மணக்க .. மணக்க.. ஆளை சுண்டி இழுக்கும் காளான் கொத்துக்கறி!!
Kalan Kothu Kari : இந்த கட்டுரையில் காளான் கொத்துக்கறி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
உங்கள் வீட்டில் காளானை எப்போதும் ஒரே மாதிரியாக சமைத்து போரடித்து விட்டதா? அப்படியானால் அடுத்த முறை காளான் வாங்கினால் அதில் கொத்துக்கறி செய்து சாப்பிடுங்கள். இந்த காளான் கொத்துக்கறி சாப்பிடுவதற்கு சுவையாகவும், செய்வதற்கு மிகவும் எளிதாகவும் இருக்கும். முக்கியமாக இந்த காளான் கொத்துக்கறியை நீங்கள் சாதத்திற்கு மட்டுமின்றி பூரி சப்பாத்தி இட்லி, தோசை ஆகியவற்றுடன் சாப்பிட்டாலும் அருமையாக தான் இருக்கும். ஒருமுறை இந்த காளான் கொத்துக்கறியை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுங்கள், அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் காளான் கொத்துக்கறி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
காளான் கொத்துக்கறி செய்ய தேவையான பொருட்கள்:
மசாலாவிற்கு..
பட்டை - 1
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
அன்னாச்சி பூ - 1
வரமிளகாய் - 4
முந்தரி - 10
மல்லி - 1 ஸ்பூன்
கசகசா - 1 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
இதையும் படிங்க: நாவூறும் செட்டிநாடு காளான்... நொடியில் காலியாகிடும்...ரெசிபி இதோ!
கொத்துக்கறிக்கு
காளான் - 200 கிராம் (பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
இதையும் படிங்க: காளான் வாங்குனா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சி சாப்பிடுங்க.. டேஸ்ட்டா இருக்கும்!
செய்முறை:
காளான் கொத்துக்கறி செய்ய முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் மல்லி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாச்சி பூ, சோம்பு, சீரகம், மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுக்கவும். பிறகு அதில் வளமிளகாய், கறிவேப்பிலை, முந்திரி ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்து, அடுப்பை அணைத்துவிட்டு, அந்த சூட்டில் கசகசாவை சேர்த்து லேசாக வறுக்கவும். வறுத்த இந்த பொருட்களை ஆறவைத்து, பிறகு அவற்றை ஒரு மிக்ஸி சாரியில் போட்டு நன்கு மையாக அரைத்து தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் சோம்பு போட்டு தாளிக்கவும். பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி, தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கும். அவற்றின் பச்சை வாசனை போன பிறகு அதில் மிளகாய் தூள், அரைத்து வைத்துள்ள மசாலா பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். அவை நன்கு கொதித்ததும் அதில் பொடியாக நறுக்கி வைத்த காளானை சேர்த்து கிளறி விடுங்கள். பின் ஒரு தட்டை கொண்டு மூடி வைக்கவும். காளான் நன்கு வெந்ததும் அதில் பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலையை தூவி இறக்கவும். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் காளான் கொத்துக்கறி ரெடி.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D