
கோட்:
தளபதி விஜய் இரட்டை வேடங்களில் நடித்து, செப்டம்பர் மாதம் வெளியான திரைப்படம் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'. இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியிருந்த நிலையில், ஏஜிஎஸ் நிறுவனம் 400 கோடி பட்ஜெட்டில் தயாரித்திருந்தது. மேலும் இந்த படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்திரி உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையில் இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. இந்து திரைப்படம் முதல் நாளே ரூ.126 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும் இந்த ஆண்டு முதல் நாளே அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்கிற சாதனையை கோட் தக்கவைத்து கொண்டுள்ளது.
வேட்டையன்:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், அக்டோபர் 10ஆம் தேதி வெளியான திரைப்படம் 'வேட்டையன்'. லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்திருந்த இந்த திரைப்படத்தில், ரஜினிகாந்த் உடன் சேர்ந்து அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் வெளியான முதல் நாளே ரூ. 69 கோடி வசூல் செய்தது.
திரையுலகில் சோகம்; 'ஒரு கிடாயின் கருணை மனு' பட இயக்குனர் சுரேஷ் சங்கையா மரணம்!
கங்குவா:
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், நவம்பர் 14ஆம் தேதி சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் 'கங்குவா'. முன் ஜென்ம கதையை மையமாக வைத்து, வரலாற்று சிறப்புமிக்க ஃபேண்டஸி கதைகளத்தோடு உருவான இந்த திரைப்படத்தை... ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். மேலும் இந்த படத்தில் பாபி தியோல், திஷா பதானி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம், முதல் நாளிலேயே சுமார் ரூ. 58 கோடி வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அமரன்:
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான இந்த திரைப்படத்தை, ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் உலகநாயகன் கமல் ஹாசன் தயாரித்துள்ளார். சாய் பல்லவி, ஹீரோயினாக நடிக்க புவன் அரோரா, ராகுல் போஸ், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தமிழகத்தை சேர்ந்த ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம், ரூ.70 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, இதுவரை 275 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. மேலும் தொடர்ந்து இந்த படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருவதால், 300 கோடியை எட்ட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்தத் திரைப்படம் வெளியான முதல் நாளே ரூ.42 கோடி வசூலித்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி முதல் நாளே இவ்வளவு பெரிய தொகையை வசூலித்த முதல் திரைப்படம் என்கிற பெருமையை 'அமரன்' தக்க வைத்துக் கொண்டுள்ளது.
சோபிதாவை தொடர்ந்து நாகர்ஜுனா வீட்டு வாரிசை திருமணம் செய்ய போகும் விஜய் பட ஹீரோயின்?
ராயன்:
நடிகர் தனுஷ் தன்னுடைய ஐம்பதாவது படமான 'ராயன்' படத்தை இயக்கி - நடித்திருந்தார். இந்த படத்தை கலாநிதிமாறன் ரூ.70 கோடி பட்ஜெட்டில் தயாரித்திருந்த நிலையில், இப்படம் ரூ.160 கோடி வசூல் சாதனை செய்தது. மேலும் இந்த படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன், அபர்ணா பாலமுரளி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். ஜூலை 26 ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம், ரிலீஸ் ஆன முதல் நாளே 32 கோடி வசூல் செய்தது.