MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • வீட்டுக் கடன் EMI கட்டத் தவறினால் என்ன ஆகும்?

வீட்டுக் கடன் EMI கட்டத் தவறினால் என்ன ஆகும்?

வீட்டுக் கடன் EMI கட்டத் தவறினால் வங்கிகள் அபராதம் விதிக்கலாம். தொடர்ந்து மூன்று மாதம் தவணை கட்டவில்லை எனில், வங்கியானது சட்ட நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கும். 

4 Min read
Vedarethinam Ramalingam
Published : Jun 05 2025, 03:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
114
வீட்டுக்கடன் இஎம்ஐ க்கு எவ்வளவு அபராதம்?
Image Credit : our own

வீட்டுக்கடன் இஎம்ஐ-க்கு எவ்வளவு அபராதம்?

எதையும் சமாளித்துவிடலாம் என்று வீட்டுக்கடன் வாங்கும் பலருக்கும் எவ்வளவு திட்டமிட்டாலும் சிலசமயங்களில் இஎம்ஐ -யை கட்ட முடியாமல் தள்ளி போகும் சூழல் ஏற்படும். அப்படி இஎம்ஐ கட்டுவதற்கு தவறும் பட்சத்தில் வங்கிகள் அபராதத்தை விதிக்கும் சூழல் ஏற்படலாம். கொஞ்சம் திட்டமிட்டால் அந்த சூழலை தள்ளிப்போடலாம் என்கின்றனர் சந்தை நிபுணர்கள்.வீட்டுக் கடனுக்கான தவணையை தாமதமாகக் கட்டு வதற்கான அபராதம் என்பது மாதத் தவணையில் 1 - 2 சதவிகிதமாக இருக்கும். இதுவும் மாதத் தவணைத் தொகையுடன் சேர்க்கப்பட்டு இருக்கும்.

214
மூன்றாவது தவணையில் இருந்து துவங்கும் சிக்கல்
Image Credit : our own

மூன்றாவது தவணையில் இருந்து துவங்கும் சிக்கல்

முதல் தவணை கட்டாத நிலையில், இரண்டாவது தவணையும் தவறினால், உங்களின் நிதி நிலையை அனுசரித்து தவணைக்கான பணம் கட்ட ஓரிரு வாரம் கால அவகாசம் அளிக்கப்படலாம். அதற்குள் இரு தவணை பாக்கி மற்றும் அபராத்தைக் கட்டிவிட்டால், வீட்டுக் கடன் சிக்கல் எதுவும் இல்லாமல் வழக்கம்போல் தொடரும்.தொடர்ந்து மூன்று மாதம் தவணை கட்டவில்லை எனில், வங்கியானது சட்டப் படியான நடவடிக்கைகளை (Legal Proceedings) எடுக்கத் தொடங்கும்.

Related Articles

Related image1
PPF vs SIP: எது சிறந்த முதலீடு?
Related image2
NSC: ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் ரூ.7.24 லட்சம் வருமானம்! இது தெரியாம போச்சே!
314
90 நாட்கள் நோட்டீஸ் காலம்
Image Credit : our own

90 நாட்கள் நோட்டீஸ் காலம்

90 நாள்கள் அல்லது மூன்று தவணைகளுக்குமேல் ஒருவர் தொடர்ந்து வீட்டுக் கடனைக் கட்டதாபட்சத்தில் அந்தக் கடன் வாராக்கடனாக (Non Performing Asset -NPA) மாற்றப்படும். பின்னர் அந்த வீட்டை வங்கி அதன் பொறுப்பில் எடுத்துக் கொள்ளும்; ஏலத்துக்கு விட்டு, மொத்தக் கடன் தொகையைக் கழித்துக்கொண்டு, மீதித் தொகை இருந்தால், வீட்டுக் கடன் வாங்கியவருக்குத் தரும்.

414
ஆறு மாதத்திற்குள் வீட்டை மீட்க வாய்ப்பு
Image Credit : our own

ஆறு மாதத்திற்குள் வீட்டை மீட்க வாய்ப்பு

வங்கிகளோ, வீட்டுவசதி நிறுவனங்களோ வீட்டை அதன் பொறுப்பில் எடுக்கப் போகிறது எனில், முன்கூட்டியே அறிவிப்பை (Notice) வெளியிடும். இதே போல, வீட்டை ஏலம் விடப் போகும் விஷயத்தையும் முன்கூட்டியே வீட்டுக் கடன் வாங்கியவருக்கு முறையாக தெரிவிக்கும். வாராக் கடனாக மாறிய பிறகு 60 நாள்கள் அவகாசம் தரும். வீட்டை ஏலம் விடுவதற்கான நடவடிக் கைகள் சுமார் 30 நாள்கள் நடக்கும். ஆக மொத்தம், முதல் தவணை தவறியதிலிருந்து ஆறு மாதக் காலத்துக்குப் பிறகுதான் வீடு ஏலத்துக்கு வரும். அதற்குமுன் எப்போது வேண்டுமானாலும் ஒருவர் அவரின் வீட்டை மீட்கலாம்.

514
மூன்றாம் தரம்பு ஏஜென்டுகள் தலையீடு
Image Credit : our own

மூன்றாம் தரம்பு ஏஜென்டுகள் தலையீடு

வீட்டுக் கடன் இரண்டு மாதம் கட்டவில்லை எனில், கடன் வழங்கிய நிறுவனங்கள் மூன்றாம் தரம்பு ஏஜென்டுகள் (Third-Party Agents) மூலம் கடனை வசூலிக்க முயற்சி செய்ய வாய்ப்புள்ளது. வீட்டுக் கடன் வாங்கியவர், அதே வங்கியில் வேறு ஏதாவது கடன் வாங்கி அதைச் சரியாகச் செலுத்தி வந்தாலும், அதுவும் வாராக்கடன் பட்டியலில் வரவு வைக்கப்படும் . அதனை தவிர்க்க வீட்டுக் கடனை வாராக்கடனாக மாறாமல் பார்த்துகொள்வது மிக முக்கியமாகும்.

614
கடனை வசூலிக்கவே வங்கி விரும்பும்
Image Credit : our own

கடனை வசூலிக்கவே வங்கி விரும்பும்

நிதி நிறுவனங்களோ வங்கிகளோ சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் முன், கடன் தொகையை எப்படியாவது வசூலிக்க முடியுமா என்பதில்தான் குறியாக இருக்கும். வீட்டை ஏலத்தில் விடுவதற்கு நீண்ட காலம் எடுத்துகொள்ளும். தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடனை வசூலித்துக் கொடுக்கும் ஏஜென்டுகள்மூலம் நெருக்கடி தந்து கடனை வசூலிக்க முயலும். அதன் பின்பே சட்டப்படியான நடவடிக்கைகளுக்குச் செல்லும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

714
கடன் பெற்றோர் உரிமைகள்
Image Credit : PR

கடன் பெற்றோர் உரிமைகள்

கடன் வசூலிக்கும் தனியார் ஏஜென்டுகள் நெருக்கடி கொடுக்கும் போது கடன் வாங்கியவர்களுக்கு சில உரிமைகள் இருக்கின்றன. கடனை வசூலிக்க வருபவர்கள் யார் என்பதை அவர்களின் அடையாள அட்டையைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். சரியான நபர்கள்தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் கடன் வாங்கிய வங்கி அதிகாரிகளிடம் உறுதிப்படுத்திக்கொள்வது அவசியம்.

814
ஏஜென்டுகளிடம் பணம் தராமல் இருப்பது நல்லது
Image Credit : ANI

ஏஜென்டுகளிடம் பணம் தராமல் இருப்பது நல்லது

கடனை மீண்டும் தொடர்ந்து கட்டுவதாக இருந்தால் எந்த காரணம் கொண்டும் ஏஜென்டுகளிடம் பணம் தராமல் இருப்பது நல்லது. ஒருவர் வாங்கிய கடன் குறித்த விவரங்களை வங்கி நிர்வாகம் தொடர்பில்லாத மூன்றாம் நபருடன் பகிரக் கூடாது என்பது விதிமுறை. வங்கி ஒருவரின் கடன் விவரங்கள் பற்றி மூன்றாம் நபர்களிடம் தெரிவித்திருந்தால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கடன் பெற்றவர் களுக்கு உரிமை உண்டு.

914
கடன் வாங்கியவர்களும் நீதிமன்றத்தை நாடலாம்
Image Credit : Getty

கடன் வாங்கியவர்களும் நீதிமன்றத்தை நாடலாம்

கடன் வசூலிப்போர் கடன் வாங்கியவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் கெளரவ மாகவும் நாகரிகமாகவும் நடந்துகொள்வது கட்டாயம். அதுவும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரையில் மட்டுமே கடன் வாங்கியவர் களைக் கடன் வசூலிக்கும் அதிகாரிகள் அணுக வேண்டும். அதை மீறினால், நீதிமன்றத்தில் ஆதாரங்களை சமர்ப்பித்து அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கலாம்.

1014
மேலாளரை அணுகி நிலைமையை சொல்வது நல்லது
Image Credit : ANI

மேலாளரை அணுகி நிலைமையை சொல்வது நல்லது

தொடர்ந்து மூன்று மாதத் துக்குமேல் வீட்டுக் கடன் தவணையைச் சரியாகக் கட்ட முடியாத சூழ்நிலை ஏற்படும் என முன்பே தெரிந்தால், முன்கூட்டியே வங்கி / வீட்டு வசதி நிறுவனம், நிதி நிறுவனத்தின் மேலாளரை அணுகி, நிலைமையை விளக்கிச் சொல்வது நல்லது.இதனால், சில மாதங்களுக்கு மாதத் தவணைகள் கட்டுவ தில் இருந்து விலக்கு அளிக்கலாம். தேவைப்படும் பட்சத்தில் கடன் காலத்தை அதிகரித்து, மாதத் தவணையைக் குறைக்க முடியும். அதிக சம்பளத்தில் இருக்கும் ஒருவர் ஏதோ ஒரு சிக்கல் காரணமாக வேறு குறைவான சம்பள வேலைக்கு மாறக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டால், கடன் காலத்தை அதிகரித்து கடனை மாற்றி அமைக்க (Restructuring Loan) முடியும்.

1114
 வீட்டுக் கடன் வாங்கியவரே அவரின் வீட்டை விற்க ஏற்பாடு செய்யலாம்
Image Credit : our own

வீட்டுக் கடன் வாங்கியவரே அவரின் வீட்டை விற்க ஏற்பாடு செய்யலாம்

உதாரணமாக, 30 வயதுள்ள ஒருவர் 15 வருடத்தில் கடனை அடைப்பதாக அதாவது, அவரின் 45 வயது வரை கடன் கட்டுவதாக வீட்டுக் கடன் வாங்கியிருப்பதாக வைத்துக்கொள்வோம். கடன் ஐந்து வருடங்கள் கட்டப் பட்ட நிலையில் தற்போதுள்ள அளவுக்கு அதிக மாதத் தவணையை அவரால் கட்ட முடியவில்லை எனில், கடனை அவரின் 50 வயது வரைக்கும் கட்டும்படி கடன் காலத்தை நீட்டித்துக் கொள்ள முடியும். அப்போது மாதத் தவணை குறையும். சம்பளம் குறைந்திருக்கும் நிலையில், கடன் தவணையும் குறையும்போது நிலைமையை சமாளித்து மீண்டுவர முடியும்.750-க்குமேல் நல்ல கிரெடிட் ஸ்கோர் இருந்து, இதற்கு முன் இதுபோன்று தவணை தவறவில்லை எனில், வங்கிகள், கடன் காலத்தை நிச்சயம் நீட்டித்துத் தரும். ஏலம் விடும்பட்சத்தில் குறைவான தொகைக்குப் போகும் சூழ்நிலை இருந்தால், வங்கியின் ஒப்புதலுடன் வீட்டுக் கடன் வாங்கியவரே அவரின் வீட்டை விற்க ஏற்பாடு செய்யலாம். வீட்டை வாங்குபவர் பாக்கிக் கடனைக் கட்டும்பட்சத்தில் கடன் பாக்கி போக கணிசமான தொகை கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

1214
சம்பளத்தில் கடன் தவணை 40% இருக்க வேண்டும்
Image Credit : our own

சம்பளத்தில் கடன் தவணை 40% இருக்க வேண்டும்

சிலர், சில முறை மாதத் தவணையைத் தாமதமாகக் கட்டி, பின்னர் அதையே பழக்கமாக்கிக் கொள்கிறார்கள். இதனால் ஏற்படும் பின்விளைவுகளை அவர்கள் நினைத்துப் பார்ப்ப தில்லை. இப்படி தொடர்ந்து தாமதமாக இ.எம்.ஐ கட்டிவரும் நிலையில், கிரெடிட் ஸ்கோர் மிகவும் குறையும்; இதனால் எதிர்காலத்தில் எந்தக் கடனும் வாங்க முடியாது. மேலும், இ.எம்.ஐ தாமதக் கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி இருக்கிறது.தவணை கட்டுவதில் சிக்கலைத் தவிர்க்க, வீட்டுக்கு எடுத்து வரும் சம்பளத்தில் கடன் தவணை 40 சதவிகிதத்தைத் தாண்டாமல் பார்த்துக்கொள்வது கட்டாயமாகும். மேலும், குறைந்தபட்சம் ஒரு மாத இ.எம்.ஐ தொகை வங்கிக் கணக்கில் எப்போதும் கூடுதலாக வைத்துக்கொள்வது அவசியம்.

1314
கிரெடிட் ஸ்கோர் குறைய வாய்ப்பு
Image Credit : our own

கிரெடிட் ஸ்கோர் குறைய வாய்ப்பு

90 நாள்களுக்கு மேல் மாதத் தவணையைக் கட்டவில்லை எனில், கடன் வழங்கிய நிறுவனம் இந்த விவரத்தைக் கடன் அமைப்புகளுக்கு (credit bureaus) அனுப்புகின்றன. இந்த விவரம் ஒருவரின் கடன் அறிக்கையில் என்.பி.ஏ (Non-performing Asset) எனக் குறிக்கப்பட்டிருக்கும். இதைத் தொடர்ந்து கிரெடிட் ஸ்கோர் உடனே வெகுவாகக் குறையும்; எதிர்காலத்தில் வேறு எந்தக் கடனும் வாங்க முடியாத நிலை உருவாகும்.

1414
சேமிப்பே சிறந்த முதலீடு
Image Credit : Social Media

சேமிப்பே சிறந்த முதலீடு

கடன் வாங்கும் முன், முதலீட்டை ஆரம்பிக்கும் முன் ஒருவர் அவரின் மாதச் செலவுகளைப் போல் குறைந்தது 3 முதல் 6 மடங்கு தொகையை அவசர கால நிதியாகச் சேர்த்து வைக்க வேண்டும் என நிதி நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள். ஆறு மாதச் செலவு தொகையைச் சேர்த்து வைக்கும் போது திடீர் உடல் நலக்குறைவு, வேலை இழப்பு போன்றவற்றின்போது குடும்பச் செலவுகள் மற்றும் கடன் தவணைகளைச் சுலபமாக மேற்கொண்டு நிலைமையை சுமுகமாக சமாளிக்க முடியும். இது வரைக்கும் அவசரகால நிதியை சேர்ந்த்து வைக்க வில்லை எனில், இனி கண்டிப்பாக சேர்த்து வையுங்கள்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
கடன்
தனிநபர் நிதி
தனிப்பட்ட வளர்ச்சி
வணிகம்
முதலீடு
வணிக யோசனை

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved