தனுஷுக்கு நயன்தாரா சொன்ன ஜெர்மன் வார்த்தையின் அர்த்தம் இதுதானா? என்ன இப்படி சொல்லிட்டாங்க!

First Published | Nov 16, 2024, 3:26 PM IST

நயன்தாராவின் திருமண ஆவணப்பட வெளியீட்டில் தனுஷ் தடையாக இருந்ததாகவும், பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் நயன்தாரா குற்றம் சாட்டியுள்ளார். "Schadenfreude" என்ற ஜெர்மன் வார்த்தையை குறிப்பிட்டுள்ளார். அந்த வார்த்தையின் அர்த்தம் என்ன என்று தெரியுமா?

Nayanthara - Dhanush Clash

நயன்தாராவின் திருமணம் மற்றும் வாழ்க்கை தொடர்பான ஆவணப்படம் நெட்ஃபிளிக்ஸில் நவம்பர் 18-ம் தேதி வெளியாக உள்ளது. Nayanthara : Beyond the Fairytale என்ற பெயரில் உருவாகி உள்ள இந்த ஆவணப்படத்தை வெளியிட தனுஷ் தடையாக இருந்ததாகவும், அவர் தன் மீதான தனிப்பட்ட வெறுப்பால் தனுஷ் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் நடிகை நயன்தாரா பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். 

Nayanthara - Dhanush Clash

நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளை பயன்படுத்தியதற்காக 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு தனுஷ் நோட்டிஸ் அனுப்பி உள்ளது அநாகரிகமான செயல் என்றும், எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் இந்த அநாகரிக செயலை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் நயன்தாரா காட்டமாக பதிவிட்டுள்ளார். ரசிகர்களை முன்பு நீங்கள் காட்டிக்கொள்ளும் முகம் வேறு, உங்களின் உண்மையான முகம் வேறு என்றும் தனுஷை அவர் விமர்சித்திருந்தார். 

Tap to resize

Nayanthara - Dhanush Clash

அந்த கடிதத்தின் இறுதி பத்தியில்,  அடுத்த இசை வெளியீட்டு விழாவில், இது எதுவுமே நடக்கவில்லை என மறுத்து கற்பனையாக சில கதைகளை புனைந்து, அதனையே உண்மையைப் போல் நீங்கள் சொல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.  ஆனால், அதனை கடவுள் பார்த்துக் கொண்டிருப்பார் என்பதை மறந்து விடாதீர்கள். 

Nayanthara Danush

இந்த நேரத்தில், ஜெர்மனிய மொழியின் “Schadenfreude” எனும் வார்த்தையை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன், அதன் அர்த்தத்தை தெரிந்துக் கொண்டு இனி யாருக்கும் அதனை செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என நயன்தாரா குறிப்பிட்டிருந்தார். கடந்த காலத்தில் உங்களோடு பயணித்தவர்களின் வெற்றியை எந்த கோபமும், சமாதானத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுகொள்வதாகவும் நயன்தாரா தனது கடிதத்தில் கூறியிருந்தார்.

nayanthara

இந்நிலையில் "Schadenfreude" என்ற வார்த்தையின் அர்த்தம் என்று பலரும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதாவது அடுத்தவர் துயரத்தை கண்டு ஒருவர் இன்பம் கொள்வது அல்லது திருப்தி அடைவது என்பதே அந்த ஜெர்மானிய வார்த்தையின் பொருள் ஆகும். 

Latest Videos

click me!