MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னையை கலக்கப்போகுது ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்.! 1,538 கோடி ஒப்பந்தம் - வெளியான அசத்தல் அறிவிப்பு

சென்னையை கலக்கப்போகுது ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்.! 1,538 கோடி ஒப்பந்தம் - வெளியான அசத்தல் அறிவிப்பு

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாத 32 மெட்ரோ ரயில்களை தயாரிக்க Alstom Transport India நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. சோதனை ஓட்டங்களுக்குப் பிறகு, 2028-ல் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும்.

2 Min read
Author : Ajmal Khan
Published : Jun 05 2025, 03:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சென்னையை கலக்கும் மெட்ரோ ரயில் சேவை
Image Credit : our own

சென்னையை கலக்கும் மெட்ரோ ரயில் சேவை

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பொதுமக்களை வெகுவாக ஈர்த்துள்ளது. ஆரம்பத்தில் மெட்ரோ ரயிலில் கூட்டம் இல்லாத நிலை நீடித்த நிலையில் தற்போது மெட்ரோ ரயிலில் கூட்டமானது அதிகரித்து வருகிறது. இதனையடுத்து சென்னையில் பல்வேறு இடங்களை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வேகமாக பயணிக்க முடிகிறது.

 இந்த நிலையில் வளர்ந்த வரும் நவீன தொழில்நுட்பமானது மெட்ரோ ரயில் சேவையிலும பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் திட்டமானது சென்னையில் ஏற்கனவே சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது. இது வெற்றிகரமாக முடிந்ததையடுத்து புதிதாக ஆளில்லா மெட்ரோ ரயில் பெட்டி தயாரிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

24
ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்
Image Credit : our own

ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், இரண்டாம் கட்ட திட்டத்தில் ஒட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 இரயில் பெட்டிகளை கொண்ட 32 மெட்ரோ இரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் Alstom Transport India நிறுவனத்திற்கு ரூ. 1,538.35 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. 

இதற்கான ஏற்பு கடிதம் (LOA) 28.04.2025 அன்று Alstom Transport India நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பாக இயக்குநர் திரு. மனோஜ் கோயல் (அமைப்புகள் மற்றும் இயக்கம்) மற்றும் Alstom Transport India நிறுவனத்தின் இயக்குநர் திரு.பராக் நந்தலால் கோஹெல் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

Related Articles

Related image1
Chennai Metro: அசத்தல் அறிவிப்பு.. இனி மெட்ரோ இரயிலில் பயணிப்பவர்களுக்கு ஜாலி தான்.. வருகிறது புதிய வசதி..
Related image2
metro chennai: L&T: சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிக்கு L&T நிறுவனம் ஒப்பந்தம்
34
Alstom Transport India நிறுவனத்திற்கு ரூ. 1,538.35 கோடி ஒப்பந்தம்
Image Credit : our own

Alstom Transport India நிறுவனத்திற்கு ரூ. 1,538.35 கோடி ஒப்பந்தம்

இந்த ஒப்பந்தத்தில், வடிவமைப்பு, உற்பத்தி, வழங்கல், சோதனை, ஆணையிடுதல் பணியாளர்களுக்கான பயிற்சி மெட்ரோ இரயில் மற்றும் பணிமனை இயந்திரங்களுக்கு 15 ஆண்டுகள் முழுமையான பராமரிப்பு உள்ளிட்ட ஒட்டுனர் இல்லாத மெட்ரோ இரயில்களை வழங்குதல் போன்றவை உள்ளடங்கும்.

இந்த ஒப்பந்ததின் கீழ் முதல் மெட்ரோ இரயில் 2027-ஆம் ஆண்டு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். அதைத் தொடர்ந்து 14 மாதங்களுக்கு கடுமையான பாதைகள் மற்றும் ஓட்டுநர் இல்லாத இரயில் இயக்கத்திற்கான சோதனைகள் நடத்தப்படும் இதில் பிற அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பு சோதனை மற்றும் சேவை சோதனைகள் அடங்கும்.

44
ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ இரயில்
Image Credit : our own

ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ இரயில்

அதன்பின் மீதமுள்ள அனைத்து மெட்ரோ இரயில்களும் செப்டம்பர் 2027 முதல் மே 2028 வரை ஒவ்வொரு கட்டமாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். Alstom Transport India நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மேற்கண்ட ஒப்பந்தம், இரண்டாம் கட்ட திட்டத்திற்கான ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ இரயில்களை கொள்முதல் செய்வதற்கான மூன்றாவது மற்றும் இறுதி ஒப்பந்தமாகும். முதல் இரண்டு ஒப்பந்தங்கள் முன்பே வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
சென்னை
சென்னை மெட்ரோ
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
தமிழக அரசியலில் ட்விஸ்ட்.. புதிய கட்சி தொடங்கினார் சசிகலா.. எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடி!
Recommended image2
26 வயது அபிராமி இருந்த அந்த கோலம்! நேரில் பார்த்த கணவருக்கு நடந்த அதிர்ச்சி.! போலீஸ் விசாரணையில் பகீர்!
Recommended image3
21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!
Related Stories
Recommended image1
Chennai Metro: அசத்தல் அறிவிப்பு.. இனி மெட்ரோ இரயிலில் பயணிப்பவர்களுக்கு ஜாலி தான்.. வருகிறது புதிய வசதி..
Recommended image2
metro chennai: L&T: சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிக்கு L&T நிறுவனம் ஒப்பந்தம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved