என்னோட படமாக இருந்தாலும் சரி, படம் நல்லா இல்லனா ஹிட் ஆக்காதீங்க – சூர்யா ஓபன் டாக்!

First Published | Nov 17, 2024, 2:01 PM IST

Kanguva Hero Suriya Open Talk : சூர்யாவின் கங்குவா படத்தின் வசூல் குறித்த ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தகவல் வெளியிட்டு வரும் நிலையில், சூர்யா முன்னர் தரமான படங்களை மட்டுமே ஆதரிக்க வேண்டும் என்று கூறியது தற்போது வைரலாகி வருகிறது.

Kanguva Box Office Collection

Kanguva Hero Suriya Open Talk : தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர்களில் சூர்யாவும் ஒருவர். படத்தின் கதைக்கு ஏற்ப உடல் எடையை கூட்டி குறைத்து நடிக்கும் நடிகர்கள் வெகு சிலரே. அதில், சூர்யாவும் ஒருவர். அந்தளவிற்கு படத்திற்கு மெனக்கெடுவார். நேருக்கு நேர் படம் மூலமாக சினிமாவில் அறிமுகமான சூர்யா இப்போது நடிகர் மட்டுமின்றி படம் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.

தனது 2 டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலமாக 36 வயதினிலே, பசங்க 2, மகளிர் மட்டும், கடைக்குட்டி சிங்கம், சூரரை போற்று, ஜெய் பீம், விருமன் என்று பல படங்களை தயாரித்து ஒரு சில படங்களை ஹிட்டும் கொடுத்திருக்கிறார். கடைசியாக இவரது தயாரிப்பில் மெய்யழகன் படம் வெளியானது. ஆனால், இந்த படம் கலவையான விமர்சனம் பெற்ற நிலையில் போதுமான வரவேற்பு பெறவில்லை

Suriya Kanguva Movie

இந்த படத்திற்கு பிறகு தற்போது தனது சூர்யா44 படத்தையும் தயாரித்து வருகிறார். இந்த நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு கங்குவா படம் வெளியானது. ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இயக்குநர் சிவா இயக்கிய இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.

கங்குவா படத்தில் சூர்யா உடன் இணைந்து பாபி தியோல், திஷா பதானி, யோகி பாபி, நடராஜன், ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, மன்சூர் அலி கான் என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். கங்குவா படத்தை தயாரித்த ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் நாள்தோறும் கங்குவாவின் வசூல் குறித்து அப்டேட் கொடுத்து வருகிறது. அந்த வகையில் 2 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.89.32 கோடி வசூல் கொடுத்துள்ளது என்றும் முழுக்க முழுக்க பிளாக்பஸ்டர் ஹிட் என்றும் தெரிவித்துள்ளது.

Tap to resize

Kanguva Box Office Collection

இவ்வளவு ஏன் சூர்யாவின் மனைவி ஜோதிகாவும் கங்குவா குறித்து அப்டேட் கொடுத்திருக்கிறார். அதன்படி, படத்தில் ஏராளமான சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளது. எதிர்மறையாக விமர்சிப்பவர்களுக்கு அதைப் பற்றி தெரியவில்லை. திட்டமிட்டு அவதூறு பரப்புவதாக குற்றம்சாட்டியுள்ளார். படத்தில் 30 நிமிடங்கள் மட்டுமே நன்றாக வரவில்லை. படத்தில் சத்தம் இரைச்சலாக இருக்கிறது. வேறு எந்த பெரிய படத்திற்கும் வராத விமர்சனங்கள் இந்தப் படத்திற்கு மட்டும் வருவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Suriya Kanguva Movie

இந்த நிலையில் தான் சூர்யா பேசியது இப்போது மீண்டும் வைரலாகி வருகிறது. சரியான படத்தை மட்டுமே ஓட வையுங்கள். என்னோட படமாக இருந்தாலும் சரி தப்பான படத்தை ஓட வைக்காதீங்க. அப்போது தான் நல்ல கதைக்காக நான் ஓட முடியும் என்று 2013 ஆம் ஆண்டு கூறியிருக்கிறார். தற்போது கங்குவா நெகட்டிவ் விமர்சனம் பெற்று வரும் நிலையில் இப்போது வைரலாகி வருகிறது.

Latest Videos

click me!