MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரகசிய திருமணம்; ஊருக்கே தெரியாமல் குழந்தையை பெற்ற ரஜினி - விஜய் பட ஹீரோயினா இது?

ரகசிய திருமணம்; ஊருக்கே தெரியாமல் குழந்தையை பெற்ற ரஜினி - விஜய் பட ஹீரோயினா இது?

தமிழ் சினிமாவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விக்ரம், விஜய், தனுஷ், போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டு, குழந்தை பெற்றெடுத்த நடிகை தான் இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை. அவர் யார்? என்பதன் முழு தகவல்களை இந்த பதிவில் பார்ப்போம்.  

2 Min read
Author : manimegalai a
Published : Nov 14 2024, 07:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Shriya Saran viral pics

Shriya Saran viral pics

 42 வயதிலும், தன்னுடைய அழகாலும், இளமையான லுக்காலும், ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகை ஸ்ரேயா சரண். இவருடைய சிறிய வயது புகைப்படங்கள் தான், தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

நடிகை ஸ்ரேயா ஹரிதுவார், உத்தரகாண்டில் பிறந்தவர். அங்கேயே தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்த இவர், சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் திரைப்பட வாய்ப்புகளை தேட துவங்கினார். இவருடைய ஆசைக்கு ஸ்ரேயாவின் பெற்றோரும் உறுதுணையாக இருந்தனர். 

தீவிரமாக ஸ்ரேயா பட வாய்ப்பு தேடி கொண்டிருந்த போது, இவருடைய புகைப்படம் இயக்குனர் விக்ரம் குமார் கையில் கிடைக்க, தான் இயக்கிய 'இஷ்டம்' திரைப்படத்தில் ஸ்ரேயாவை கதாநாயகியாக நடிக்க வைத்தார். இந்த திரைப்படம் 2001-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்து, தெலுங்கு திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட துவங்கினார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Baby Shriya Saran

Baby Shriya Saran

அந்த வகையில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக 2002 ஆம் ஆண்டு வெளியான சந்தோஷம் படத்தில் நடித்தார். பின்னர் பாலையாவுக்கு ஜோடியாக 'சின்னகேசாவா ரெட்டி', தருணுக்கு ஜோடியாக 'நூவு நூவு' போன்ற பல படங்களில் நடித்தார்.

ஹிந்திலும் ரித்தீஷ் தேஷ் முக்குக்கு ஜோடியாக, ஜெனிலியா ஹீரோயினாக அறிமுகமான தூஜ்கே மேரி கசம்' என்கிற படத்தில் நடித்திருந்தார். அறிமுகமான இரண்டே வருடத்தில் கை நிறைய படங்களோடு வலம் வந்த ஸ்ரேயா சரண், தமிழில் 'எனக்கு 20 உனக்கு 18' என்கிற திரைப்படத்தில் ஹீரோவின் தோழி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பிக்பாஸ் வீட்டில் ஆண் போட்டியாளர் காலில் விழுந்த பின் கதறி அழுத ஜாக்குலின்!

36
Shriya Saran With Mother

Shriya Saran With Mother

இந்த படத்தின் வெற்றி, ஸ்ரேயா சரணுக்கு தமிழில் கதாநாயகி வாய்ப்பு கிடைக்க காரணமாக அமைந்தது. தெலுங்கில் பிஸியாக இருக்கும் போதே நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக 'மழை' படத்தில் நடித்தார். இதைத்தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக 'திருவிளையாடல் ஆரம்பம்', சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக 'சிவாஜி தி பாஸ்', விஜய்க்கு ஜோடியாக 'அழகிய தமிழ் மகன்', விஷாலுக்கு ஜோடியாக 'தோரணை' விக்ரமுக்கு ஜோடியாக 'கந்தசாமி' என அடுத்தடுத்து தமிழில் ஸ்டார் நடிகர்களுக்கு ஜோடி போட்டோர்.

46
Shriya Saran Childhood

Shriya Saran Childhood

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, இங்கிலீஷ், கன்னடம், என பல மொழிகளில் இதுவரை சுமார் 70-க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள ஸ்ரேயாவுக்கு... திருமணத்திற்கு பின்னர் கதாநாயகி வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், தொடர்ந்து கதாபாத்திரத்துக்கு முக்கியத்தும் கொண்ட படங்களில் நடித்து வருகிறார்.

கடந்தாண்டு இவர் நடிப்பில் ஷோடைம் என்கிற சீரிஸ் வெளியான நிலையில், இந்த ஆண்டு தமிழில் சூர்யாவின் 44 வது படத்தில் ஸ்ரேயா சரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

எல்லா விமர்சனமும் கழுவி ஊத்துறது இவரை தான்; கங்குவா பட பிரபலத்தை வெளுத்து வாங்கிய ப்ளூ சட்டை!

56
Shriya Saran Pregnancy

Shriya Saran Pregnancy

ஸ்ரேயா முன்னணி நடிகையாக இருந்த போதும், தன்னுடைய திருமணம், குழந்தை பிறப்பு போன்றவற்றை மிகவும் ரகசியமாக வைத்திருந்து சில மாதங்களுக்கு பின்னரே வெளிப்படுத்தினார்.

ஸ்ரேயா, கடந்த 2018-ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் மற்றும் தொழிலதிபர் ஆண்ட்ரீ என்பவரை காதலித்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இவருக்கு திருமணமான தகவல் 2 மாதங்களுக்கு பின்னரே வெளியானது. பின்னர் ஸ்ரேயாவும் இந்த தகவலை ஒப்புக்கொண்டார். 

66
Shriya Saran Family

Shriya Saran Family

அதே போல் கொரோனா காலகட்டத்தில், ஸ்ரேயா கர்ப்பமான நிலையில்... ஊர் உலகத்துக்கே தெரியாமல் ரகசியமாக பெண் குழந்தையை பெற்றெடுத்தார். தன்னுடைய குழந்தைக்கு 9 மாதங்கள் ஆன பின்னரே, தனக்கு குழந்தை இருக்கும் தகவலையும், குழந்தையின் பெயர் ராதா என்பதையும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவின் 1000 நாள் உழைப்புக்கு பலன் கிடைத்ததா? 'கங்குவா' படத்தை பார்க்க வேண்டிய 5 காரணம்!
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ரஜினிகாந்த்
விஜய் (நடிகர்)
நடிகர் விக்ரம்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image2
Ramayana First Review : பிரம்மாண்டத்தின் உச்சமா?... வெறும் பில்டப்பா? ராமாயணா முதல் விமர்சனம் வந்தாச்சு..!
Recommended image3
6 மணி காட்சி முதல் 100 ரூபாய் டிக்கெட் வரை அரசுக்கு பறந்த 13 கோரிக்கைகள்! அனுமதி கொடுப்பாரா முதல்வர்? காத்திருக்கும் திரையுலகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved