metro chennai: L&T: சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிக்கு L&T நிறுவனம் ஒப்பந்தம்
metro chennai: L&T: சென்னையில் மேற்கொள்ளப்பட்டுவரும் மெட் ரயில் திட்டத்துக்கு லார்சன் அன்ட் டூப்ரோ (L&T) நிறுவநம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மேற்கொள்ளப்பட்டுவரும் மெட் ரயில் திட்டத்துக்கு லார்சன் அன்ட் டூப்ரோ (L&T) நிறுவநம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனத்துக்கு ரூ.1000 கோடி முதல் ரூ.2,500 கோடி முதலான திட்டப்பணிகள் சென்னை மெட்ரோ ரயில் பணியில் வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து எல்அன்ட்டி நிறுவனம் வெளியிட்டஅறிவிப்பில், “ சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் குறிப்பிடத்தகுந்த அளவில் ஒப்பந்தப் பணிகள் லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனத்துக்கு கிடைத்துள்ளன” எனத் தெரிவித்துள்ளது.
இந்த ஆர்டரைப் பெரும்பாலும் மேம்பாலங்கள் அமைப்பது தொடர்பாக லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய 10 கி.மீ நீளத்துக்கு 10 மெட்ரோ ரயில் நிலையங்களில் உயர் நடைபாதைகள் அமைக்கப்பட உள்ளன. சென்னையில் நேரு நகர், கந்தன்சாவடி, பெருங்குடி, துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பிடிசி காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம், ஒக்கியம் துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் உயர் நடைபாதை அமைக்கப்படஉள்ளன.
மேம்பாலம் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நிறைவடைவதற்கு ஏறக்குறைய 35 மாதங்கள் அதாவது இரண்டைஆண்டுகளுக்கு மேல் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டப்பணியில் ஏற்கெனவே லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனத்துக்கு ஒப்பந்தப்பணிகள் வழங்கப்பட்டுள்ளன.சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் 2-ம் நிலையில் சுரங்கப்பாதை அமைப்பது, 3 மேம்பாலங்கள் அமைக்கும் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் திட்டம் முதல் கட்டத் திட்டத்திலும் லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனத்துக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது