Jyothika Kanguva Review
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் கடந்த நவம்பர் 14-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. வெளியான முதல் நாளில் இருந்தே அப்படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. இதுதவிர தமிழ் சினிமாவில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட படமாகவும் கங்குவா மாறியது. இந்த நிலையில் கங்குவா படம் பார்த்த நடிகர் சூர்யாவின் காதல் மனைவி ஜோதிகா, அப்படத்தை ரிவ்யூ செய்து பதிவிட்டுள்ளார்.
Kanguva
அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது : “நான் நடிகர் சூர்யாவின் மனைவியாக அல்ல, ஒரு சினிமா ரசிகையாக இந்த பதிவை எழுதியுள்ளேன். கங்குவா சினிமாவில் ஒரு அதிசயம். ஒரு நடிகனாக, சினிமாவை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்ல முயலும் சூர்யாவை நினைத்தால் மிகவும் பெருமையாக உள்ளது. கங்குவா படத்தில் நிச்சயமாக முதல் அரைமணிநேரம் ஒர்க் அவுட் ஆக வில்லை; அதேபோல் சத்தமும் அதிகமாக இருந்தது.
Suriya Jyothika
குறைகள் என்பது ஒவ்வொரு படத்திலும் ஒரு அங்கமாக இருக்கும். இதுபோன்ற பரிசோதனை முயற்சியில் எடுக்கப்படும் படங்களில் அது இருப்பது நியாயமானது. அதுவும் 3 மணிநேரத்தில் வெறும் அரை மணிநேரம் மட்டும் தான். மற்றபடி உண்மையாக சொல்லவேண்டும் என்றால் இது தரமான சினிமா அனுபவத்தை கொடுத்துள்ளது. தமிழ் சினிமாவில் இதுபோன்ற ஒரு ஒளிப்பதிவை இதற்கு முன்னர் பார்த்ததில்லை.
இதையும் படியுங்கள்... ஞானவேல் எதிர்பார்த்த வசூலை எட்டியதா கங்குவா? 2ம் நாள் வசூல் என்ன? அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
Suriya wife Jyothika
ஊடகங்கள் மற்றும் சினிமா சார்ந்தவர்களிடம் இருந்து இந்த அளவு நெகடிவ் விமர்சனங்கள் வருவதை பார்த்து நான் மிகவும் ஆச்சர்யமடைந்தேன். பழைய கதையுடன், பெண்களை இழிவாக காட்டி, டபுள் மீனிங் வசனங்கள் பேசி, அதிக சண்டைக் காட்சிகளுடன் இதற்கு முன் வந்த பெரிய படங்களுக்கெல்லாம் இதுபோன்ற ஒரு நிலை இருக்கவில்லை.
Jyothika Praises Kanguva
கங்குவா படத்தில் உள்ள பாசிடிவ் என்ன ஆச்சு? இரண்டாம் பாதியில் உள்ள பெண்களின் சண்டைக்காட்சி, சிறுவனுக்கு கங்குவா மீதுள்ள அன்பும், பகையும் அதெல்லாம் ஏன் சொல்லவில்லை. நல்ல நல்ல காட்சிகளை விமர்சனத்தில் கூற மறந்துவிட்டீர்கள் என நினைக்கிறேன். இதையெல்லாம் படிக்க வேண்டுமா, கேட்க வேண்டுமா, நம்ப வேண்டுமா என எனக்கு ஆச்சர்யமாக உள்ளது.
Jyothika Post Kanguva Review
வியத்தகு காட்சிகளுடன் படத்தை 3டி தொழில்நுட்பத்துடன் கொடுத்துள்ளவர்களுக்கு கைதட்டலும் பாராட்டும் கிடைக்க வேண்டிய நிலையில், படம் ரிலீஸாகி முதல் காட்சி முடியும் முன்னரே சில கும்பல்களால் இந்த அளவு நெகடிவிட்டி பரப்பப்பட்டுள்ளது மிகவும் வருத்தமளிக்கிறது. கங்குவா டீம் நீங்கள் பெருமையாக இருங்கள். நெகடிவ் கமெண்ட் அடிப்பவர்கள் அடித்துக் கொண்டே இருக்கட்டும். அவர்களால் அதுதான் செய்ய முடியும். தமிழ் சினிமாவை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல அவர்களால் அதுதவிர எதுவும் செய்ய முடியாது” என ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார் ஜோதிகா.
இதையும் படியுங்கள்... வேட்டையனிடம் இருந்து விலகி சிவாவிடம் சிக்கிய கங்குவா; அமரன் படத்தின் 16 நாள் வசூல் எவ்வளவு?