செக்ஸுக்கு பிறகு.. பெண்கள் இதை மட்டும் செய்ய மறந்தால்.. என்ன நடக்கும் தெரியுமா?

By Asianet Tamil  |  First Published Aug 10, 2024, 10:30 PM IST

Women Sexual Health : செக்ஸ் வைத்து கொண்ட பின்னர் பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அதை செய்ய தவறினால் பாலியல்ரீதியாக பரவும் நோய்கள் வர வாய்ப்புள்ளது. 


செக்ஸ் வைத்து கொண்ட பின்னர் சிறுநீர் கழிப்பது நல்லது. இதனால்  உங்களின் பி.எச் (pH) சமநிலை கட்டிப்பாட்டில் இருக்கும். உடலுறவு வைத்த பிறகு எப்போதும் சிறுநீர் கழிப்பதை வழக்கமாக வைத்து கொண்டால் உங்களுடைய சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய்த்தொற்றுக்கான வாய்ப்புகள் குறையும். செக்ஸ் வைத்த பின்னர் சிறுநீர் கழித்து சிறுநீர்ப்பையை வெறுமையாக வைத்து கொண்டால், உடலுறவு வைக்கும்போது சிறுநீர்க்குழாய்க்குள் நுழைந்துள்ள  பாக்டீரியாக்கள் தானாக வெளியேறி விடும். 

இதையும் படிங்க:  ஆண்களே.. காண்டம் யூஸ் பண்றதுக்கு முன்னாடி கண்டிப்பா இந்த 5 விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க.. இல்லனா சிக்கல் தான்!

Tap to resize

Latest Videos

உடலுறவுக்கு பின்னர் பெண்கள் தங்களுடைய பிறப்புறுப்பை தண்ணீர் ஊற்றி கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும். ஆனால் பொழிச்சென்று வேகமாக தண்ணீரை ஊற்றக் கூடாது. அப்படி செய்வதால் பிறப்புறுப்பில் உள்ள நல்ல பாக்டீரியா கூட நீங்கும். இதனால் வெஜினா தன் pH சமநிலையை இழக்கும். கருத்தரித்தல் அல்லது பாலியல் நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும். சிலருக்கு கர்ப்பகால சிக்கல் கூட வரும். பிறப்புறுப்பை தூய்மையாக வைக்க வாசனையான திரவங்கள் பயன்படுத்த வேண்டாம். 

இதையும் படிங்க:  ஆண்களே.. விரைவில் திருமணமா? அந்த விஷயத்தில் அதிக நேரம் ஈடுபட 'இத' பண்ணுங்க..

பிறப்புறுப்பை எவ்வாறு கழுவலாம்? 

  • பிறப்புறுப்பை சுத்தம் செய்யும்போது முன்பிருந்து பின்புறமாக கழுவுவதால் பாக்டீரியா பரவுவதை தடுக்கலாம். சோப்பு போட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவுவது இன்னும் சிறந்தது. இதனால் வெளிப்பக்கமாகவுள்ள  வியர்வை, விந்து, பாக்டீரியா போன்றவை நீங்கும். 
  • பிறப்புறுப்பை சுத்தம் செய்த பின்னர் நல்ல காட்டன் உள்ளாடைகளை அணியுங்கள்.  செக்ஸ் வைக்கும்போது போட்டிருந்த உள்ளாடைகளை மீண்டும் உடுத்த வேண்டாம்.  இதனால் ஈரப்பதம் அதிகமாக வாய்ப்புள்ளது. இந்த காரணத்தால் ஈஸ்ட் தொற்று, சிறுநீர் பாதை தொற்று போன்றவை வர வாய்ப்புள்ளது. நைலான் துணியால் ஆன உள்ளாடைகளை உடுத்த வேண்டாம். இது தோலில் எரிச்சல் உண்டாக்கும். 
  • செக்ஸ் வைத்து முடித்த பின் தாங்க முடியாத வலி, தொடர்ச்சியான இரத்தப்போக்கு ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் அவை பாலியல் ரீதியாக பரவக்கூடிய நோய், பிறப்புறுப்பு காயம், மற்ற தொற்றுகளின் அறிகுறியாக கூட இருக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!