
Samantha Temple in Andhra: சினிமா மற்றும் விளையாட்டு இரண்டும் மட்டுமே பொழுதுபோக்கு அம்சங்களாக உள்ளன. சிலர் சுற்றுலா விரும்பிகளாக இருப்பார்கள். ஆனால், நடிகர், நடிகைகள் பிடிக்காத யாரும் இருக்கமாட்டார்கள். அது கோலிவுட்டாக இருந்தாலும் சரி, பாலிவுட், ஹாலிவுட் என்று எதுவாக இருந்தாலும் சரி நடிகர்கள், நடிகைகளை எல்லோருக்கும் பிடிக்கும். அவர்கள் நடிக்கும் படங்களை வைத்தும், அவர்களது அழகாலும் அவர்கள் மீது ஈர்க்கப்படுவது உண்டு. திறமையை பாராட்டுவார்கள்.
அப்படி அவர்கள் நடிக்கும் படங்களை வைத்து நடிகர், நடிகைகளுக்கு ரசிகர்கள் மன்றங்கள் உருவாக்கப்படும். அப்படி எத்தனையோ நடிகர்களுக்கு ரசிகர்கள் ரசிகர் மன்றங்களை வைத்து கொண்டாடி வருகின்றனர். அதில் சமந்தாவும் ஒருவர். சிம்பு நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தாலும் அவரை ஹீரோயினாக அறிமுகம் செய்து வைத்தது என்னவோ பானா காத்தாடி படம் தான்.
அதன் பிறகு சமந்தாவிற்கு நான் ஈ படம் பட்டி தொட்டியெங்கும் வரவேற்பு கொடுக்க அவரை ரசிகர்கள் கொண்டாட தொடங்கினர். நீதான் என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி, தங்கமகன், தெறி, மெர்சல், காத்துவாக்குல ரெண்டு காதல் என்று எத்தனையோ படங்களில் நடித்துள்ளார்.
தற்போது சினிமா வாய்ப்பு இல்லாத போதிலும் வெப் சீரிஸில் நடித்து வருகிறார். வெப் சீரிஸ் மூலமாக லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் நடிகைகளில் சமந்தாவும் ஒருவர். இப்படி சினிமாவில் தன்னை பிஸியாக வைத்துக் கொண்ட சமந்தாவிற்கு ரசிகர் ஒருவர் கோயில் கட்டியுள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால், நம்பித்தான் ஆக வேண்டும். நடிகர், நடிகைகளின் பிறந்தநாளுக்கு கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்வது, ரத்த தானம் செய்வது, அன்னதானம் செய்வது, கண் தானம் செய்வது என்று ரசிகர்கள் அவர்களை கொண்டாடுவது வழக்கம்.
அதையும் தாண்டி ரசிகர் ஒருவர் நடிகைக்கு கோயில் கட்டியுள்ளார். ஆம், ஆந்திரா மாநிலத்தில் சமந்தாவிற்கு தான் கோயில் கட்டப்பட்டுள்ளது. ஆந்திராவின் பாபட்லா மாவட்டம் ஆல்பாடு பகுதியை சேர்ந்த கார் டிரைவர் சந்தீப். இவர் சமந்தாவி தீவிர ரசிகர். அவர் மீதுள்ள பாசத்தை வெளிக்காட்ட விரும்பியுள்ளார். இதற்காக அவர் கோயில் கட்ட வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்.
அதற்காக அவர் தனது வீட்டு வளாகத்திலேயே சமந்தாவின் மார்பளவு சிலையை நிறுவியுள்ளார். அதோடு அதற்காக திறப்பு விழாவையும் மிக பிரம்மாண்டமாக நடத்தியுள்ளார். இவ்வளவு ஏன், சமந்தாவுக்கு மயோசிடிஸ் ஏற்பட்ட போது அவர் குணமடைய வேண்டி சாம் பயணம் செய்திருக்கிறார். மேலும் திருப்பதி, சென்னை, நாகப்பட்டினம் என்று டிராவல் செய்திருக்கிறார். சமந்தா ஒரு நடிகையாக மட்டுமின்றி சிறந்த மனிதநேயம் கொண்டவராக இருப்பதால் அவருக்காக ஏதாவது செய்ய நினைத்திருக்கிறார். 2010 ஆம் ஆண்டு திரைக்கு வந்த ஏமயா கலாவ் படத்தின் மூலமாக அவரது தீவிர ரசிகரான சந்தீப் கடந்த 2023 ஆம் ஆண்டு சமந்தாவின் பிறந்தநாளன்று அவருக்கு கோயில் கட்டி கொண்டாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமந்தாவிற்கு முன்னதாக கோலிவுட்டை ஆண்ட நடிகை குஷ்புவிற்கு தமிழகத்தில் திருச்சியில் கோயில் கட்டப்பட்டுள்ளது. அதே போன்று நடிகை ஹன்சிகாவிற்கும் ரசிகர்கள் கோயில் கட்டியிருக்கின்றனர். ஆனால், நயன்தாரா மட்டும் தனக்கு கோயில் கட்டக் கூடாது என்று கூறியதைத் தொடர்ந்து அவருக்கு யாரும் கோயில் கட்டவில்லையாம். மேலும், கடவுளை விட தான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை என்றும் அவர் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமந்தாவிற்கு முன்னதாக கோலிவுட்டை ஆண்ட நடிகை குஷ்புவிற்கு தமிழகத்தில் திருச்சியில் கோயில் கட்டப்பட்டுள்ளது. அதே போன்று நடிகை ஹன்சிகாவிற்கும் ரசிகர்கள் கோயில் கட்டியிருக்கின்றனர். ஆனால், நயன்தாரா மட்டும் தனக்கு கோயில் கட்டக் கூடாது என்று கூறியதைத் தொடர்ந்து அவருக்கு யாரும் கோயில் கட்டவில்லையாம். மேலும், கடவுளை விட தான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை என்றும் அவர் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.