Susheela
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் 25,000 மேற்பட்ட பாடல்களை பாடிய அசத்தியவர் தான் பாடகி பி சுசீலா. கடந்த 1953 ஆம் ஆண்டு எம்.எஸ் விஸ்வநாதன் மற்றும் சுப்புராமன் இசையில் வெளியான "சண்டிராணி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் தனது கலை பயணத்தை தொடங்கினார். பிற மொழிகளை ஒப்பிடும் பொழுது தமிழ் மற்றும் கன்னட மொழியில் தான் இவர் அதிக அளவிலான பாடல்களை பாடி இருக்கிறார். ஆறு தலைமுறை நடிகர்களோடு, கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக அவர் இந்த கலை உலகில் மிகச்சிறந்த பாடகியாக இன்றளவும் பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது. கின்னஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ஏசியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ் உள்ளிட்ட பல சாதனை புத்தகங்களில் இடம் பெற்ற பி சுசீலாவிற்கு வயது இப்போது 89.
"அதற்கும்" தேவி ஸ்ரீ பிரசாத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்ல; கங்குவா பட இசை - ஞானவேல் கொடுத்த விளக்கம்!
Singer Susheela
திரைப்படம் என்று பார்க்கும் பொழுது கடந்த 2019ம் ஆண்டு பிரபல நடிகர் ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் வெளியான "எல்கேஜி" என்கின்ற திரைப்படத்தில் வந்த ஒரு பாடலை இவர் பாடியிருந்தார். பா விஜய் வரிகளில், இந்த பாடல் உருவானது. அவரோடு இணைந்து எல்.ஆர் ஈஸ்வரி, சின்மயி, வாணி ஜெயராம், சித் ஸ்ரீராம் உள்ளிட்ட பல பாடகர்கள் அந்த பாடலை பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இறுதியாக தமிழ் மொழியை பொறுத்தவரை வைரமுத்துவின் எழுத்தில் வெளியான ஒரு கவிதை புத்தகத்தில் வந்த ஒரு பாடலை இவர் வைரமுத்துதற்காக பாடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது. அந்த பாடலையும் இவரோடு இணைந்து ஹரிணி மற்றும் கே.எஸ் சித்ரா ஆகியோர் பாடியிருந்தனர்.
Sri Devi
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக பயணித்து வரும் பாடகி பி சுசிலா பல முன்னணி நடிகைகளுக்கு பல பாடல்களை பாடி இருக்கிறார். ஆனால் ஒரே ஒரு நடிகைக்கு மட்டும் கிட்டத்தட்ட 150க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி அசத்தியிருக்கிறாராம் சுசீலா. அந்த நடிகை வேறு யாருமல்ல பிரபல கன்னட திரை உலகை நடிகை ஜெயந்தி தான். தமிழிலும் பல திரைப்படங்களில் மிகச்சிறந்த கதாபாத்திரங்களை ஏற்று நடித்து அசத்தியவர் ஜெயந்தி. குறிப்பாக இயக்குனர் சிகரம் பாலச்சந்தரின் "எதிர்நீச்சல்", "இரு கோடுகள்" மற்றும் "பாமா விஜயம்" போன்ற திரைப்படங்களில் ஜெயந்தியின் நடிப்பு அபாரமாக பேசப்பட்டது. இவர் தமிழ் மொழியில் நடித்ததற்கு இணையாக கன்னட மொழியிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
Jayanthi
நடிகை ஜெயந்திக்கு தான் தமிழில் 50க்கும் மேற்பட்ட பாடல்களிலும், கன்னட மொழியில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களிலும் குரல் கொடுத்து அசத்தியிருக்கிறார் பி சுசிலா. இவர்கள் இருவருக்கும் இடையிலான நட்பும் மிக நெருக்கமானது என்று கூறப்படுகிறது.கன்னட மொழியில் மிகச்சிறந்த டாப் நடிகராக வலம் வந்த ராஜ்குமார் உடன் அதிக படங்களில் நடித்த ஒரே நடிகை என்ற பெருமையும் ஜெயந்தி இடம் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 1945ம் ஆண்டு பிறந்த ஜெயந்தி, தனது 75வது வயதில் கடந்த 2021ம் ஆண்டு காலமானார்.
மாறுபட்ட வேடம்; நாகர்ஜூனாவுடன் இணைந்து அசத்தும் தனுஷ் - வெளியானது "குபேரா" பட கிலிம்ப்ஸ்!