பிரபல நடிகை சாய் பல்லவி இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மிக நேர்த்தியாக நடித்திருக்கிறார். அவருடைய நடிப்பு வெகுவாக பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. முதல் முறையாக நடிகர் சிவகார்த்திகேயன் பிரபல நடிகர் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வரும் வேளையில் உலக அளவில் இப்போது 300 கோடி தாண்டி வசூல் செய்து வருகிறது. கங்குவா திரைப்படம் வெளியான பிறகு அமரன் திரைப்படம் சற்று அடிவாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர்ச்சியாக நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் கங்குவா திரைப்படம் பெரிய அளவில் வசூலில் அடிவாங்கி வரும் நிலையில், அமரன் தன்னுடைய மூன்றாவது வாரத்தில் நிலைத்து நின்று வசூல் சாதனை படைத்து வருகிறது.