தளபதியோடு போட்டியிட தயாரான ரிஷப் ஷெட்டி; காந்தாரா சாப்டர் 1 - மாஸ் அப்டேட் இதோ!

First Published | Nov 17, 2024, 6:34 PM IST

Kantara Chapter 1 : கடந்த 2022ம் ஆண்டு பிரபல கன்னட திரை உலகை நடிகர் ரிஷப் செட்டி நடிப்பில் உருவான காந்தாரா என்கின்ற திரைப்படம் உலக அளவில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

Kantara Chapter 1

கோலிவுட் திரை உலகை பொறுத்தவரை, தமிழ் மொழி திரைப்படங்களை தாண்டி பிறமொழி திரைப்படங்களுக்கான வரவேற்பு என்பது கடந்த சில ஆண்டுகளாகவே பெரிய அளவில் இருந்து வருகிறது. "பாகுபலி", "ரத்தம் ரணம் ரௌத்திரம்", "கேஜிஎப்" மற்றும் "மஞ்சுமல் பாய்ஸ்" போன்ற திரைப்படங்களே அதற்கு சாட்சி. அந்த வகையில் கடந்த 2022ம் ஆண்டு பிரபல கன்னட திரை உலக நடிகர் மற்றும் இயக்குனர் ரிஷிப் ஷெட்டி நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான "காந்தாரா" என்கின்ற திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல முன்னணி நடிகர்கள், ரிஷப் ஷெட்டியை நேரில் அழைத்து பாராட்டினர்..

ஹைதராபாத்தில் தஞ்சம்; நடிகை கஸ்தூரி சிக்கியது எப்படி? வெளியான அதிர்ச்சி தரும் தகவல்கள்!

Rishab Shetty

கர்நாடக மக்களின் தொன்மை மிகு வரலாற்றை கூறுகின்ற ஒரு படமாக காந்தாரா அமைந்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி உலக அளவில் வெளியான இந்த திரைப்படம் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. சுமார் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம், உலக அரங்கில் யாருமே எதிர்பாராத அளவிற்கு 400 முதல் 450 கோடி வரை வசூல் செய்து மிகப் பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமாக மாறியது. இந்த சூழலில் இப்படத்தின் இயக்குனரும், ஹீரோமான ரிஷப் செட்டி இந்த திரைப்படத்தின் அடுத்த பாகம் நிச்சயம் உருவாகும் என்று அறிவித்திருந்தார். 

Tap to resize

Kantara Movie

அதற்கான தீவிர பணிகளில் தான் ஈடுபட்டு வருவதாகவும், பல்வேறு விஷயங்களை இந்த படத்திற்காக சேகரிக்க உள்ளதாகவும் அவர் கூறினார். ஆனால் அடுத்தபடியாக வெளியாகும் "காந்தாரா" திரைப்படம், 2022 ஆம் ஆண்டு வெளியான படத்தின் Prequel திரைப்படமாக இருக்கும் என்றும் கூறினார். அதாவது அந்த திரைப்படத்தில் நடந்த கதைக்கு முந்தைய காலத்தில் நடைபெற்ற கதையாக காந்தாரா படத்தின் அடுத்த பாகத்தின் கதை உருவாக உள்ளது என்றார் அவர். இந்த சூழலில் விறுவிறுப்பாக அந்த பணிகளை மேற்கொண்டு வந்த நடிகர் மற்றும் இயக்குனர் ரிஷப் செட்டி, தன்னுடைய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் ஒரு புதிய அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கழித்து காந்தாரா படத்தின் அடுத்த பாகம் விரைவில் வெளியாக உள்ளது.

Kantara 2

காந்தாரா படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹோம்ப்ளே பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி உலக அளவில் காந்தாரா படத்தின் சேப்டர் 1 வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. அதே அக்டோபர் மாதத்தில் தான் தளபதி விஜய் நடித்து வரும் அவருடைய 69ஆவது மற்றும் இறுதி திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

"அதெல்லாம் நல்லா தொல்லை கொடுப்பார்" தனுஷ் நயன்தாரா விவகாரம் - மீண்டும் ஆக்ஷனில் இறங்கிய சுசித்ரா!

Latest Videos

click me!