கெட்டி மேளம் கொட்டி 'சுந்தரி' சீரியலுக்கு சுபம் போட்டாச்சு! வைரலாகும் Climax போட்டோஸ்!

Published : Nov 16, 2024, 10:46 PM IST

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'சுந்தரி' சீரியல் முடிவடைந்துள்ள நிலையில், இதன் கிளைமேக்ஸ் காட்சி குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  

PREV
16
கெட்டி மேளம் கொட்டி 'சுந்தரி' சீரியலுக்கு சுபம் போட்டாச்சு! வைரலாகும் Climax போட்டோஸ்!
Sundari Serial Team

ஒரே கதையை மாற்றி தினுசு... தினுசா சீரியல் என்கிற பெயரில் ஒளிபரப்பி வந்த காலம் போய், சமீப காலமாக திரைப்படங்களை விட, சுவாரஸ்யமாகவும், பரபரப்பான காட்சிகளுடனும்... பெரியவர்கள் முதல் சிறுசுகள் வரை அனைவரும் ரசிக்கும் படி, சீரியல்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

26
Sun tv Serial

இப்படி சீரியல்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பை பார்த்து, வாரத்தில் 5 நாள் அல்லது 6 நாட்கள் ஓடிக்கொண்டிருந்த சீரியல்களை, 7 நாட்களும் சில தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப துவங்கி விட்டனர். 

உலக அழகி ஐஸ்வர்யா ராய், நயன்தாரா போல் பேரழகியா இருந்தாலும்.. பாஸ்போர்ட்டில் இப்படி தான் இருப்பாங்க!

36
Sun tv Serial

மற்ற தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களை விட, சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு கொஞ்சம் மவுசு அதிகம் என்றே சொல்லலாம். அதுவும் பிரைம் டைம் குறிவைத்து ஒளிபரப்பப்படும், சீரியல்களான கயல், மருமகள், சிங்கப்பெண்ணே, சுந்தரி, மூன்று முடிச்சு போன்ற சீரியல்கள் தொடர்ந்து TRP-யில் டாப் 5 இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளன.

46
Sudari Serial Ended

அந்த வகையில் சன் டிவி தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த சீரியல்களில் ஒன்று தான், 'சுந்தரி'. கிராமத்தில் பிறந்து வளரும் ஒரு பெண்... ஐஏஎஸ் அதிகாரியாக மாற போராடுகிறார். அவருடைய வாழ்க்கையும் கணவரால் சீரழிகிறது. கணவரின் இரண்டாவது மனைவியின் குழந்தையை வளர்க்கும் பொறுப்பு சுந்தரிக்கு வருகிறது. இத்துடன் முதல் பாகம் கடந்த ஆண்டு முடிவடைந்த நிலையில், இந்த சீரியலில் இரண்டாவது பாகம் துவங்கப்பட்டது.

ரம்யா பாண்டியன் வெட்டிங் ரிசப்ஷனில் ஒன்று திரண்ட பிக்பாஸ் பிரபலங்கள்! வைரல் போட்டோஸ்!

56
Sundari Shooting

எதிர்பாராத திருப்பங்களுடன் இந்த சீரியல் கடந்த ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வந்த நிலையில், ஒருவழியாக சுந்தரி தனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்து கொள்ளும் படி, சுந்தரியின் முதல் கணவர் கார்த்தி நல்லவராக மாறுகிறார். அதே போல் கார்த்தியின் மனைவி அனு அவருடன் சேருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதுபோல் ரசிகர்களின் மனதுக்கு நிறைவை தரும் காட்சிகளோடு... சுந்தரி - விஜய் திருமணத்திற்கு கெட்டி மேளம் கொட்டி, இந்த சீரியலுக்கு சுபம் போட்டுள்ளனர்.

66
Sundari Climax

கிளைமேக்சின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த சீரியல் முடிவடைந்தது, ரசிகர்களுக்கு வருத்தம் என்றாலும், கூடிய விரைவில் புதிய சீரியல் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

2024 உலக அளவில் மாஸ் வசூலோடு ஓப்பனிங் கண்ட டாப் 5 தமிழ் படங்கள்!

Read more Photos on
click me!

Recommended Stories