நடிகர் நாகர்ஜூனாவின் மூத்த மகன், நாக சைதன்யா இன்னும் சில மாதங்களில், நடிகை சோபிதாவை திருமணம் செய்து கொள்ள உள்ள நிலையில், விஜய் பட நாயகியை நாகர்ஜூனாவின் மருமகன் சுஷாந்த் அனுமோலு காதலித்து வருவதாக, ஒரு தகவல் தீயாக டோலிவுட் வட்டாரத்தில் பரவி வருகிறது.
நாகார்ஜுனா குடும்பத்தில் அடுத்தடுத்து திருமணம் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாக துவங்கியுள்ளது. ஏற்கனவே நாக சைதன்யா - சோபிதா திருமணத்திற்கு நாள் குறித்து விட்ட நிலையில் இதை தொடர்ந்து நாகார்ஜுனா தன்னுடைய மருமகன் திருமணத்தை நடத்த தயாராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
26
Meenakshi Chaudhary and Sushanth Anumolu love
சுஷாந்த் அனுமோலு பிரபல இளம் நடிகை மீனாட்சி சவுத்திரியை தான் தற்போது காதலித்து வருகிறாராம். ஹரியானாவை சேர்ந்த நடிகை மீனாட்சி சவுத்ரி, ஃபெமினா மிஸ் இந்தியா அழகி போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தவர். அதே போல் மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2018 போட்டியிலும் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடிய இவருக்கு, ஹிந்தியில் 'அப்ஸ்ட்ராட்ஸ்' என்கிற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2019 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் வெற்றிபெறாத நிலையில், தென்னிந்திய திரைப்படங்களுக்கு வலைவிரித்தார். அந்த வகையில் கடந்த 2021-ஆம் ஆண்டு இவர் நடித்த திரைப்படம் தான், Ichata Vahanamulu Niluparadu. இந்த படத்தில் ஹீரோவாக சுஷாந்த் அனுமோலு நடித்திருந்தார்.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து தெலுங்கில் ரவி தேஜாவின் கில்லாடி, அத்வி சேஷ் ஜோடியாக ஹிட் : தி செகண்ட் கேஸ் ஆகிய படங்களில் நடித்தார். தெலுங்கில் பிசியாக நடித்து கொண்டிருக்கும் போதே தமிழ் பட.... தமிழில் 2023 ஆம் ஆண்டு வெளியான, விஜய் ஆண்டனியின் கொலை திரைப்படத்தில் அறிமுகமான மீனாட்சி சவுத்ரி, இதை தொடர்ந்து ஆர்.ஜெ.பாலாஜிக்கு ஜோடியாக 'சிங்கப்பூர் சலூன்' திரைப்படத்தில் நடித்தார்.
அதே போல் தளபதி விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' திரைப்படத்தில், தளபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். தொடர்ந்து தரமான படங்களை தேர்வு செய்து நடித்து வரும் மீனாட்சி சவுத்திரி, தெலுங்கில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்து கடந்த மாதம் வெளியான 'லக்கி பாஸ்கர்' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
46
Meenakshi Chaudhary Marriage News
மேலும் வருண் தேஜிக்கு ஜோடியாக நடித்துள்ள ;மட்கா; மற்றும் விஷ்வா சின் ஜோடியாக நடித்துள்ள 'மெக்கானிக் ராக்கி' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. தென்னிந்திய திரை உலகில் மிகக் குறுகிய காலத்தில் முன்னணி நடிகைகள் லிஸ்டில் இணைந்துள்ள மீனாட்சி சவுத்ரி, கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளது தான் தற்போது தெலுங்கு திரையுலகில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.
அதாவது நாகார்ஜுனாவின் மருமகன் சுஷாந்த் அனுமோலுவை தான் மீனாட்சி காதலித்து வருவதாகவும், கூடிய விரைவில் இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக தெலுங்கு வட்டாரத்தில் கூறப்படுகிறது. சுஷாந்த், அனுமோல் சத்யா பூஷண ராவ்வுக்கும் - நாக சுசீலா அக்னிக்கும் பிறந்தவர் ஆவார். நாக சுஷீலா நாகர்ஜூனாவின் சகோதரி. தெலுங்கு திரையுலகில் நிலையான ஹீரோ என்கிற இடத்தை பிடிக்க போராடி வரும் சுஷாந்த் நடிப்பில் கடைசியாக போலா ஷங்கர் திரைப்படம் வெளியானது. இதில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
66
Sushanth will Marry Vijay Movie heroine
நாகார்ஜுனா திருமணம் முடிந்த கையேடு, இவர்களுடைய திருமண செய்தி வெளியாகும் என கூறப்படும் நிலையில்... இந்த காதல் விவகாரம் குறித்து இதுவரை சுஷாந்த் மற்றும் மீனாட்சி சவுத்திரி ஆகியோர் வாய் திறக்காமல் தொடர்ந்து மௌனம் சாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.