சிவகார்த்திகேயன் மாஸ் ஹீரோ; ஏன் அமரனில் காமெடி சீன் வைக்கல? இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி விளக்கம்!

First Published | Nov 17, 2024, 11:33 AM IST

 Amaran Comedy Scene Delete by Director Rajkumar Peiyasamy : அமரன் படத்தில் ஏராளமான காமெடி காட்சிகள் இருந்ததாகவும், அதனை ஏன் வைக்கவில்லை என்பது குறித்தும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கூறியுள்ளார்.

Amaran, Sivakarthikeyan

இயக்குநர் ராஜ்குமார் மற்றும் சிவகார்த்திகேயனை இன்று நாடே கொண்டாட ஒரே ஒரு காரணம் அமரன் படமும், முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையும் தான். தமிழகத்தில் பிறந்து வளர்ந்து இராணுவத்தில் இணைந்து நாட்டிற்காக உயிர் நீத்த முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் தான் அமரன். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரனாக முகுந்த் வரதராஜனாகவே வாழ்ந்திருப்பார். இந்தப் படத்தில் அவருக்குப் பதிலாக வேறு யாருக் நடித்திருந்தால், இந்த அளவிற்கு ஹிட் கொடுத்திருக்குமா என்று கேட்டால் முடியவே முடியாது.

Amaran Will Reach Rs 300 Crore Collection

ராஜ்குமார் பெரியசாமியின் 2ஆவது படம். இதற்கு முன்னதாக கௌதம் கார்த்திக் நடிப்பில் வந்த ரங்கூன் படத்தை இயக்கியிருந்தார். துப்பாக்கி படத்தில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸிற்கு அசோசியேட் இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். குறுகிய காலத்திலேயே இயக்குநராக அவதாரம் எடுத்த ராஜ்குமார் பெரியசாமி 7 ஆண்டுகளுக்கு பிறகு அமரன் படத்தை கொடுத்துள்ளார்.

கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி திரைக்கு வந்த இந்தப் படத்தை ரசிகர்கள் இன்றும் கொண்டாடி வருகின்றனர். இந்தப் படத்திற்காக சிவகார்த்திகேயன் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. இன்று அவரை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.

Latest Videos


Sivakarthikeyan, Amaran, Rajkumar Periasamy

இதுவரையில் ஒரு ஜாலியான, குடும்பக் கதையில் நடித்து வந்த சிவகார்த்திகேயனை முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ஹீரோவாக காட்டி புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்ற இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கு ஒரு பெரிய சல்யூட். இதுவரையில் சிவகார்த்திகேயன் 20க்கும் அதிகமான படங்களில் நடித்திருந்தாலும் ஒரு படம் கூட ரூ.120 கோடிக்கும் அதிகமாக வசூல் குவிக்கவில்லை.

இந்த நிலையில் தான் முதல் முறையாக அமரன் ரூ.300 கோடியை நெருங்க இருக்கிறது. இதன் மூலமாக கோலிவுட்டில் அதிக வசூல் குவித்த டாப் மாஸான ஹீரோக்களின் பட்டியலில் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளார். இதற்கு முன்னதாக ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய், அஜித், தனுஷ், சூர்யா, விக்ரம் என்று மாஸாக ஹீரோக்கள் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் கொடுத்த நிலையில் தற்போது அமரன் படத்தின் மூலமாக சிவகார்த்திகேயனும் அந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

Amaran Movie

கிட்டத்தட்ட ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட அமரன் இதுவரையில் ரூ.280 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. இனி வரும் நாட்களில் எந்த பெரிய படமும் இல்லாத நிலையில் இன்னமும் அமரன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்கு சூர்யாவின் கங்குவா படமும் ஒரு காரணம். கடந்த 14 ஆம் தேதி வெளியான கங்குவா எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் வசூலிலும் சொதப்பி வருகிறது. நேற்று இரவு வரையில் ரூ.89.32 கோடி வசூல் குவித்ததாக தயாரிப்பு நிறுவனம் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

Amaran Comedy Scene Cut

ஆனாலும் சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் தோல்வி படமாக அமைந்துள்ளது. இதன் காரணமாகவும் அமரன் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது. படம் வெளியாவதற்கு முன் புரோமோஷனிலும், படம் வெளியாகி வெற்றி பெற்றால் சக்ஸஸ் மீட்டிலும் படக்குழுவினர் கலந்து கொள்வது வழக்கம். அப்படி அமரன் வெற்றிக்கு பிறகு படக்குழுவினர் என்று அனைவருமே சக்ஸஸ் மீட்டில் கலந்து கொண்டு வருகின்றனர். அப்படி ஒரு நிகழ்வில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கலந்து கொண்டார்.

Sivakarthikeyan Amaran Movie

நீலகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவருக்கு ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இந்த நிலையில் தான், அமரன் படத்தில் ஏராளமான காமெடி காட்சிகள் இருந்தது. அதனை படத்தில் வைத்திருந்தால் தியேட்டரில் கிளாப்ஸ் கிடைச்சிருக்கும். அந்தளவிற்கு காமெடி காட்சிகள் இருந்தது. அந்த காட்சிகளை படத்தில் வைத்திருந்தால் முகுந்த் வரதராஜன் கேரக்டருக்கான மதிப்பு குறைந்திருக்கும். ஆதலால் தான் அந்த சீன்களை எல்லாம் கட் பண்ணிவிட்டேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Amaran Box Office Collection

அவர், அப்படி செய்ததால் தான் சிவகார்த்திகேயன் ஆக்‌ஷன் ஹீரோவாக காட்டப்பட்டார். இல்லையென்றால் இந்த படமும் காமெடியிலே சென்றிருக்கும். ரசிகர்களும் 100ல் ஒரு படமாக இந்தப் படத்தையும் சிரித்துக் கொண்டே பார்த்துட்டு மறந்திருப்பாங்க. ஆனால், இப்போது முகுந்த் வரதராஜனையும், இராணு வீரர்களின் கஷ்டங்களையும் மறக்க மாட்டாங்க அல்லவா. அதுதான்….அமரன்...

click me!