தலைவலி; கங்குவா படத்தை சரமாரியாக விமர்சித்த ஆஸ்கர் நாயகன்

First Published | Nov 15, 2024, 3:12 PM IST

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் கங்குவா திரைப்படத்தை ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டி சரமாரியாக சாடி இருக்கிறார்.

kanguva

நடிகர் சூர்யா நடிப்பில் 2 ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வந்த கங்குவா திரைப்படம் நேற்று உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. இப்படத்திற்கு பான் இந்தியா அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பையெல்லாம் சுக்குநூறாக உடைக்கும் வண்ணம் அப்படத்தின் ரிசல்ட் அமைந்துள்ளது. கங்குவா திரைப்படம் அதிகளவில் நெகடிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. படம் பார்த்த பெரும்பாலானவர்கள் இந்த படத்துக்கா இவ்வளவு பில்டப் கொடுத்தீர்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

kanguva Suriya

கங்குவா படத்தை பார்த்தவர்களில் பெரும்பாலானோர் முன்வைத்த குற்றச்சாட்டு, படம் முழுக்க அதிக சத்தத்தோடு இருப்பதாக கூறினார். இதனால் காதே கேட்காமல் போய்விடும் அளவுக்கு ஓவர் இரைச்சலாக இருப்பதாக கூறி இருந்தனர். படம் முழுக்க கத்திக்கொண்டே இருப்பதால் படத்திற்கு கங்குவா என பெயர் வைத்ததற்கு பதிலாக கத்துவா என பெயரிட்டிருக்கலாம் என நெட்டிசன்களும் ட்ரோல் செய்து வந்தனர். அதுமட்டுமின்றி தலைவலி மாத்திரை உடன் வந்து படம் பார்க்குமாறு அறிவுறித்தி சிலர் மீம்ஸ்களும் பதிவிட்டனர்.

இதையும் படியுங்கள்... கங்குவாவுக்கு முன் மறுபிறவியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள் லிஸ்ட்

Tap to resize

Resul Pookutty Criticize Kanguva

ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக ஆஸ்கர் விருது வென்ற ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி, கங்குவா படத்தை சரமாரியாக சாடி இருக்கிறார். திரையரங்கிற்கு படம் பார்க்க வரும் ரசிகர்கள் திரும்பிச் செல்லும் போது சந்தோஷமாக செல்ல வேண்டுமே தவிர தலைவலியுடன் செல்லக்கூடாது. இதற்காக இசையமைப்பாளர்கள் திட்டுவதும் சரியல்ல. ஏனெனில் கடைசி நேரத்தில் அவர்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தம் மற்றும் சாதாரண ஹீரோக்களை கூட மாஸ் ஹீரோக்களாக காட்ட சத்தம் மட்டுமே வழி என நினைக்கும் கருத்து கொண்டவர்களின் செயலால் தான் இசை மீது இதுபோன்ற மோசமான விமர்சனங்கள் வரக் காரணம் என கங்குவா படம் குறித்து தன் விமர்சனத்தை வெளிப்படையாக கூறி இருக்கிறார் ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டி.

kanguva Movie Troll

கங்குவா படக்குழு ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் இந்த விமர்சனத்தை ஏற்று படத்தின் சத்தத்தை சற்று குறைத்தால் தான் படம் ஒரு வாரமாவது தாக்குப்பிடிக்கும், இல்லையென்றால் தியேட்டருக்கு படம் பார்க்க யாரும் வரமாட்டார்கள். இதை கருத்தில் கொண்டு படத்தின் சத்தத்தை குறைப்பார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதே நிலை நீடித்தால் சூர்யாவின் கெரியரில் படுதோல்வியை சந்திக்கும் படமாக கங்குவா இருக்கவும் வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்... 10 வருஷமா ஒரு பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கூட கிடைக்கல; சூர்யாவை துரத்தும் தோல்வி! காரணம் என்ன?

Latest Videos

click me!