2014ல் நடந்தது அப்படியே நடக்குதே.. தமிழ் சினிமாவை துரத்தும் ‘பிளாப்’ செண்டிமெண்ட்!

First Published | Nov 16, 2024, 10:13 AM IST

2014 மற்றும் 2024 ஆண்டுகளில் வெளியான தமிழ் படங்களின் வெற்றி தோல்விகளை ஒப்பிட்டு, சினிமா ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில படங்கள் எதிர்பார்ப்புகளை தகர்த்த நிலையில், சில படங்கள் வசூல் சாதனை படைத்துள்ளன.

2014 Vs 2024 Tamil Cinema

2024 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு என்னதான் ஆச்சு என்ற வசனம் நினைவுக்கு வரும் வகையில் இருக்கிறது என்றே சொல்லலாம். நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் என பொங்கல் ரிலீஸ் முதல் இருந்தே படங்கள் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மட்டுமல்ல, ரசிகர்களின் மனதையும் கவராமல் ஏமாற்றமளித்தது.

Kollywood

மகாராஜா, அரண்மனை 4, லப்பர் பந்து என சிறிய மற்றும் மீடியம் பட்ஜெட் படங்கள் பாக்ஸ் ஆபிசில் வசூலை வாரிக்குவித்தது. அதுமட்டுமின்றி இந்த வருடத்தில் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று இந்தியன் 2 ஆகும். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், கமல் ஹாசன் நடிப்பில் மாபெரும் வெற்றிபெற்ற இந்தியன் படத்தின் 2ம் பாகம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, இந்த வருடத்தின் மோசமான ட்ரோல் மெட்டீரியலாக மாறியது.

Tap to resize

Kanguva

தற்போது சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான கங்குவா படமும், இதே நிலைமையை சந்தித்துள்ளது. கங்குவா ஓரளவுக்கு நன்றாக இருந்தாலும், நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகிறார்கள். இந்த நிலையில் பிரபல சினிமா விமர்சகரான கிறிஸ்டோபர் கனகராஜ் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில் 2014 மற்றும் 2024 ஆண்டுக்கும், தமிழ் சினிமாவுக்கும் இடையே உள்ள ஒற்றுமை குறித்து போட்டுள்ளார்.

Rajinikanth

கடந்த 2014ல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டு படங்கள் வெளியானது. ஒன்று கோச்சடையான். மற்றொன்று கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான லிங்கா. இந்த 2 படங்களும் சரியாக ஓடவில்லை. இதேதான் 2024ம் ஆண்டும் பலித்துள்ளது என்றே சொல்லலாம். இந்த வருடம் லால் சலாம் மற்றும் வேட்டையன் ஆகிய படங்கள் வெளியானது. ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் உருவான லால் சலாம் படம் மோசமான தோல்வியை சந்தித்தது. ஜெய் பீம் இயக்குனர் த.செ ஞானவேல் இயக்கத்தில் உருவான வேட்டையன் கலவையான விமர்சனத்தையே சந்தித்தது.

Thalapathy Vijay

நடிகர் விஜயின் கேரியரில் மிக முக்கிய படமான கத்தி 2014ம் ஆண்டு வெளியாகி பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது. 2024ல் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான கோட் என்று அழைக்கப்படும் கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கத்தி மற்றும் கோட் ஆகிய படத்தில் தளபதி விஜயின் கதாபாத்திரங்களின் பெயர் ஜீவா என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan

தளபதி விஜயின் இடத்துக்கு முன்னேறி வரும் எஸ்.கே என்று ரசிகர்களால் அழைக்கப்படும் சிவகார்த்திகேயனும் இப்பட்டியலில் உள்ளார். 2014ல் மான் கராத்தேவும், இப்போது அமரனும் ரிலீஸ் ஆனது. இந்த இரண்டு படங்களின் இயக்குனர்களும் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் அவர்களின் உதவி இயக்குனர்கள் ஆவார்கள்.

Suriya

இந்த வாரம் பான் இந்தியா படமாக வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் கங்குவா இந்த ஆண்டுக்கு என்றாலும், 2014ல் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி அட்டர் பிளாப் ஆன அஞ்சான் படமும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

Dhanush

நடிகர் தனுஷின் 25வது படமான விஐபி என்கிற வேலையில்லா பட்டதாரி 2014ல் ரிலீஸ் ஆகி வெற்றிபெற்றது. 2024ல் நடிகர் மற்றும் இயக்குனர் என இரண்டு பரிணாமங்களில் கலக்கிய ராயன் 50வது படமாக வெளியாகி வசூலை வாரி குவித்தது.

Sundar C

இப்பட்டியலில் கடைசியாக இடம்பெற்றிருப்பது நடிகரும், இயக்குனருமான சுந்தர் சி தான். 2014ல் அவரது அரண்மனை படத்தின் முதல் பாகம் வெளியானது. இந்த 2024ல் அரண்மனை படத்தின் 4ம் பாகம் வெளியாகி முதல் பாகத்தை போலவே வெற்றி பெற்றது.

சோபிதாவை தொடர்ந்து நாகர்ஜுனா வீட்டு வாரிசை திருமணம் செய்ய போகும் விஜய் பட ஹீரோயின்?

Latest Videos

click me!