அமரன் படத்திற்கு எதிர்ப்பா? திரையரங்கின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு!

First Published | Nov 16, 2024, 5:18 PM IST

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம், திரையிடப்பட்ட திரையரங்கின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம், தற்போது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Amaran Movie Latest news

நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் அக்டோபர் 31-ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம் அமரன். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும் இதுவரை ரூ.275 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

Petrol Bomb Attack

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில், அமரன் திரைப்படம் திரையிடப்படும் திரையரங்கில் எதிர்பாராத அசம்பாவிதம் நடந்துள்ளது. அடையாளம் தெரியாத இருவர் திரையரங்கின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியான நிலையில், இதுகுறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

2024 உலக அளவில் மாஸ் வசூலோடு ஓப்பனிங் கண்ட டாப் 5 தமிழ் படங்கள்!

Tap to resize

Sivakarthikeyan Movie

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான பிரின்ஸ், அயலான் போன்ற படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது. மாவீரன் திரைப்படமும் சுமாரான வெற்றியை கண்ட நிலையில், தற்போது வெளியாகியுள்ள அமரன் திரைப்படம் இவரது கேரியரையே தற்போது தூக்கி நிறுத்தும்படியான சூப்பர் டூப்பர் வெற்றி படமாக அமைத்துள்ளது. 
 

Amaran Movie

'அமரன்' படத்தில் முகுந்த் வரதராஜன்  வேடத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க, அவரது மனைவி ரெபேக்கா வர்கீஸ் வேடத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார். சாய் பல்லவி இந்த படத்தில் மிகவும் சவாலான கதாபாத்திரத்தில் மிகவும் நேர்த்தியாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க,  கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். 

திரையுலகில் சோகம்; 'ஒரு கிடாயின் கருணை மனு' பட இயக்குனர் சுரேஷ் சங்கையா மரணம்!
 

Petrol Bomb Attack

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இஸ்லாமிய இயக்கங்கள் அமரன் படத்திற்கு எதிராக போராடிய நிலையில்  தற்போது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளதால், காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இந்தத் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் இந்த பெட்ரோல் குண்டு வீச்சு அமரன் படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவா? அல்லது உள்ளூர் பிரச்சினை காரணமா? என பல கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

Latest Videos

click me!