
நடிகை ரம்யா பாண்டியனுக்கு, நவம்பர் 8-ஆம் தேதி ரிஷிகேஷில் உள்ள கங்கை நதிக்கரை ஓரம் அமைந்துள்ள கோவிலில் எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்ததை தொடர்ந்து, சென்னையில் நேற்று மிகப்பிரமாண்டமாக திருமண வரவேற்பு நடந்து முடிந்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
வெள்ளி திரையில் ஹீரோயினாக அறிமுகமாக இருந்தாலும், சின்ன திரையில் 'குக் வித் கோமாளி', 'பிக் பாஸ்' போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமானவர் ரம்யா பாண்டியன்.
அமரன் படத்திற்கு எதிர்ப்பா? திரையரங்கின் மீதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு!
இதைத் தொடர்ந்து பிக் பாஸ் ஓ டி டி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட ரம்யா பாண்டியன், அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார்.
குறிப்பாக எளிமையான புடவையில்... அதிகம் மேக் கப் போடாமல், இடையழகை காட்டி ரம்யா பாண்டியன் எடுத்து கொண்ட மொட்டை மாடி போட்டோ ஷூட் தான் இவரை ஒரே நாளில், பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைய செய்தது.
நடிப்பை தாண்டி இயற்கை ஆர்வலரான ரம்யா பாண்டியன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவருக்கும் கொடுக்கப்பட்ட செடிகளை அழகாக பராமரித்து, கமலஹாசனின் வாழ்த்துக்களை பெற்றார். அதேபோல் கமலஹாசன் பிக் பாஸ் பைனலில் போது, தன்னுடைய அன்பளிப்பாக விதவிதமான செடிகளின் விதைகளை கொடுத்து வாழ்த்தி இருந்தார்.
2024 உலக அளவில் மாஸ் வசூலோடு ஓப்பனிங் கண்ட டாப் 5 தமிழ் படங்கள்!
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர், தரமான கதைக்களம் கொண்ட படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த ரம்யா பாண்டியன், பல படங்களின் கதைகளை நிராகரித்ததாக கூறப்படுகிறது.
மேலும் தற்போது இவருடைய கைவசம் 'இடும்பன்கா'ரி என்கிற திரைப்படம் மட்டுமே உள்ள நிலையில், மற்ற படங்கள் எதையும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை.
திரையுலகில் சோகம்; 'ஒரு கிடாயின் கருணை மனு' பட இயக்குனர் சுரேஷ் சங்கையா மரணம்!
இந்நிலையில் கடந்த ஆண்டு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ஆசிரமத்திற்கு சென்று யோகா பயிற்சி பெற்று வந்த ரம்யா பாண்டியன், யோகோ ஆசிரியருக்கான சான்றிதழையும் பெற்றார். அங்கு ரம்யா பாண்டியனுக்கு யோகா ஆசிரியராக இருந்தவர் தான் லோவல் தவான்.
இவருக்கும் நட்பாக துவங்கிய பழக்கம், பின்னர் காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து இவர்களுடைய காதலை இருவீட்டு பெற்றோரும் ஏற்றுக்கொண்ட நிலையில், ரம்யா பாண்டியன் மற்றும் லோவல் தவான் இருவருக்கும் நவம்பர் 8-ஆம் தேதி ரிஷிகேஷில் உள்ள கங்கை நதிக்கரை ஓரம் அமைந்துள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுடைய திருமணத்தில் அருண் பாண்டியன் குடும்பத்தினர், ரம்யா பாண்டியன் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அதே போல் லோவல் தவான் குடும்பத்தினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சோபிதாவை தொடர்ந்து நாகர்ஜுனா வீட்டு வாரிசை திருமணம் செய்ய போகும் விஜய் பட ஹீரோயின்?
இதைத்தொடர்ந்து ரம்யா பாண்டியனின் திருமண வரவேற்பு நவம்பர் 15ஆம் தேதி அதாவது நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மிக பிரம்மாண்டமாக நடந்துள்ளது. இதில் ஏராளமான பிரபலங்கள் மற்றும் பிக் பாஸ் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு லோவல் தவான் மற்றும் ரம்யா பாண்டியனை வாழ்த்தி உள்ளனர்.
ரம்யா பாண்டியன் வெள்ளை நிற லெஹன்கா உடையில் தேவதை போல் ஜொலிக்க, லோவல் தவான் கருப்பு நிற கோட் சூட் அணிந்து மிகவும் மாஸாக உள்ளார். மேலும் ரம்யா பாண்டியன் திருமண வரவேற்பில் சுஜா வருணி, வாணி போஜன், ரியோ, வனிதா விஜயகுமார், போன்ற பலர் கலந்து கொண்டுள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை இவர்களுக்கு தெரிவித்து வருகிறார்கள்.