ஒளிப்பதிவாளராக தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கிய சிவா, தமிழில் பிரபுதேவா நடித்த சார்லி சாப்ளின், ஸ்ரீகாந்தின் மனசெல்லாம் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இதுதவிர தெலுங்கிலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய இவர் கடந்த 2008-ம் ஆண்டு செளர்யம் என்கிற தெலுங்கு படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். இப்படம் வெற்றியடைந்ததை அடுத்து தொடர்ந்து மூன்று தெலுங்கு படங்களை இயக்கிய சிவா, கடந்த 2011-ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளிவந்த சிறுத்தை படம் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.
25
Siruthai siva, AJith
தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான விக்ரமர்குடு படத்தை தான் தமிழில் சிறுத்தை என்கிற பெயரில் ரீமேக் செய்தார் சிவா. இப்படம் தமிழில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. சிறுத்தை படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவாவுக்கு அப்பட தலைப்பே அடைமொழியாக மாறியது. சிறுத்தை படத்தை பார்த்து இம்பிரஸ் ஆன அஜித், தன்னுடைய வீரம் படத்தை இயக்கும் வாய்ப்பை சிவாவுக்கு வழங்கினார். இப்படத்தின் மூலம் அஜித்துக்கும் சிவாவுக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டது.
இதனால் வீரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தன் மூன்று படங்களை இயக்கும் வாய்ப்பை சிவாவுக்கு வழங்கினார் அஜித். விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் கூட்டணி அமைத்த சிவா, அவரை வைத்து அண்ணாத்த என்கிற கமர்ஷியல் படத்தை இயக்கினார். தங்கச்சி செண்டிமெண்டை மையமாக வைத்து வெளியான இப்படம் தோல்வியை சந்தித்தது.
45
Siruthai Siva, Suriya
அண்ணாத்த படத்தின் தோல்வியில் இருந்து கம்பேக் கொடுக்க முடிவெடுத்த சிவா, நடிகர் சூர்யாவை வைத்து கங்குவா என்கிற பீரியட் பிலிம் ஒன்றை எடுக்க முடிவெடுத்தார். சுமார் 2 ஆண்டுகள் கடினமாக உழைத்து கங்குவா படத்தை எடுத்து முடித்தது மட்டுமின்றி, அப்படத்தின் ரிலீஸுக்கு முன்னர் ஆஹா, ஓஹோனு புரமோஷன் பண்ணினார். இதனால் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் நேற்று ரிலீஸ் ஆன கங்குவா படத்தை காண சென்ற ரசிகர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
55
Siruthai Siva next Movie with Ajith Kumar
படம் மோசமாக இருந்ததால் ரசிகர்கள் அப்படத்தை கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர். இதனிடையே இயக்குனர் சிறுத்தை சிவா அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த அப்டேட் கசிந்துள்ளது. அதன்படி அவர் இயக்க உள்ள அடுத்த படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரிக்க உள்ளதாகவும் அப்படத்தில் நடிகர் அஜித் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது உறுதியானால் நடிகர் அஜித்துடன் சிவா இணையும் 5-வது படமாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.