ரூ.10 கோடியா வேணும்; வாழு வாழ விடு – தனுஷின் பழைய வீடியோவை பகிர்ந்து தரமான பதிலடி கொடுத்த விக்னேஷ் சிவன்!

Published : Nov 16, 2024, 03:49 PM IST

Nayanthara Husband Vignesh Shivan Shared Dhanush Old Video : ரூ.10 கேட்டு நோட்டீஸ் அனுப்பிய அறிக்கையை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு அதனுடன் தனுஷின் பழைய வீடியோவை வாழு வாழ விடு என்ற கேப்ஷனில் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.

PREV
16
ரூ.10 கோடியா வேணும்; வாழு வாழ விடு – தனுஷின் பழைய வீடியோவை பகிர்ந்து தரமான பதிலடி கொடுத்த விக்னேஷ் சிவன்!
Nayanthara and Vignesh Shivan, Dhanush

Nayanthara Husband Vignesh Shivan Shared Dhanush Old Video : நயன்தாரா மற்றும் தனுஷின் விவகாரம் தான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாபிக். தனது நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ள ஆவணப்படத்திற்கு நானும் ரௌடி தான் படத்தின் பாடலை பயன்படுத்த அனுமதி கேட்டு அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்ட நிலையிலும், 3 வினாடிகள் நானும் நௌடி தான் பட காட்சிகளை பயன்படுத்தியதற்கு ரூ.10 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பியது தொடர்பாகவும் நயன்தாரா மற்றும் தனுஷ் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தெளிவாக பார்க்கலாம்…

26
Nayanthara: Beyond the Fairy Tale, Dhanush

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா இருவரும் முக்கிய ரோலில் நடித்து வெளியான படம் நானும் ரௌடி தான். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு திரைக்கு வந்த இந்தப் படத்தின் மூலமாக நயன் தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் காதல் மலர்ந்தது. அதனால் தான் என்னவோ இருவருக்கும் இந்தப் படத்தின் மீது அதிக அக்கறையும் பற்றும் இருக்கிறது. காதல் என்று கூட சொல்லலாம்.

36
Nayanthara and Dhanush Issue

இந்த காதல் நாளடைவில் திருமணமாக மாறியது. 7 ஆண்டுகளுக்கு பிறகு நயன் மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண வீடியோவை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு விற்றுள்ளனர். Nayanthara: Beyond the Fairy Tale’ என்ற டைட்டிலில் ஆவணப்படமாக நாளை 18ஆம் தேதி நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.

இந்த ஆவணப்படத்தில் நயன்தாராவின் நானும் ரௌடி தான் படத்தின் பாடல்களை பயன்படுத்த தனுஷிடம் நயன் தாரா அனுமதி கேட்டிருக்கிறார். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக தனுஷ் அதற்கு அனுமதி தரவில்லை. இந்த நிலையில் தான் நானும் ரௌடி தான் படத்தில் தனியாக எடுக்கப்பட்ட காட்சிகள் 3 வினாடி காட்சியாக நயன்தாரா தனது ஆவணப்படத்தில் பயன்படுத்தியிருந்தார். இது தொடர்பான காட்சிகள் நெட்பிளிக்ஸ் தளத்தில் முன்னோட்டமாக வெளியானது.

46
Nayanthara: Beyond the Fairy Tale

இந்த நிலையில் தான் அந்த நானும் நௌடி தான் படத்தில் இடம் பெற்ற 3 வினாடி காட்சிக்கு தனுஷ் ரூ.10 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். இதற்கு நயன்தாரா 3 பக்கம் கொண்ட அறிக்கையை வெளியிட்டு பதில் அளித்திருந்தார். அதில் தனுஷ் மீது பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். உங்களின் பழிவாங்கும் செயலில் நானும், என் கணவரும் மட்டுமின்றி, ஆவணப்பட பணிகளில் பங்காற்றிய அனைவரும் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இந்த ஆவணப்படத்தில் என் வாழ்வின் மகத்துவமான காதலை கண்டடைந்த நானும் ரௌடி தான் படம் இல்லாத வலி மிகவும் கொடுமையானது.

56
Nayanthara And Dhanush

இந்த ஆவணப்படத்தில் நானும் ரௌடி தான் படத்தின் காட்சிகளையும், புகைப்படங்களையும், பாடல்களையும் பயன்படுத்தும் வகையில் உங்களிடம் தடையில்லா சான்றிதழ் பெற உங்களிடம் நடந்த எல்லா போராட்டங்களும் தோல்வியில் முடிந்தது. 2 ஆண்டுகளாக காத்திருந்து எந்த பலனும் கிடைக்காத நிலையில், மீண்டும் படப்பிடிப்பு நடத்தியே தற்போது ஆவணப்படத்தை தயாரித்துள்ளோம். சட்ட ரீதியாக நீங்கள் அனுப்பிய நோட்டீஸை நான் சட்ட ரீதியாகவே எதிர்கொள்வேன் என்று கூறியிருந்தார்.

66
Nayanthara and Vignesh Shivan

நயன் தாராவின் அறிக்கைக்கு பல முன்னணி நடிகைகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதில் ஐஸ்வர்யா ராஜேஷ், நஸ்ரியா, பார்வதி, ஸ்ருதிஹாசன், மஞ்சிமா மோகன், அஞ்சு சூரியன், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தான் தனது மனைவி நயன்தாராவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தனுஷ் பேசிய பழைய வீடியோ ஒன்றை விக்னேஷ் சிவன் பகிர்ந்து அதில் வாழு வாழ விடு என்று என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ரூ.10 கோடி கேட்டு தனுஷ் அனுப்பிய நோட்டீசை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் தனுஷ் கூறியிருப்பதாவது: ஒருவர் மீது இருக்கும் அன்பு மற்றொருவர் மீது வெறுப்பாக மாறக் கூடாது. அப்படி மாறினால் அந்த உணர்வுக்கு அர்த்தம் இல்லை. யார் ஒருவரையும் பிடித்திருந்தால் அவரை கொண்டாடுங்கள். பிடிக்கவில்லை என்றால் விட்டு விலகிவிடுங்கள். வாழுங்கள், வாழ விடுங்கள். யாரும் யாரையும் வெறுக்க வேண்டிய அவசியமே கிடையாது என்பது போன்று பேசியிருப்பார். அந்த வீடியோவை தான் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

விக்னேஷ் சிவன் பகிர்ந்த தனுஷ் பேசிய பழைய வீடியோ

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories