில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வந்த சிறகடிக்க ஆசை சீரியல் இந்த வார டிஆர்பி ரேஸில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது.