ஜிம்பாப்வேயில் அதிகரித்து வரும் யானைகள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த டஜன் கணக்கான யானைகளைக் கொன்று, அவற்றின் இறைச்சியை மக்களுக்கு உணவாக வழங்க ஜிம்பாப்வே வனவிலங்கு ஆணையம் திட்டமிட்டுள்ளது.

உச்சத்தை தொட்ட காட்டு யானை எண்ணிக்கை : காடு வளமாக இருப்பதற்கு யானைகளின் பங்கு முக்கியமானதாகும். அதுவே அதிகளவு யானைகள் இருந்தால் ஊருக்குள் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் சூழல் உருவாகும். இந்த நிலையில் அதிகரித்து வரும் ஆனை எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த ஜிம்பாப்வே நாட்டில் டஜன் கணக்கான யானைகளைக் கொன்று, அவற்றின் இறைச்சியை மக்களுக்கு உணவாக வழங்கத் திட்டமிட்டுள்ளதாக ஜிம்பாப்வே வனவிலங்கு ஆணையம் தெரிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்த நாடு, போட்ஸ்வானாவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய யானை எண்ணிக்கையைக் கொண்டுள்ளது.

50 யானைகளை சுட்டுக்கொல்ல முடிவு

 தொடக்கத்தில் 50 யானைகளை இலக்காகக் கொள்ளப்படும் என்று ஜிம்பாப்வே பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு ஆணையம் (Zimparks) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மொத்தம் எத்தனை யானைகள் கொல்லப்படும் அல்லது எவ்வளவு காலத்திற்குள் கொல்லப்படும் என்பது குறிப்பிடப்படவில்லை.

2024 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட வான்வழி கணக்கெடுப்பு, சேவ் வேலி கன்சர்வேன்சி என்ற காப்பகத்தில் 2,550 ஆனைகள் இருப்பதாகக் காட்டுகிறது, ஆனால் இந்த காட்டில் 800 யானைகளைத் தாங்கும் திறனை மட்டுமஏ கொண்டுள்ளது. தற்போது காட்டிலும் மூன்று மடங்கு அதிகம் என்று Zimparks தெரிவித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் குறைந்தது 200 ஆனைகள் மற்ற பூங்காக்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

யானைகள் கொல்ல காரணம் என்ன.? 

யானைகளை சுட்டுக்கொல்லும் நடவடிக்கையில் பெறப்படும் யானை இறைச்சி உள்ளூர் மக்களுக்கு விநியோகிக்கப்படும், ஆனால் தந்தங்கள் அரசாங்கத்தின் சொத்தாகும், அவை பாதுகாப்பிற்காக Zimparks-க்கு ஒப்படைக்கப்படும்" என்று அது கூறியது. 2024 ஆம் ஆண்டில், ஜிம்பாப்வே கடுமையான வறட்சியை எதிர்கொண்டபோது, உணவுப் பற்றாக்குறை காரணமாக 200 யானைகள் கொல்லப்பட்டன. 1988 க்குப் பிறகு ஜிம்பாப்வே இவ்வளவு பெரிய அளவில் யானைகளைக் கொன்றது இதுவே முதல் முறை. உணவிற்காக யானைகளை வேட்டையாடுவது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது, குறிப்பாக இந்த விலங்குகள் சுற்றுலாவின் முக்கிய ஈர்ப்பாக இருப்பதால் இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.