ஜெயம் ரவி விவாகரத்து விவகாரத்தில் நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு!

First Published | Nov 15, 2024, 4:56 PM IST

மனைவி ஆர்த்தியிடம் இருந்து ஜெயம் ரவி விவாகரத்து கேட்டு நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், தற்போது நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பால், ஜெயம் ரவி - ஆர்த்தி இணைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
 

Jayam Ravis

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவி, கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னர்... கல்லூரி காலத்தில் இருந்து. உருகி உருகி காதலித்து 2009-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து பெற உள்ளதாக அறிவித்த சம்பவம் தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Jayam Ravi files complaint against Aarti

ஆர்த்தி - ஜெயம் ரவி விவாகரத்து தொடர்பாக பல தகவல்கள் சமூக வலைதளத்தில் வலம் வந்த நிலையில், ஜெயம் ரவி வெளியிட்ட அறிக்கையில், குடும்ப நலன் கருதியே இந்த விவாகரத்து முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார். 

Tap to resize

Jayam Ravi Divorce Case

இதைத் தொடர்ந்து ஆர்த்தி தரப்பில் இருந்து வெளியான அறிக்கையில் ஜெயம் ரவி உடன் மீண்டும் இணைந்து வாழ விரும்புவதாக கூறி, கண்டிப்பாக தனக்கு நீதி மன்றத்தில் நியாயம் கிடைக்கும் என... ஜெயம் ரவி மீதான காதலை வெளிப்படுத்தினார். ஆனால் ஜெயம் ரவி தரப்பில் இருந்து ஆர்த்தி மீது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் இவர்கள் சேர்ந்து வாழ்வது கடினம் என தகவல்கள் வெளியாகின.
 

Jayam Ravi Divorce Court judgement

இந்த தகவல் ஒருபுறம் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், தற்போது இவர்களுடைய விவாகரத்து சமாச்சாரம் சென்னை குடும்ப நல நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில்...  இது குறித்த நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி இரு தரப்பும் சமாதான பேச்சுவார்த்தை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 

Latest Videos

click me!