
Siva Reunites With Ajith Kumar : நடிகர் கார்த்தியை வைத்தை சிறுத்தை படத்தை கொடுத்தவர் இயக்குநர் சிவா. ஆக்ஷன் காமெடி கதையை மையப்படுத்திய சிறுத்தை படம் இயக்குநர் சிவாவிற்கு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. வெறும் ரூ.13 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் 13 ஆண்டுகளுக்கு முன்னரே ரூ.30 கோடி வரையில் வசூல் குவித்தது. சிறுத்தை படத்திற்கு பிறகு நடிகர் அஜித் குமாருடன் கைகோர்த்தார்.
அஜித் மற்றும் சிவா காம்பினேஷனில் அஜித்தை வேஷ்டி சட்டையில் மாஸான லுக்கில் காட்டிய படம் தான் வீரம். அண்ணன் தம்பி, குடும்பக் கதையை மையப்படுத்திய வீரம் ரூ.45 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூ.130 கோடி வரையில் வசூல் கொடுத்தது. வீரம் அஜித் மற்றும் சிவாவிற்கு நம்பிக்கையை கொடுக்கவே மீண்டும் இவர்கள் காம்பினேஷனில் வேதாளம் படம் வந்தது.
வேதாளம் அஜித்தை வித்தியாசமான கண்ணோட்டத்தில் காட்டியது. அதற்காக சிவாவிற்கு ஒரு பெரிய சல்யூட். இன்றும் ரசிகர்கள் கொண்டாடும் ஒரு பாடல் என்றால் அது ஆலுமா டோலுமா பாடல் தான். பட்டி தொட்டியெங்கும் ஹிட் கொடுத்தது. இன்றும் ரசிகர்கள் அந்த ஸ்டெப்பை போட்டு கொண்டாடத்தான் செய்கிறார். படம் வெளியாகி 9 ஆண்டுகளை கடந்த நிலையில் இந்த படம் ரூ.150 கோடி வரையில் வசூல் குவித்தது.
அண்ணன் தங்கை கதையை ஆக்ஷனோடு காட்டியிருந்தார். அஜித் இந்த படத்தில் ஒரு அண்ணன் எப்படி இருக்க வேண்டுமோ அதற்குரிய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அண்ணனாகவே வாழ்ந்துள்ளார். படத்தில் அவர் பேசும் டயலாக் கேட்கும் போதே இன்னமும் மெய்சிலிர்க்க வைக்கிறது. அதன் பிறகு முழுக்க முழுக்க ஆக்ஷனை கொண்ட விவேகம் படத்தை கொடுத்தார்.
மீண்டும் 4ஆவது முறையாக விஸ்வாசம் படத்தை கொடுத்தார். வரிசையாக அஜித் இயக்குநர் சிவா படத்திலேயே நடித்தார். வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் என்று மாஸ் படங்களில் நடித்து ஹிட்டும் கொடுத்தார். அண்ணன் தம்பி, அண்ணன் தங்கை கதைகளை கொடுத்த சிவாவிற்கு அப்பா – மகள் உறவு கதையும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. அப்படி ஒரு அப்பா மகள் படம் தான் விஸ்வாசம்.
ஒரு கணவனாக, அப்பாவாக அஜித் இந்தப் படத்தில் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டியிருப்பார். படம் முழுவதும் அஜித் வேஷ்டி சட்டை தான் நடித்து அசத்தியிருப்பார். இப்படியெல்லாம் படங்களை கொடுத்த இயக்குநர் சிவா நடிகர் சூர்யாவை வைத்து ஏன் கங்குவா படத்தை எடுத்தார் என்று தெரியவில்லை. ராஜமௌலி, ஷங்கர் போன்று பிரம்மாண்ட இயக்குநர் என்று பெயர் எடுக்க வேண்டும் என்று நினைத்திருப்பார் போல…
அதுக்கு தான் ரூ.350 கோடி பட்ஜெட்டில் கங்குவா படத்தை எடுத்திருக்கிறார். படத்தில் கதையும் இல்ல ஒன்னும் இல்ல. கடைசி வர கத்திக்கிட்டு தான் இருக்காங்கனு நான் சொல்லல படம் பார்த்தவர்கள் அப்படி விமர்சனம் கொடுத்திருக்கிறார்கள் என்பதை நீங்களே பார்த்திருப்பார்கள். இதில் இசையும் காதுகளுக்கு இரைச்சலாகவும் வருவதாக வந்த விமர்சனத்தை தொடர்ந்து தியேட்டர் உரிமையாளர்களுக்கு 2 புள்ளிகள் குறைத்து படத்தை திரையிட கேட்டுக் கொண்டதாக தயாரிப்பாளர் தரப்பிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
அப்படி சவுண்டை குறைத்து வெளியிட்டால் படம் நல்லா இருக்க வேண்டாமா? படம் முழுவதையும் ஒன்றை ஆளாக சூர்யா தான் தனது தோளில் படத்தை சுமந்து சென்றிருக்கிறார். 14ஆம் தேதி வெளியான கங்குவா படம் 2 நாட்களில் ரூ.58.62 கோடி வசூல் செய்துள்ளது என்று தயாரிப்பு நிறுவனம் ஸ்டூடியோ க்ரீன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
கங்குவா எதிர்மறையான விமர்சனங்களை கொடுத்து வந்த நிலையில் இயக்குநர் சிவா இனிமேல் இது போன்ற படங்களை தவிர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு தனது டிரேட் மார்க்கான குடும்ப கதைக்கு திரும்ப செல்வார் என்றும், அதற்காக நடிகர் அஜித்தை அணுகுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் சிவா மற்றும் அஜித் காம்போ தான் கோலிவுட்டில் ஹிட் கொடுத்திருக்கிறது. சூர்யாவுக்கு முன்னதாக நடிகர் ரஜினிகாந்தை வைத்து அண்ணாத்த படம் கொடுத்தார். படமும் அண்ணன் தங்கை படம் தான். ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்த போதிலும் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால், அஜித்திற்கு குடும்ப கதைகள் சூப்பராக ஒர்க் அவுட்டாகும் நிலையில் இயக்குநர் சிவாவின் அடுத்த டார்க்கெட் நடிகர் அஜித்தாக இருக்கும் என்று கூறப்படுகிறது.