வேட்டையனிடம் இருந்து விலகி சிவாவிடம் சிக்கிய கங்குவா; அமரன் படத்தின் 16 நாள் வசூல் எவ்வளவு?

Amaran Box Office Collection : தீபாவளி திருநாளுக்கு வெளியான சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் இப்பொது வரை வசூல் மழையில் நனைந்து வருகின்றது.

Amaran Movie

பிரபல நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி வெளியாகி உலக அளவில் கலவையான விமர்சனங்களோடு பயணித்து வரும் திரைப்படம் தான் கங்குவா. முற்றிலும் மாறுபட்ட ஒரு கதை களத்தில் நடிகர் சூர்யா இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார். பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இந்த திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். 

நேற்று வெளியான அதிகாரப்பூர்வ தகவலின்படி கங்குவா திரைப்படம் உலக அளவில் முதல் நாளில் சுமார் 56 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. ஆனால் எதிர்பார்த்த அளவிலான வசூல் இது இல்லை என்று கூறப்படுகிறது. காரணம் ஏற்கனவே தளபதி விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படம் முதல் நாளில் உலக அளவில் 126.2 கோடியும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் உலக அளவில் முதல் நாளில் 70 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.

அக்காவுக்கு கேக் ஊட்டிவிடும் அருண் விஜய்! அனிதா விஜயகுமாரின் பேமிலி போட்டோஸ்!

Sivakarthikeyan

உலக அளவில் கங்குவா திரைப்படம் சுமார் 2000 கோடி ரூபாய் வரை வசூல் செய்யும் என்று பலமுறை நம்பிக்கையோடு பேசி இருந்தார் இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. இருப்பினும் அந்த அளவிற்கு கங்குவா திரைப்படம் வசூல் செய்யுமா என்பது இப்போது சந்தேகத்திற்கு இடமாக மாறி இருக்கிறது. சூர்யாவின் நடிப்பு அதீதமாக பாராட்டப்படும் அதே நேரம் சிறுத்தை சிவாவின் திரைக்கதை மிகப்பெரிய தொய்வை ஏற்படுத்துவதாகவும், தேவையற்ற சத்தங்கள் படம் முழுக்க இருப்பதாகவும் படத்தை பார்த்த பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படி வெளியான 2 நாட்களிலேயே பெரிய அளவில் நெகட்டிவ் விமர்சனங்களை கங்குவா சந்தித்து வரும் நிலையில், தனது இரண்டாவது வாரத்தை கடந்து மூன்றாவது வாரத்தில் சிறப்பாக பயணித்து வருகிறது சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம்.


Suriya

பிரபல இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், முதல் முறையாக உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் இந்த அமரன் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். தமிழகத்தை சேர்ந்த மறைந்த இராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் கதாபாத்திரத்தை தான் இந்த திரைப்படத்தில் மிக நேர்த்தியாக ஏற்று நடித்து மக்கள் மனதை வெகுவாக கவர்ந்து வருகிறார் சிவகார்த்திகேயன். அது மட்டுமல்லாமல் இப்படத்தில் பிரபல நடிகை சாய் பல்லவியின் கதாபாத்திரம், பலருடைய நெஞ்சங்களை கனத்த இதயமாக மாற்றும் அளவிற்கு மிக நேர்த்தியாக இருப்பதாகவும் பலர் கூறி வருகின்றனர். சிவகார்த்திகேயனுக்கு அவருடைய கேரியர் பெஸ்ட் திரைப்படமாக மாறி இருக்கும் அமரன் உலக அளவில் சுமார் 300 கோடி தாண்டி வசூல் செய்து வருகிறது.

Amaran Collection

தற்பொழுது வெளியான சில தகவல்களின்படி 16-வது நாளான இன்று சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் இந்திய அளவில் சுமார் 4 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும், இதுவரை இந்திய அளவில் இந்த 16 நாட்களில் 175 கோடி தாண்டியும் அமரன் படம் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அமரன் படம் OTT தலத்தில் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், திரையரங்க உரிமையாளர்கள் வைத்த கோரிக்கையை அடுத்து netflix நிறுவனம் தன்னுடைய OTT ரிலீஸ் தேதியை தள்ளி வைத்து இருக்கிறது என்பது மிகப்பெரிய முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது.

திரையுலகில் சோகம்; 'ஒரு கிடாயின் கருணை மனு' பட இயக்குனர் சுரேஷ் சங்கையா மரணம்!

Latest Videos

click me!