கீர்த்தி சுரேஷுக்கு டிசம்பரில் திருமணம்? மாப்பிள்ளை யார் தெரியுமா? தீயாக பரவும் தகவல்!

First Published | Nov 16, 2024, 12:23 PM IST

நடிகை கீர்த்தி சுரேஷ் டிசம்பரில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், கோவாவில் திருமணம் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Keerthy Suresh

பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சுரேஷ் – நடிகை மேனகா தம்பதியின் இளைய மகள் தான் கீர்த்தி சுரேஷ். மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக மாறினார்.

தனது தந்தை தயாரிப்பில் வெளியான பைலட்ஸ், அச்சநேயனேநிக்கிஷ்டம், குபேரன் போன்ற மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். பின்னர் படிப்பில் கவனம் செலுத்த தொடங்கிய கீர்த்தி சுரேஷ் ஃபேஷன் டிசைனிங் படிப்பை முடித்தார். 

Keerthy Suresh

2013-ம் ஆண்டு மீண்டும் திரையுலகிற்கு திரும்பினார். பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான கீதாஞ்சலி படத்தின் மூலம் மலையாள திரையுலகில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து மலையாளத்தில் ரிங் மாஸ்டர் என்ற படத்தில் நடித்தார். 

Tap to resize

Keerthy Suresh

தொடர்ந்து இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து ரஜினி முருகன், ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் என பல படங்களில் நடித்தார். குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தார். 

ஆனால் கீர்த்தி சுரேஷின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் அது நடிகையர் திலகம் படம். மறைந்த நடிகை சாவித்ரியின் பயோபிக் படமான இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். இந்த படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் அவர் வென்றார். 

Keerthy Suresh

தொடர்ந்து சண்டக்கோழி 2, சாமி 2, அண்ணாத்த என பல படங்களில் நடித்த அவர் கடைசியாக ரகு தாத்தா படத்தில் நடித்திருந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம் வருகிறார் கீர்த்தி சுரேஷ். 

Keerthy Suresh

கீர்த்தி சுரேஷ் திருமணம் பற்றி வதந்திகள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. 2 ஆண்டுகளுக்கு கீர்த்தி சுரேஷ் கேரளாவைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக வதந்திகள் வெளியாகின. 

கடந்த ஆண்டு பிரபல இசையமைப்பாளரும் அனிருத் உடன் கீர்த்தி சுரேஷ் டேட்டிங் செய்வதாக வதந்திகள் பரவியது. இந்த ஜோடி விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் கூறப்பட்டது. எனினும் கீர்த்தி சுரேஷின் தந்தை அது தவறான செய்தி என்று இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Keerthy Suresh

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் திருமணம் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. டிசம்பரில் அவர் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், கோவாவில் இந்த திருமணக் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றும், கீர்த்தி சுரேஷ் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Keerthy Suresh

மணமகன் அவரின் உறவினர் என்றும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. எனினும் புதிய ஊகங்களுக்கு கீர்த்தி சுரேஷ் இன்னும் பதிலளிக்கவில்லை.

Latest Videos

click me!