Gautami in Zee Tamil Serial Nenjathai Killadhe : நடிகை கவுதமி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு டாப் சீரியல் ஒன்றில் நடிக்க இருப்பது தொடர்பான புரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.
Gautami in Zee Tamil Serial Nenjathai Killadhe : 80ஸ் மற்ற்ம் 90ஸ்க்கு பிடித்தமான ஹீரோயின் யார் என்றால் யோசிக்காமல் சொல்லிடுவாங்க. அவங்க தான் நடிகை கவுதமி. அப்படியொரு அழகு. ரஜினிகாந்த் நடிப்பில் வந்த குரு சிஷ்யன் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கவுதமி. அதன் பிறகு எங்க ஊரு காவல்காரன், ரத்த தானம், நம்ம ஊரு நாயகன், வாய்க்கொழுப்பு, பிள்ளைக்காக, எங்க ஊரு மாப்பிள்ளை, என் தங்கை, தர்மம் வெல்லும், பணக்காரன், நம்ம ஊரு பூவாத்தா என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
24
Actress Gautami in Nenjathai Killadhe Serial
1987ல் தொடங்கி, 1998 வரை ஏராளமான படங்களில் நடித்துள்ள கவுதமி, 2006ல் வந்த சாசனம் என்ற படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்குள் எண்ட்ரி கொடுத்தார். 2015ல் கமல் ஹாசன் நடித்த பாபநாசம் படத்தில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என்று பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் பிரபலமாக இருக்கிறார். இந்த நிலையில் தான் ராதிகா, அம்பிகா போன்று தற்போது கவுதமியும் சின்னத்திரை பக்கம் வந்துள்ளார். இது தொடர்பான புரோமோ வீடியோ வைரலாகி வருகிறது. ஆம், ஜீ தமிழில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நெஞ்சத்தை கிள்ளாதே என்ற தொலைக்காட்சி தொடரில் எண்ட்ரி கொடுக்கும் வீடியோ தான் தற்போது டிரெண்டிங்.
34
Nenjathai Killadhe Promo, Gautami
இந்த சீரியலில் ஹீரோயினான ரேஷ்மாவின் அம்மாவாக கவுதமி நடிப்பதாக சொல்லப்படுகிறது. ஹீரோவாக நடிகர் ஜெய் ஆகாஷ் நடித்து வருகிறார். நடிகை கவுதமி எண்ட்ரி கொடுக்கும் புரோமோ வீடியோவில் இது மதுமிதாவிற்கு ரொம்ப பிடித்த ஒன்னு என்று போட்டோ பிரேம் கொண்டு வந்து கொடுக்கிறார்கள்.
அதன் பிறகு அந்த பிரேமில் கவுதமியின் புகைட்டம் இடம் பெற்றிருக்கிறது. கவுதமி என்றால் மதுமிதாவிற்கு ரொம்ப பிடிக்கும். இதைவிட பெரிய கிஃப் மதுமிதாவிற்கு இருக்க முடியாது என்று பேசுகிறார்கள். அதற்கு ஜெய் ஆகாஷ் நான் கொடுப்பேன். இதைவிட பெஸ்ட் கிஃப்ட் நான் கொடுக்க போகிறேன். மதுமிதா அது உங்களுக்கான கிஃப்ட் நீங்களே போயி ரிசீவ் பண்ணுங்க என்கிறார்.
44
Nenjathai Killadhe Serial
மதுமிதா சென்று கதவை திறக்க கவுதமி உள்ளே எண்ட்ரி கொடுக்கிறார். நீ ரொம்பவே லக்கி கேர்ள் என்று மதுமிதாவை கவுதமி பாராட்டுகிறார். அப்படியே அந்த புரோமோ வீடியோ முடிகிறது. கவுதமி வந்த தோரணையை பார்க்கையில் அவர் வசதியான ஒரு கதாபாத்திரத்தில் இந்த தொடரில் நடிக்கிறார் என்று தெரிகிறது. எது எப்படியோ இனி ரசிகர்களுக்கும் சீரியல் பார்க்கும் குடும்ப பெண்களுக்கும் கொண்டாட்டம் தான்.