NSC: ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் ரூ.7.24 லட்சம் வருமானம்! இது தெரியாம போச்சே!
தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC) என்பது குறைந்தபட்ச அபாயத்துடன் கூடிய சிறந்த முதலீட்டு வாய்ப்பாகும். வருமான வரிச் சட்ட பிரிவு 80 சி கீழ் வருமான வரி விலக்கும் வழங்கப்படுகிறது. இது அனைவருக்கும் ஏற்ற பாதுகாப்பான முதலீட்டுத் திட்டமாகும்.

இத்தனை நன்மைகளா?
நமது நாட்டில், பொதுமக்கள் அதிகபட்சம் முதலீடு செய்யும் இடங்களில் அசைக்க முடியாத நம்பிக்கையை பெற்றிருக்கிறது அஞ்சல் சேமிப்பு திட்டங்கள் (Post Office Savings Schemes). அந்த வரிசையில், நேஷனல் சேவிங்ஸ் சர்டிபிகேட் (NSC) என்பது பல ஆண்டுகளாக இந்தியர்களின் நம்பிக்கையை வென்றுகொண்டிருக்கும் குறைந்தபட்ச அபாயத்துடன் கூடிய ஒரு சிறந்த முதலீட்டு வாய்ப்பாகும். இந்த திட்டத்தை , ஒருவர் எந்த ஒரு வங்கியிலோ அல்லது தபால் நிலையத்திலோ எளிதாகத் திறக்கலாம். இதன் முதன்மை நோக்கம் என்பது, சிறிய மற்றும் நடுத்தர வருவாய் முதலீட்டாளர்களை, முதலீடு செய்ய வைப்பது தான்.
அனைவருக்கும் ஏற்ற திட்டம்
வருவமான வரி பிரிவு 80C இன் கீழ் வருமான வரி விலக்கும் வழங்கப்படுகிறது. பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் தபால் அலுவலக நீண்ட கால வைப்பு நிதிகள் போன்ற சில நிலையான வருமான கருவிகளைப் போல, தேசிய சேமிப்பு சான்றிதழ், உத்தரவாதமான வட்டி மற்றும் முழுமையான மூலதன பாதுகாப்பை வழங்குகிறது. இருப்பினும், வரி சேமிப்பு பரஸ்பர நிதி திட்டங்கள் மற்றும் தேசிய ஓய்வூதிய அமைப்புகள் போல், பணவீக்கத்தை மீறிய வருமானத்தை தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தால் வழங்க முடியாது. பாதுகாப்பான முதலீடு என்பதால் இது அனைவருக்கும் ஏற்ற திட்டமாகும்
நம்பகமான திட்டம்
நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் நம்பகத்தை பெற்ற இத்திட்டத்தை அதிகமானோர் தேர்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. அடிப்படையில், இந்திய தேசிய குடிமக்களுக்கான சேமிப்பு திட்டமாக, தேசிய சேமிப்பு சான்றிதழை அரசு ஊக்குவிக்கிறது. முன்னதாக, அச்சிடப்பட்ட ஒரு பத்திரமாக, என்எஸ்சி சான்றிதழ்களை தபால் அலுவலகங்கள் வழங்கி வந்தன. இந்த நடைமுறை 2016ம் ஆண்டு முதல் மாற்றப்பட்டது. ஒருவரிடம், வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் சேமிப்புக் கணக்கு இருக்கும் பட்சத்தில், இணைய வங்கியை பயன்படுத்தும் நடைமுறை மூலமாக, தேசிய சேமிப்பு சான்றிதழை, இணையம் மூலம் மின்னனு முறையில் வாங்கலாம். இது ஒருவர் தன்னுடைய பெயரிலோ அல்லது, தன்னுடைய குழந்தைகள் பெயரிலோ வாங்க முடியும். சிறு தொகையை சேமிக்க நினைப்போருக்கு இத்திட்டம் கைகொடுக்கும்.
வருமானவரி விலக்கு கண்டிப்பாக உண்டு
தேசிய சேமிப்பு சான்றிதழ்களுக்கு, நிலையான ஆண்டு வட்டி வழங்கப்படுகிறது. இது தற்போது ஆண்டுக்கு 7.7 சதவிதம் என்ற நிலையில் உள்ளது. இருப்பினும் இது மாற்றத்திற்கு உரியது என்பதை கவனத்தில் கொள்வது அவசியம். அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் வரி சேமிப்பு திட்டங்களில், தேசிய சேமிப்பு சான்றிதழ் முதன்மையானது. வருமான வரிச் சட்ட பிரிவு 80 சி கீழ் ஆண்டுக்கு 1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு பெற முடியும். இதில் ஆண்டுக்கு 1.5 லட்சம் முதலீடு செய்யப்படும் நிலையில், அதனை 80 சி-யின் கீழ் கணக்கு காண்பித்து வருமான வரி சலுகையை பெற முடியும்.
மறு முதலீடு செய்யப்படும் வட்டி
சிறு தொகை இருந்தாலே இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். குறைந்தபட்சம் 100 ரூபாய் தொடங்கி அதிகபட்சம் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். NSC சான்றிதழ்களை வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் பெறப்படும் பாதுகாக்கப்பட்ட கடன்களுக்கான பிணையாக ஏற்று கொள்ளப்படுகின்றன. இந்த திட்டம் கூட்டு வட்டி என்ற அடிப்படையில் செயல்படுகிறது. இதில் சம்பாதித்த வட்டி ஆண்டு தோறும் மறு முதலீடு செய்யப்பட்டு, முதிர்வு காலத்தில் ஒட்டுமொத்த தொகையாக வழங்கப்படும்.
டிடிஎஸ் பிடித்தம் இல்லை
இத்திட்டத்தை தேர்வு செய்யும் நபர் தன்னுடைய குழந்தைகள் உட்பட எந்தவொரு குடும்ப உறுப்பினரையும் நாமினியாக பரிந்துரைக்கலாம். இதனால் முதலீட்டாளரின் எதிர்பாராத இறப்பு நிகழும் போது, அவருடைய நாமினி அந்த தொகையை பெற்று கொள்ள முடியும். ஒரு முதலீட்டாளர், இந்த திட்டம் முதிர்ச்சி அடையும் போது, அதில் சேர்ந்து உள்ள, முழு தொகையையும் பெற்று கொள்ளலாம். தேசிய சேமிப்பு சான்றிதழ் மூலம் கிடைக்கும் பணத்திற்கு, டிடிஎஸ் இல்லாததால், சந்தாதாரர் தனது வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் போது, அதற்கு பொருந்தும் வரியை செலுத்த வேண்டும்.
NSC-யின் தற்போதைய நிதி விவரங்கள்
வட்டி வீதம் ஆண்டுக்கு 7.7%
காலாவதி 5 ஆண்டுகள்
வரிவிலக்கு ₹1.5 லட்சம் வரை 80C
அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை
NSC ஐ வங்கியில் அடமானமாக வைத்துப் பணம் பெறலாம்
NSC-யில் ₹5 லட்சம் முதலீடு செய்தால் என்ன கிடைக்கும்?
முதலீடு: ₹5,00,000
ஆண்டுக்கான வட்டி வீதம்: 7.7%
காலம்: 5 ஆண்டுகள்
வட்டி சேர்க்கை: ஆண்டுக்கு ஒருமுறை (compounded annually)
மொத்த பெறுமதி 5 ஆண்டுகள் முடிவில்: ₹7,24,513
முடிவில் கிடைக்கும் இலாபம்: ₹2,24,513
NSC–யை தேர்வு செய்யும் முக்கிய காரணங்கள்
அரசின் முழுமையான நிதி பாதுகாப்பு
சந்தை அபாயம் இல்லை – பங்குச் சந்தை ஏற்றத்தாழ்வுகள், நஷ்டங்கள் போன்றவை NSC-யில் இல்லை.
வரிவிலக்கு – 80C பிரிவின் கீழ் ₹1.5 லட்சம் வரை வரியைச் சேமிக்கலாம்.
புதிய முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது – குறைந்தபட்ச ₹1,000 முதலீட்டில் தொடங்கலாம்.
கடன் தேவைகளுக்கு உதவும் – வங்கிகளில் அடமானமாக வைத்துப் பணம் பெறலாம்.
NSC-யை எங்கே வாங்கலாம்?
அருகிலுள்ள அஞ்சல் அலுவலகங்களில் (Post Office) நேரிலோ,
India Post website அல்லது இணையதளம் வழியாக
மத்திய அரசு அங்கீகரித்த ஆன்லைன் நிதி சேவைகள் மூலமாக.
நீங்கள் பாதுகாப்பாக இருக்க விரும்புகிறீர்களா?
நவீன உலகின் நிதி ஏற்றத்தாழ்வுகளில் நீங்கள் பாதுகாப்பாக இருக்க விரும்புகிறீர்களா?, மார்க்கெட் அபாயங்களின்றி, அரசு பாதுகாப்புடன், வரிவிலக்குடன் கூடிய ஒரு நல்ல வருமானம் தரும் திட்டம் தேடுகிறீர்களா? அப்படியானால், நேஷனல் சேவிங்ஸ் சர்டிபிகேட் (NSC) என்பது உங்கள் எதிர்கால நிதித் திட்டத்திற்கு ஒரு நம்பகமான துணைவனாக இருக்கும்.