திரையுலகில் சோகம்; 'ஒரு கிடாயின் கருணை மனு' பட இயக்குனர் சுரேஷ் சங்கையா மரணம்!

First Published | Nov 16, 2024, 8:24 AM IST

பிரபல இயக்குனர் சுரேஷ் சங்கையா, உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்துள்ள சம்பவம் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

Suresh Sangaiah Death

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை இயக்கி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர்களில் ஒருவர் சுரேஷ் சங்கையா. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு, நடிகர் விதார்த் ஹீரோவாக வைத்து 'ஒரு கிடாயின் கருணை மனு' திரைப்படத்தை இயக்கி முதல் படத்திலேயே சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்தார். இந்த படத்தில் டப்பிங் ஆர்டிஸ்ட்டான ரவீனா ரவி, ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் ஜார்ஜ் மரியன், உள்ளிட்ட பல பிரபலங்களை இந்த படத்தில் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, ஏராளமான விருதுகளையும் வாங்கி குவித்தது.

Suresh Sangaiah Movies

இந்த படத்தை தொடர்ந்து, சுரேஷ் சங்கையா நடிகர் பிரேம் ஜி-யை கதையின் நாயகனாக வைத்து இயக்கிய திரைப்படம் 'சத்திய சோதனை'. இந்த படமும் வித்தியாசமான கதைகளத்தோடு வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றபோதும், வசூல் ரீதியாக வெற்றிபெறவில்லை.

சோபிதாவை தொடர்ந்து நாகர்ஜுனா வீட்டு வாரிசை திருமணம் செய்ய போகும் விஜய் பட ஹீரோயின்?

Tap to resize

Suresh Sangaiah death for liver Problem and Jaundice

தற்போது நடிகர் யோகி பாபுவை வைத்து பேரிடப்படாத திரைப்படம் ஒன்றையும், நடிகர் செந்திலை வைத்து ஒரு திரைப்படத்தையும் சுரேஷ் சங்கையா இயக்கி முடித்துள்ளதாக கூறப்படுகிறது.  மேலும் கடந்த ஒரு மாதமாக மஞ்சள் காமாலை நோய் காரணமாக அவதிப்பட்டு வந்த சுரேஷ் சங்கையா,  ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

Suresh Sangaiah Family Deatails

கல்லீரல் பிரச்சனையும் இவருக்கு இருந்த நிலையில், நேற்று இரவு 10: 20 மணியளவில் சுரேஷ் சங்கையா உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து இவருடைய உடல், அவரது சொந்த ஊரான கோவில்பட்டிக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு தான், இறுதி சடங்குகள் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இயக்குனர் சுரேஷ் சங்கையாவின் திடீர் மறைவு திரை உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தகவல் கொடுத்த ஸ்ரீதேவி! தெலுங்கு பட இயக்குனரை வீட்டுக்கே சென்று எச்சரித்த ரஜினி - கமல்!

Latest Videos

click me!