
நடிகை ரம்யா பாண்டியன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு.. தன்னுடைய ஹல்தி கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்ட நிலையில், தற்போது கணவருடன் எடுத்துக் கொண்ட க்யூட் போட்டோ ஷூட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு லைக்குகளையும் குவித்து வருகிறது.
சிறுவயதிலிருந்தே, நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில் இருந்த ரம்யா பாண்டியன் கல்லூரி காலங்களில் தன்னுடைய நண்பர்கள் இயக்கிய குறும்படங்களில் நடிக்க துவங்கினார். பின்னர் 'டம்மி டப்பாசு' என்கிற திரைப்படத்தில் இவருக்கு கதாநாயகி வாய்ப்பு கிடைத்த போதிலும், இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை.
ரம்யா பாண்டியனின் சித்தப்பா அருண்பாண்டியன் முன்னணி தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருந்த போதும், யாருடைய உதவியையும் நாடாமல் தனக்கான வாய்ப்புகளை தானே தேடிச்சென்று தன்னுடைய முயற்சி மூலம் சினிமா என்னும் கடலில் நீந்தி கரைசேர்ந்தார்.
இவர் நடிப்பில் வெளியான படங்கள் ஆரம்பத்தில் தோல்வியை தழுவிய போதிலும், இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடித்த 'ஜோக்கர்' திரைப்படம், ரம்யா பாண்டியனுக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தில் ரம்யா பாண்டியன் கதாநாயகியாக நடித்திருந்தாலும், 15 நிமிடங்கள் மட்டுமே இவருடைய காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இதைத் தொடர்ந்து ரம்யா பாண்டியனுக்கு சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்த போதும், கதை தேர்வுசரியாக இல்லாததால் தோல்விகளை சந்தித்தார். ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டார்.
ரசிகர்கள் மனதை கவர... இவர் கையில் எடுத்த ஆயுதம் தான் போட்டோ ஷூட். எளிமையான புடவை ஒன்றை கட்டி கொண்டு, தன்னுடைய இடையழகை காட்டி இவர் எடுத்து கொண்ட மொட்டை மாடி போட்டோ ஷூட் ஒரே நாளில் ரம்யா பாண்டியனை பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைய செய்தது.
திமிராக பேசிய அப்பாஸ்; ஆனந்தம் படப்பிடிப்பில் அடிக்க பாய்ந்த பாவா லட்சுமணன்! என்ன நடந்தது?
ஆனால் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில், ஸ்மார்ட்டாக யோசித்து சின்னத்திரையில் தன்னுடைய கவனத்தை திருப்பினார். 'குக் வித் கோமாளி சீசன் 2' நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ரம்யாவுக்கு டைட்டில் கிடைக்கவில்லை என்றாலும், இரண்டாவது ரன்னரப்பாக மாறினார்.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு, சிறப்பாக விளையாடிய ரம்யா பாண்டியன் ஃபைனல் வரை வந்த போதும் டைட்டிலை மிஸ் செய்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர், கதை தேர்வில் கூடுதல் கவனம் செலுத்திய இவர் பல கதைகளை நிராகரித்ததாக கூறப்பட்டது. மேலும் தன்னுடைய குடும்பத்தினருடன் ஆன்மீக சுற்றுலாவுக்கு சென்று செல்வத்தையும் வழக்கமாக வைத்திருந்தார்.
அப்படி செல்லும்போது தான் ரம்யா பாண்டியனுக்கு அறிமுகமானவர்தான் யோகா மாஸ்டர் லோவல் தவான். இருவரும் தங்களுடைய காதலை ரகசியமாக வைத்திருந்த நிலையில், சமீபத்தில் ரம்யா பாண்டியன் லோவல் தவானை திருமணம் செய்து கொள்ள உள்ள தகவலை வெளியிட்டார். இதை தொடர்ந்து ரம்யா பாண்டியன் மற்றும் லோவல் தவானுக்கு இந்த மாதம் ரிஷிகேசில் உள்ள கங்கை நதிகரையில், பூக்களால் மேடை அமைக்கப்பட்டு இயற்கை எழில் சூழ... குறிப்பிட்ட உறவினர்கள் மத்தியில் வெகு விமர்சையாக திருமணம் நடந்து முடிந்தது.
திருமணத்திற்கு பின்னர் அடிக்கடி கணவருடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரம்யா பாண்டியன், தற்போது ஜோதா - அக்பர் கெட்டப்பில் கணவருடன் எடுத்துக் கொண்ட க்யூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
ரகசிய திருமணம்; ஊருக்கே தெரியாமல் குழந்தையை பெற்ற ரஜினி - விஜய் பட ஹீரோயினா இது?
இந்த புகைப்படத்தில் ரம்யா பாண்டியன் பிங்க் நிற லெஹங்கா அணிந்து, அதற்கு ஏற்ற போல் கிராண்டான வெள்ளை மற்றும் பிங்க் நிற கல் பதித்த நெக்லஸ், நெத்திச்சூட்டி உள்ளிட்ட அணிகலன்கள் அணிந்துள்ளார். குறிப்பாக இவர் அணிந்துள்ள மூக்கு வளையம் ஹை லைட்.
இந்த புகைப்படத்தில் ரம்யா பாண்டியன் பிங்க் நிற லெஹங்கா அணிந்து, அதற்கு ஏற்ற போல் கிராண்டான வெள்ளை மற்றும் பிங்க் நிற கல் பதித்த நெக்லஸ், நெத்திச்சூட்டி உள்ளிட்ட அணிகலன்கள் அணிந்துள்ளார். குறிப்பாக இவர் அணிந்துள்ள மூக்கு வளையம் ஹை லைட்.