உங்க போதைக்கு நான் ஊறுகாவா! சவுண்டு விட்ட நயன்தாரா; சைலண்ட் மோடில் தனுஷ் - காரணம் என்ன?

Published : Nov 17, 2024, 08:43 AM ISTUpdated : Nov 17, 2024, 05:11 PM IST

தனுஷ் மீது நடிகை நயன்தாரா, அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், அதன் பின்னணியில் உள்ள அதிர்ச்சி தகவலை பற்றி பார்க்கலாம்.

PREV
16
உங்க போதைக்கு நான் ஊறுகாவா! சவுண்டு விட்ட நயன்தாரா; சைலண்ட் மோடில் தனுஷ் - காரணம் என்ன?
Nayanthara, Dhanush

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் கடந்த 2022ம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணத்தில் ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டும், அதற்கான புகைப்படங்களோ, வீடியோக்களோ வெளியிடப்படாமல் இருந்தது. இதற்கு முக்கிய காரணம் இவர்களின் திருமண வீடியோவை ஒளிபரப்பும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.25 கோடி கொடுத்து வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

26
Nayanthara Statement

இந்த திருமண ஆவணப்படத்தை இயக்குனர் கெளதம் மேனன் தான் டைரக்ட் செய்திருந்தார். திருமணம் முடிந்து 2 ஆண்டுகளாக நயன்தாராவின் திருமண வீடியோ நெட்பிளிக்ஸில் வெளியிடப்படாமல் இருந்த நிலையில், கடந்த மாதம் இதன் ரிலீஸ் தேதியை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்தது. அதன்படி நவம்பர் 18-ந் தேதி நயன்தாராவின் பிறந்தநாள் அன்று அவர் திருமண வீடியோவை வெளியிட உள்ளதாக அறிவித்ததோடு, அதற்கான டிரைலரையும் அண்மையில் வெளியிட்டு இருந்தனர்.

36
Nayanthara vs Dhanush

அந்த டிரைலரில், நானும் ரெளடி தான் பட ஷூட்டிங் சமயத்தில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் எடுத்துக்கொண்ட 3 செகண்ட் வீடியோ இடம்பெற்று இருந்தது. அந்த வீடியோவுக்காக ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகர் தனுஷ் தரப்பில் இருந்து நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. ஏனெனில் அப்படத்தை தயாரித்த தன்னிடம் இருந்த எந்தவித அனுமதியும் பெறாமல் அந்த வீடியோவை அவர்கள் பயன்படுத்தி இருப்பதாக தனுஷ் தரப்பு நோட்டீஸில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதையும் படியுங்கள்... தனுஷுக்கு ஒரு நியாயம்; உங்களுக்கு ஒரு நியாயமா? நயன்தாரா & விக்கியை வறுத்தெடுத்த பிரபலம்! ஏன்?

46
Dhanush Silence in this Issue

இதனால் கோபமடைந்த நயன்தாரா, தனுஷை சரமாரியாக சாடி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதுதவிர தனுஷ் நஷ்ட ஈடு கேட்ட 3 செகண்ட் வீடியோ கிளிப்பின் முழு வெர்ஷனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, 10 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த வீடியோவை இங்கு இலவசமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று பதிவிட்டதால் மோதல் சூடுபிடித்தது. இந்த விவகாரத்தில் நடிகை நயன்தாராவின் அறிக்கைக்கு தனுஷ் உடன் நடித்த நடிகைகளான பார்வதி, அனுபமா பரமேஸ்வரன், ஐஸ்வர்யா லட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் லைக் செய்து ஆதரவு தெரிவித்திருந்தனர்.

56
Dhanush, Nayanthara

நயன்தாராவின் இந்த பகிரங்க குற்றச்சாட்டுக்கு தனுஷ் எந்தவித ரிப்ளையும் கொடுக்காமல் அமைதி காத்து வருகிறார். இதற்கு ஒரு முக்கிய காரணம் இருப்பதாக கூறப்படுகிறது. அது என்னவென்றால், நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படம் ரிலீஸ் ஆக உள்ளது பெரியளவில் ரீச் ஆகாததால், அதனை புரமோட் செய்யவே நயன்தாரா இதுபோன்ற வேலைகளில் இறங்கி இருப்பதாகவும், இதன் காரணமாகவே தனுஷ் எந்தவித ரிப்ளையும் கொடுக்காமல் உள்ளார் எனவும் கூறப்படுகிறது.

66
Netizens Slam Nayanthara

தனுஷும் தன் பங்கிற்கு ரிப்ளை கொடுத்தால் அது இந்த விவகாரத்தை பரபரப்பாக்கி நயன்தாராவின் ஆவணப்படத்திற்கு பப்ளிசிட்டி செய்ததுபோல் ஆகிவிடும் என்பதால் தனுஷ் சைலண்டாக இருக்கிறாராம். நெட்டிசன்களும் தனுஷுக்கு ஆதரவாக பதிவுகளை போட்ட வண்ணம் உள்ளனர். அதில், தனுஷ் ஒரு தயாரிப்பாளர் என்கிற முறையில் நஷ்ட ஈடு கேட்பதில் என்ன தவறு என கேள்வி எழுப்பி உள்ள அவர்கள், தனுஷை மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள அறிவுறுத்தும் நயன்தாரா, தன் திருமண ஆவணப்படத்தை நெட்பிளிக்ஸில் கட்டணம் இன்றி பார்க்கும் வகையில் வெளியிடுவாரா என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர். 

இதையும் படியுங்கள்... ஸ்ருதி முதல் நஸ்ரியா வரை; Netflix விவகாரத்தில் நயன்தாராவுக்கு ஆதரவாக நிற்கும் தனுஷ் பட நாயகிகள்!

Read more Photos on
click me!

Recommended Stories