டைட்டில் கனவோடு வந்தவரை கண்ணீரோடு வீட்டுக்கு அனுப்பிய பிக் பாஸ்! இந்த வார எலிமினேஷன் இவரா?

First Published | Nov 17, 2024, 7:45 AM IST

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில் டைட்டில் வின்னர் ஆகும் எண்ணத்தோடு வந்த வைல்டு கார்டு போட்டியாளரை எலிமினேட் செய்து வீட்டுக்கு அனுப்பி உள்ளனர்.

Bigg Boss Tamil season 8

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க கடந்த அக்டோபர் மாதம் 6-ந் தேதி கோலாகலமாக தொடங்கியது. 9 ஆண் போட்டியாளர்கள், 9 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 போட்டியாளர்களுடன் அலப்பறையாக தொடங்கிய இந்நிகழ்ச்சி தற்போது 40 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா மற்றும் சுனிதா ஆகிய 4 போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி உள்ளனர்.

Bigg Boss Tamil season 8 contestants

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் மந்தமாக சென்று கொண்டு இருப்பதால், ஆட்டம் சூடுபிடிக்க தீபாவளி பண்டிகையை ஒட்டி வைல்டு கார்டு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். அதன்படி ராணவ், ரயான், ரியா, வர்ஷினி வெங்கட், மஞ்சரி, ஷிவக்குமார் ஆகிய 6 பேர் வைல்டு கார்டு போட்டியாளர்களாக உள்ளே சென்றனர். இவர்கள் வந்த பிறகாவது ஆட்டம் களைகட்டும் என ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதையும் படியுங்கள்... பிக்பாஸ் வீட்டில் ஆண் போட்டியாளர் காலில் விழுந்த பின் கதறி அழுத ஜாக்குலின்!

Tap to resize

Bigg Boss Elimination

இதனால் மீண்டும் டல் அடிக்க தொடங்கி இருக்கிறது பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் இருந்து வார வாரம் ஒரு போட்டியாளர் எலிமினேட் செய்யப்படுவது வழக்கம். அதுவும் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் இந்த வெளியேற்று படலம் நடக்கும். அதன்படி இந்த வாரம் மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் குறைவான வாக்குகளை பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் ஆன போட்டியாளர் யார் என்கிற விவரம் வெளியாகி இருக்கிறது.

Riya Thiyagarajan Eliminated

அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்த போட்டியாளரான ரியா தியாகராஜன் தான் இந்த வாரம் எலிமினேட் ஆகி உள்ளார். டைட்டில் வின்னர் ஆக வேண்டும் என்கிற கனவோடு வந்த ரியா, நாமினேட் ஆன முதல் வாரமே எலிமினேட் ஆகி இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த எதிர்பாரா எலிமினேஷனால் ரியா கண்ணீரோடு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... பிக்பாஸ் சௌந்தர்யாவிடம் நடந்த Scam; 2 நிமிடத்தில் 17 லட்சம் அபேஸ்! அவரே கூறிய தகவல்!

Latest Videos

click me!