தருமபுரியில் இன்று தமிழக வெற்றிக்கழகம் சார்பில், மாவட்ட தலைவர் நா.ப.சிவா தலைமையில் வழக்கறிஞர் பிரிவு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கட்சித் தலைவர் விஜய் போட்டியிடுவார் என தெரிவித்தார்.