காளான் வாங்குனா ஒன் டைம் இப்படி புலாவ் செஞ்சு சாப்பிடுங்க.. சுவையா இருக்கும்!

By Kalai SelviFirst Published Sep 27, 2024, 1:13 PM IST
Highlights

Mushroom Pulao Recipe : குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மஸ்ரூம் புலாவ் வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

இன்று மதியம் வித்தியாசமான சுவையில் ஏதாவது ரைஸ் செய்து சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அதுவும் அசைவ சுவையில் சைவ உணவு சாப்பிட வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கானது தான். உங்கள் வீட்டில் காளான் இருக்கிறதா? அப்படி இருந்தால் அதில் புலாவ் செய்து சாப்பிடுங்கள். 

காளான் நன்மைகள் :

Latest Videos

காளான் ஒரு சத்தான உணவு என்பதால் சைவ உணவு சாப்பிடுபவர்கள் இதை சாப்பிடுவது ரொம்பவே நல்லது. இதை சாப்பிட்டால் அசைவம் சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், அசைவத்தில் இருக்கும் சுவையும், சத்தும் இதில் அப்படியே கிடைக்கும். அதுமட்டுமின்றி, இதில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. முக்கியமாக இதில் கொழுப்பு குறைவாகவே இருக்கிறது மற்றும் இதய எளிதில் ஜீரணிக்கக் கூடியது. 

இப்படி பல நன்மைகள் நிறைந்த காளானில் சுவையான  புலாவ் செய்யலாம். காளானில் புலாவ் செய்து குழந்தைகளுக்கு மதிய உணவாக லஞ்ச் பாக்ஸுக்கு அடைத்து கொடுங்கள். அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த ரெசிபி சாப்பிடுவதற்கு ரொம்பவே சுவையாகவும், செய்வதற்கு மிகவும் எளிதாகவும் இருக்கும். சரி வாங்க இப்போது இந்த பதிவில் காளானில் புலாவ் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  நாவூறும் செட்டிநாடு காளான்... நொடியில் காலியாகிடும்...ரெசிபி இதோ!

காளான் புலாவ் செய்ய தேவையான பொருட்கள் :

பாஸ்மதி அரிசி - 1 கிளாஸ் (250 கி)
காளான் - 1 பாக்கெட் (200 கி)
பெரிய வெங்காயம் - 2 (மெல்லியதாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (கீறியது)
பட்டை - 1
கிராம்பு - 3
பிரியாணி இலை - 1
அன்னாச்சி பூ - 1
ஏலக்காய் - 2
உப்பு - சுவைக்கு ஏற்ப
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
எண்ணெய் - 1 ஸ்பூன்
நெய் - 2 ஸ்பூன்
சோயா சாஸ் - 1 ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்

இதையும் படிங்க:  மணக்க .. மணக்க.. ஆளை சுண்டி இழுக்கும் காளான் கொத்துக்கறி!!

செய்முறை :

மஸ்ரூம் புலாவ் செய்ய முதலில், அரிசியை கழுவி சுமார் 20 நிமிடம் ஊற வைக்கவும். இப்போது ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய், நெய் ஊற்றி சூடாக்கவும். அவை நன்றாக சூடானதும் அதில் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, அன்னாச்சி பூ, ஏலக்காய் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பிறகு அதில் நீளமாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின் அதில் சோயா சாஸ் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். பிறகு அதில் வெட்டி வைத்துள்ள மஸ்ரூம் சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள். 

சிறிது நேரம் கழித்து அதில் ஊற வைத்து அரிசியை சேர்க்கவும். ஒரு கிளாஸ் அரிசிக்கு ஒன்றரை கிளாஸ் தண்ணீர் சேர்க்கவும். இதற்கிடையில் தேவையான அளவு உப்பும் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும். குக்கரில் விசில் போன பிறகு ஒரு ஸ்பூன் நெய் சாதத்தின் மேல் ஊற்றி ஒரு முறை கிளறி விடுங்கள். அவ்வளவு தான் இப்போது சுவையான மஸ்ரூம் புலா ரெடி.

இந்த ரெசிபி உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!