மாறும் சமூக சூழல் மற்றும் அதிகரித்து வரும் தனிமனித வாழ்க்கை முறை காரணமாக திருமணம் என்ற ஒன்றே வரும் காலத்தில் இருக்காது என்று கூறப்படுகிறது.
திருமணம் என்ற ஒரு விஷயமே இப்பொது மாறி வருகிறது. முன்பு திருமணம் என்பது ஒரு புனிதமான பிணைப்பாக கருதப்பட்டது. திருமணம் ஆன பிறகு கணவன் மனைவி பிரிவது என்பதே ஆச்சர்யத்துடன் பார்க்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் திருமணத்தோடு சேர்த்து விவாகரத்துகளும் அதிகரித்து வருகின்றன. பல சமயங்களில் கணவன் மனைவி இடையேயான சிறு பிரச்சனைகள்கூட விவாகரத்தில் சென்று முடிவடைகின்றன. மறுபுறம், முன்பு வெளிநாடுகளில் மட்டுமே பிரபலமாகவும், இந்தியாவில் மோசமானதாகவும், ஆபாசமாகவும் கருதப்பட்ட, லிவ்-இன் ரிலேஷன்ஷிப், டேட்டிங், பணக்கார வகுப்பினரிடையே மனைவிகளை மாற்றிக் கொள்ளுதல் போன்றவை தற்போது இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகின்றன. இதன் விளைவாக பெண்கள் சுதந்திரமாக வாழ விரும்புகிறார்கள், திருமணம் வேண்டாம் என்று நினைக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
இதன் விளைவாக, அடுத்த ஆறு அல்லது ஏழு தசாப்தங்களில், அதாவது 2100-ம் ஆண்டிற்குள் திருமணம் என்ற ஒரு விஷயமே மறைந்துவிடும் என்று ஒரு அதிர்ச்சி தரும் அறிக்கை தெரிவிக்கிறது. யாரும் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். இது குறித்து நிபுணர்கள் கருத்து தெரிவிக்கும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருமணம் போன்ற உறவுகள் எவ்வாறு மாறி வருகின்றன, சமூக மாற்றங்கள், அதிகரித்து வரும் தனிமனித வாழ்க்கை முறை மற்றும் வளர்ந்து வரும் பாலினப் வேறுபாடுகள் ஆகியவற்றால் பாரம்பரிய திருமணங்கள் எதிர்காலத்தில் இருக்காது என்று அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது. இதற்கு சில உதாரணங்களையும் அவர்கள் கூறியுள்ளனர். அதாவது, இன்றைய இளைஞர்கள் வாழ்க்கைத் தொழில், தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் அனுபவங்களில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.
undefined
நீதா அம்பானிக்கு டப் கொடுக்கும் தமிழிசை சவுந்தரராஜன்!! எந்த விஷயத்தில் தெரியுமா.?
மேலும், லிவ்-இன் ரிலேஷன்ஷிப் மற்றும் மரபுசாரா உறவுகள் அதிகரித்து வருகின்றன. இதனால் திருமணத்தின் அவசியமே இல்லாமல் போய்விடுகிறது. இது தவிர, தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமும் இதற்கு ஒரு காரணம். இதனால் எதிர்காலத்தில் மனித உறவுகள் வேறு மாதிரியாக இருக்கலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள். அதேபோல், வாழ்க்கைச் செலவு போன்ற பொருளாதார காரணிகளும் மக்களை திருமணத்தின் மீது ஆர்வம் குறையச் செய்கின்றன. குறிப்பாக பெண்கள் இப்போது தன்னிறைவு வாழ்க்கையை விரும்புகிறார்கள். அவர்களுக்கு திருமண பந்தத்தின் அவசியம் இல்லை. திருமணம் என்பது சுதந்திரம் இல்லாத, எதிர்காலம் இல்லாத, வாழ்க்கையில் முன்னேற முடியாத ஒரு பிணைப்பு என்று நினைப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகவே இன்றைய காலகட்டத்தில் பலர் திருமணம் செய்துகொள்ள தயாராக இல்லை. திருமணத்திற்கு பிறகும் குழந்தை பெற்றுக் கொள்வதைத் தவிர்க்கிறார்கள். இதே நிலை நீடித்தால் 2100-ம் ஆண்டில் திருமணம் என்பதே இருக்காது.
லான்செட் நடத்திய ஆய்வின்படி, தற்போது உலகில் 800 கோடி மக்கள் வாழ்கின்றனர். வரும் காலங்களில் இந்த எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும். உலகளவில் மக்கள் தொகை பிறப்பு விகிதம் வேகமாகக் குறைந்து வருகிறது. இந்த மாற்றம் எதிர்காலத்தில் மனிதர்களை அதிகம் பாதிக்கும் என்று நம்பப்படுகிறது. 1950-களில் இருந்து அனைத்து நாடுகளிலும் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. 1950-ல் மக்கள் தொகை பிறப்பு விகிதம் 4.84%-ஆக இருந்தது. 2021-ல் இது 2.23%-ஆக குறைந்துள்ளது. 2100-ம் ஆண்டிற்குள் இது 1.59%-ஆக குறைய வாய்ப்புள்ளது.
மழை வரப்போகுது.. லெதர் ஷூக்களை பராமரிக்க சூப்பரான டிப்ஸ்!