"விஜயை முந்த முடியாமல் தவிக்கும் கங்குவா" முதல் நாள் வசூல் என்ன? அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

First Published | Nov 15, 2024, 8:28 PM IST

Kanguva Day 1 Collection : நேற்று உலக அளவில் வெளியான சூர்யாவின் கங்குவா திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பட குழு வெளியிட்டுள்ளது.

Kanguva Day 1 Collection

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி கடந்த நவம்பர் 14ஆம் தேதி உலக அளவில் வெளியாகி தற்பொழுது வெற்றி நடை போட்டு வரும் திரைப்படம் தான் கங்குவா. முற்றிலும் மாறுபட்ட வெவ்வேறு இரு கதாபாத்திரங்களில் நடிகர் சூர்யா இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இன்று தனது இரண்டாவது நாளில் பயணித்து வரும் கங்குவா திரைப்படம் கலவையான விமர்சனங்களோடு பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சூர்யாவின் ரசிகர்களுக்கு இது ஒரு விஷுவல் ட்ரீட் ஆகவே மாறி இருக்கிறது என்றால் அது மிகையல்ல.

ஒரே ஒரு நடிகை; அவருக்கு மட்டும் 150 பாடல்களுக்கு மேல் பாடி அசத்திய பி சுசிலா - யாருக்காக தெரியுமா?

GOAT Collection

தளபதி விஜய் நடிப்பில் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய அளவில் சாதனைகளை படைத்த திரைப்படம் தான் அந்த "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" திரைப்படம். இந்த திரைப்படம் உலக அளவில் வெளியான முதல் நாளிலேயே சுமார் 126.2 கோடி ரூபாய் வசூல் செய்தது. ஒட்டுமொத்தமாக இந்த திரைப்படம் 450 கோடி தாண்டி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல அதைத் தொடர்ந்து வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படமும் உலக அளவில் சுமார் 70 கோடி ரூபாய் வரை முதல் நாளில் வசூல் செய்ததாக கூறப்பட்டது.

Tap to resize

Kanguva Collection

இந்த நிலையில் இப்போது வெளியாகி உள்ள சூர்யாவின் கங்குவா திரைப்படம் உலக அளவில் சுமார் 58.62 கோடி வசூல் செய்துள்ளதாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. நிச்சயம் இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸில் நாளையே நுழைந்து விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவின் கங்குவா திரைப்படத்தில் இசையில் சொல்லப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து நாளை முதல் ஒலிகள் சரியான விதத்தில் கேட்கும்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஞானவேல் ராஜா கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Bobby Deol

தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு வித்தியாசமான முயற்சியாக கங்குவா திரைப்படம் தோன்றியிருந்தாலும் சூர்யாவே இந்த திரைப்படத்தை முழுவதுமாக தனது தோளில் சுமந்து செல்லும் நிலை ஏற்பட்டு இருக்கிறது என்றும், திரைக்கதையில் சிறுத்தை சிவா இன்னும் அதிகம் கவனம் செலுத்தி இருக்கலாம் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தல அஜித்தின் அடுத்த திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கவிருக்கிறார். அதேபோல 2027 ஆம் ஆண்டு கங்குவா திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாக உள்ளது. 2025ம் ஆண்டு முடிவிற்குள் தன்னுடைய பிற பட பணிகளை முடித்துவிட்டு கங்குவா படத்தின் இரண்டாம் பாகப் பணிகளில் சூர்யா ஈடுபடுவார் என கூறப்படுகிறது.

சோபிதாவை தொடர்ந்து நாகர்ஜுனா வீட்டு வாரிசை திருமணம் செய்ய போகும் விஜய் பட ஹீரோயின்?

Latest Videos

click me!