தமிழில், கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான, 'காதல் தேசம்' திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் அப்பாஸ். இந்தப் படத்தின் வெற்றிக்குப் பின்னர், வி ஐ பி, பிரியா ஓ பிரியா, பூச்சூடவா, இனி எல்லாம் சுகமே, பூவேலி, படையப்பா, சுயம்வரம், மலபார் போலீஸ், என சுமார் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம், இந்தி, உள்ளிட்ட மொழிகளில் ஒருசில படங்களில் அப்பாஸ் நடித்திருந்தாலும், இவருக்கு சாக்லேட் ஹீரோ என்கிற இமேஜை பெற்று தந்தது கோலிவுட் திரை உலகம் தான்.