Sexual Relationship
செக்ஸ் என்பது வாழ்வின் அன்றாட விஷயங்களில் ஒன்று. சில தம்பதிகள் அடிக்கடி உடலுறவு கொள்வதை வழக்காமக் கொண்டிருப்பார்கள். எனினும் சில தம்பதிகள் எப்போதாவது ஒருமுறை உடலுறவு கொள்வதை பழக்கமாக கொண்டிருப்பார்கள். இன்னும் சில தம்பதிகள் உடலுறவையே முற்றிலும் தவிர்த்து விட்டு இருப்பார்கள். ஆனால் உடலுறவு கொள்ளவில்லை என்றால், உங்கள் மூளைக்கும் உடலுக்கும் என்ன நடக்கும்? விரிவாக பார்க்கலாம்.
சிறந்த மன மற்றும் உடல் ஆரோக்கியத்துடன் செக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. உண்மையில், 2016 ஆம் ஆண்டு ஜர்னல் ஆஃப் ஹெல்த் அண்ட் சோஷியல் பிஹேவியர் நடத்திய ஆய்வில், திருப்திகரமான உடலுறவு கொண்ட பெண்களுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் அபாயம் குறைவு என்று கண்டறியப்பட்டுள்ளது. உடலுறவு என்பது கவலைக் குறைப்பு மற்றும் சிறந்த மன ஆரோக்கியத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் உடலியல் ஆரோக்கியம் மற்றும் உணர்ச்சி சமநிலையை பராமரிப்பதில் இது குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது.
பாலியல் செயல்பாடு இல்லாத உடல்
உடலுறவு என்பது உடற்பயிற்சியின் ஒரு வடிவமாக இருக்கலாம். உடலுறவில் இருந்து வரும் உடல் உடற்பயிற்சி ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் அளவை சமப்படுத்த உதவுகிறது, இதய நோய் அபாயத்தை கணிசமாகக் குறைக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.
அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் மெடிசின் வெளியிட்டுள்ள ஒரு இதழின் படி, அடிக்கடி உடலுறவில் ஈடுபடாத ஆண்கள், வாரத்திற்கு 1-2 முறை பாலுறவில் ஈடுபடுபவர்களை விட இரு மடங்கு விறைப்புக் கோளாறை அனுபவிப்பார்கள். உடலுறவு கொள்ளாமல் இருப்பது புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கலாம் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
பெண்களை பொறுத்த வரை, பாலியல் செயல்பாடு இல்லாமல் இருந்தால், அவர்களின் பிறப்புறப்பின் வர்கள் மெல்லியதாகவும் பலவீனமாகவும் மாறும் போது, உடலுறவை சங்கடமாக அல்லது வேதனையாக மாற்றும் என்றும் ம்ருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். உடல் ரீதியான பாலியல் செயல்பாடு இல்லாததால் இடுப்புத் தள தசைகளில் வலிமை குறையும். இந்த தசைகள் பெண்களின் கீழ் உள் உறுப்புகளை ஆதரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
நெருக்கமான தொடுதல் உடலின் மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலைக் குறைப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. அது உடலுறவாக தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. கட்டிப்பிடித்தல், முத்தமிடுதல் மற்றும் கைகளை பிடித்தல் போன்றவையும் இந்த விளைவை ஏற்படுத்தும். நாம் நெருங்கிய தொடர்பைத் துறக்கும்போது, நமது மனம் மிகுந்த கவலையாகவும், மனச்சோர்வுடனும், இருக்கலாம். எனவே உங்கள் துணையை அவ்வப்போது கட்டிப்பிடிப்பது, கைகளை பிடித்து நடந்து செல்வது, முத்தம் கொடுப்பது ஆகியவற்றை மன ஆரோக்கியத்திற்கு உதவும்.
உடலுறவை விரும்பாமல் இருப்பதில் தவறில்லை. உடலுறவு என்பது மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. எனினும் தனிநபர்களின் சூழ்நிலை மற்றும் விருப்பங்களின் அடிப்படையில் உடலுறவு தேர்வு அமைந்திருக்கும். மேலும், சில பாலியல் உடல்நலக் கோளாறுகள் உள்ளவர்களால் உடலுறவு கொள்ள முடியாமல் போகலாம் அல்லது உடலுறவு வலியுள்ளதாகக் காணலாம். எனவே எப்பொழுதும் உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் பாலியல் செயல்பாடுகளில் மட்டுமே ஈடுபட வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.