தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா, தான் நடிக்கும் படங்களுக்கு விதவிதமான உடைகளில், விதவிதமாக மேக்கப் போட்டு நடித்தாலும், பாஸ்போர்ட்டில் மிகவும் எளிமையாக, ஒரு டாப் அணிந்து, போனிடெயில் போட்டு கொண்டு எளிமையான தோற்றத்தில் உள்ளார். நயன்தாராவின் பாஸ்போர்ட் போட்டோவை பார்த்து பல ரசிகர்கள், 15 வருடத்திற்கு முன் எப்படி நயன்தாரா இருந்தாரோ அதே போல் தான் இந்த புகைப்படத்தில் உள்ளதாக கூறி வருகிறார்கள்.
26
Sunny Leone
சன்னி லியோன்:
பாலிவுட் திரைப்படங்களில் தீவிர கவனம் செலுத்தி வரும் சன்னி லியோன், கடந்த சில வருடங்களாக தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார். மேலும் பொது இடங்களுக்கு வந்தால் கூட எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் அனைவருடனும் அன்பாக பழகும் குணம் கொண்ட நடிகை சன்னி லியோன்... பாஸ்போர்ட் புகைப்படத்தில் மிகவும் குண்டாக இருப்பது போல் இருக்கிறார்.
நயன்தாராவுக்கு அடுத்தபடியாக, தென்னிந்திய ரசிகர்கள் மனதை கடந்த 20 வருடங்களாக ஆட்சி செய்து வரும் சென்னை பியூட்டியான த்ரிஷா, பாஸ்போர்ட்டில் மிகவும் எளிமையாக சல்வார் அணிந்து, ஃப்ரீ ஹேர் ஸ்டைலில் உள்ளார். த்ரிஷாவுக்கு 40 வயதாகி விட்டாலும், இவருடைய லுக் பாஸ்போர்ட்டில் உள்ளது போல் தான் இருக்கிறது என்பதே நெட்டிசன்களின் கருத்து.
46
Aishwarya Rai
ஐஸ்வர்யா ராய்:
உலக அழகி ஐஸ்வர்யா ராய்.. தன்னுடைய பாஸ்போர்ட்டில் மிகவும் இளமையான லுக்கில் இருக்கிறார். இப்போது உள்ள ஐஸ்வர்யா ராய்க்கு, இந்த பாஸ்போர்ட் புகைப்படத்துக்கு நிறைய வித்தியாசம் இருப்பதை பார்க்க முடிகிறது.
பாலிவுட் மற்றும் கோலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமானவர் கங்கனா. இவர் தமிழில் நடித்த தலைவி, சந்திரமுகி 2 ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகி தோல்வியை தழுவினாலும், பாலிவுட் குயூனாகவே வலம் வருகிறார். இவருடைய புகைப்படம் பாஸ்போர்ட்டில் சில மாற்றங்களுடன் இருப்பதை பார்க்க முடிகிறது.
66
Shahrukhkhan
ஷாருக்கான்:
பாலிவுட் கிங் கான் ஷாருக்கான், முகம் பாஸ்போர்ட்டில் இப்போது எப்படி இருக்கிறாரோ அதே போல் தான் உள்ளது. உயிரே படத்தில் பார்த்த ஷாருக்கான் போல் இருக்கிறீர்கள் என, ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் ஷாருக்கானின் பாஸ்போர்ட் புகைப்படத்திற்கு கமெண்ட் செய்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.