தனுஷுக்கு ஒரு நியாயம்; உங்களுக்கு ஒரு நியாயமா? நயன்தாரா & விக்கியை வறுத்தெடுத்த பிரபலம்! ஏன்?

First Published | Nov 16, 2024, 6:48 PM IST

Nayanthara Vs Dhanush : நயன்தாரா மற்றும் நடிகர் தனுஷ் விவகாரத்தில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் நடிகர் தனுஷுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

vignesh and nayanthara

பிரபல நடிகர் தனுஷ், நடிகை நயன்தாராவிற்கு நோட்டீஸ் அனுப்பியதும், அதற்கு பதில் தாக்குதல் கொடுக்கும் வகையில் நயன்தாரா பரபரப்பு அறிக்கை ஒன்று வெளியிட்டு இருப்பதும் தற்பொழுது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியிருக்கிறது. Netflix தளத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமண வீடியோ ஒரு தொடராக வெளியாக உள்ள நிலையில் அதில் "நானும் ரவுடி தான்" திரைப்படத்திலிருந்து ஒரு பாடல் பயன்படுத்தப்படவிருந்து.

ஸ்ருதி முதல் நஸ்ரியா வரை; Netflix விவகாரத்தில் நயன்தாராவுக்கு ஆதரவாக நிற்கும் தனுஷ் பட நாயகிகள்!

Actor Dhanush

அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில், மூன்று வினாடிகள் வரும் அந்த வீடியோவிற்கு சுமார் 10 கோடி ரூபாய் தனுஷ் தரப்பில் இருந்து கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து காட்டமான பதிவு ஒன்றை தனுஷுக்கு எதிராக நயன்தாரா வெளியிட, விக்னேஷ் சிவனும் தனுஷுக்கு எதிராக ஒரு பதிவினை வெளியிட்டார். இது ஒருபுறம் என்றால் பல முன்னணி நடிகைகள் தற்பொழுது நயன்தாரா பக்கம் நின்று தனுஷுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். இந்த சூழலில் பிரபல தயாரிப்பாளரும், இசையமைப்பாளரும், இயக்குனருமான எஸ்எஸ் குமரன் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை தாக்கி ஒரு பதிவினை வெளியிட்டு இருக்கிறார்.

Tap to resize

LIC Movie

இப்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில், இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் LIC. இந்த படத்தின் தலைப்பு அறிவிக்க பட்ட நேரத்திலேயே அது மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் எஸ்.எஸ் குமரனிடம் தான் அந்த தலைப்புக்கான உரிமம் அப்போது இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அதை மேற்கோள் காட்டி ஒரு பதிவினை வெளியிட்டு இருக்கிறார் குமரன். அதில் திரு. விக்னேஷ் சிவன் என் அனுமதியில்லாமல் எல்ஐசி பட தலைப்பை பயன்படுத்தியதை அனைவரும் அறிவார்கள்.

SS Kumaran

எல்ஐசி பட தலைப்பு என் நிறுவனத்தின் பெயரில் இருப்பதை அறிந்த விக்னேஷ் சிவன், என் மேலாளர் மூலம் என்னை தொடர்பு கொண்டார். இருப்பினும் அந்த தலைப்புக்கும் என் கதைக்கும் மிக நெருக்கமான சம்பந்தம் இருப்பதால் அந்த தலைப்பை நான் கொடுக்காத நிலையிலும், அதே தலைப்பை அவருடைய படத்திற்கு தலைப்பாக வைத்து விளம்பரப்படுத்த தொடங்கினார். இது எந்த வகையில் நியாயமாகும்? "உன்னால் என்ன செய்து விட முடியும்" என்கின்ற ஒரு அதிகார நிலையை தானே இது காட்டுகிறது. உங்களை விட பலம் வாய்ந்தவர்கள் என்றால் இரண்டு வருடம் பொறுமையோடு காத்திருந்து அவர்களிடம் அனுமதி கேட்கிறீர்கள். 

ஆனால் என்னை போன்ற எளியவர்களை ஏமாற்றுகிறீகள், உங்களுடைய செயலுக்கு நிச்சயம் நீங்கள் கடவுளின் மன்றத்தில் பதில் சொல்ல நேரிடும், என்று மிகவும் கட்டமான பதிவை வெளியிட்டுள்ளார். 

ரம்யா பாண்டியன் வெட்டிங் ரிசப்ஷனில் ஒன்று திரண்ட பிக்பாஸ் பிரபலங்கள்! வைரல் போட்டோஸ்!

Latest Videos

click me!