MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Theatre and OTT Releases : ஓம் முதல் ஆபிஸ் வரை... இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி வெளியீடுகள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ

Theatre and OTT Releases : ஓம் முதல் ஆபிஸ் வரை... இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி வெளியீடுகள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ

This Week Theatre and OTT Releases : தனுஷ் நடித்த ஓம் முதல் மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஆபிஸ் வரை இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் என்னென்ன படங்கள் மற்றும் வெப் சீரிஸ் ரிலீஸ் ஆகிறது என்பதை பார்க்கலாம்.

3 Min read
Author : Ganesh A
Published : Nov 18 2026, 03:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
This Week Theatre and OTT Releases
Image Credit : X

This Week Theatre and OTT Releases

ஒவ்வொரு வாரமும் புதுப்புது திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன. குறிப்பாக, முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கும். அந்த வகையில், வரும் நவம்பர் 20-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் சில சுவாரஸ்யமான திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளன. இதில் தனுஷ், விஜய் ஆண்டனி, கீர்த்தி சுரேஷ் மற்றும் துல்கர் சல்மான் ஆகியோரின் படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அதுமட்டுமின்றி இந்த வாரம் ஓடிடியிலும் நிறைய படங்கள் வெளியாக உள்ளன. அதன் பட்டியலையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
தனுஷின் ஓ.எம்
Image Credit : X

தனுஷின் ஓ.எம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமின்றி இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பல்வேறு துறைகளிலும் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படமும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், தனுஷின் 55-வது திரைப்படமாக உருவாகியுள்ள ஓ.எம் ஆபரேஷன் மோல் படத்தின் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கியுள்ள இப்படம் வரும் நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

37
விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி!
Image Credit : X

விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி!

இசையமைப்பாளராக திரையுலகில் அறிமுகமாகி, தனது தனித்துவமான இசையால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் விஜய் ஆண்டனி. தொடர்ந்து நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் அப்பா குட்டி. வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜய் ஆண்டனியின் இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே நிலவி வருகிறது. இப்படம் நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

47
கீர்த்தி சுரேஷ் நடிக்கும் சத்யவான் சாவித்ரி!
Image Credit : T-Series Tamil

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் சத்யவான் சாவித்ரி!

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள இவர், கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது கதையின் நாயகியாக நடித்துள்ள திரைப்படம் சத்யவான் சாவித்ரி. இப்படம் வரும் நவம்பர் 20-ம் தேதி தமிழ் மொழியில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கீர்த்தி சுரேஷின் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களிடம் எந்த அளவுக்கு வரவேற்பைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

57
துல்கர் சல்மானின் ஆகாசம்லோ ஓகா தாரா!
Image Credit : X

துல்கர் சல்மானின் ஆகாசம்லோ ஓகா தாரா!

மலையாளம், தமிழ், தெலுங்கு எனப் பல மொழிகளில் தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் துல்கர் சல்மான். இவரது நடிப்பில் தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள திரைப்படம் ஆகாசம்லோ ஓகா தாரா. படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வரும் நவம்பர் 20-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

67
நவம்பர் 18 - ஓடிடி ரிலீஸ்
Image Credit : X

நவம்பர் 18 - ஓடிடி ரிலீஸ்

தமிழில் உருவாகியுள்ள மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஆபீஸ் தொடர், நவம்பர் 18-ம் தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வாராந்திர தொடராக வெளியாகிறது. கரேஜ் திரைப்படம் நவம்பர் 18-ம் தேதி அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. கார்டியன் ஸ்டார்ஸ் திரைப்படம் நவம்பர் 18-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது. மேடன் திரைப்படம் நவம்பர் 18 அன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. ஜென்டில் மான்ஸ்டர் திரைப்படத்தை நவம்பர் 18 முதல் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் கண்டு ரசிக்கலாம். தி ஆல்ட்ரூயிஸ்ட்ஸ் வெப் தொடர் நவம்பர் 19-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

77
நவம்பர் 20 - ஓடிடி ரிலீஸ்
Image Credit : X

நவம்பர் 20 - ஓடிடி ரிலீஸ்

அன்பில் அவன் திரைப்படம் நவம்பர் 20-ம் தேதி சோனி லிவ் தளத்தில் வெளியாக உள்ளது. ஹைக்கூ திரைப்படம் நவம்பர் 20 அன்று நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாகிறது. 418 திரைப்படம் நவம்பர் 20-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. கிரேஸி கல்யாணம் திரைப்படம் நவம்பர் 20 முதல் ஆஹா வீடியோ தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. அனுமான பக்ஷி திரைப்படம் நவம்பர் 20-ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. மாங்க்லிக் வெப் தொடர் நவம்பர் 20 அன்று நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது. டீன் திகடா தொடர் நவம்பர் 20-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த திண்டோரா தொடரின் இரண்டாவது சீசன் நவம்பர் 20 அன்று நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. ஆன் பிஹாஃப் ஆஃப் மை சன் திரைப்படம் நவம்பர் 20-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஸ்டெப்ஸ் திரைப்படம் நவம்பர் 20 அன்று நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. தி ப்ளூ ரோடு வெப் தொடர் நவம்பர் 20-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. பெஸ்ட் பான்கேக்ஸ் இன் தி கவுண்டி திரைப்படம் நவம்பர் 20 முதல் அமேசான் பிரைம் வீடியோவில் வாடகைக்குக் கிடைக்கிறது. தி ரெய்டு திரைப்படம் நவம்பர் 20 அன்று லயன்ஸ்கேட் பிளே ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

ஐஸ்கிரீம் மேன் திரைப்படம் நவம்பர் 20-ம் தேதி ஷடர் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. தி லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆஃப் பெக்கி திரைப்படம் நவம்பர் 20 முதல் அமேசான் பிரைம் வீடியோவில் வாடகைக்குக் கிடைக்கிறது. மேக்கிங் மேரி ஆன்டோனெட் திரைப்படம் நவம்பர் 20-ம் தேதி மூபி ஓடிடி தளத்தில் வெளியாகிறது. டோனி திரைப்படம் நவம்பர் 20 அன்று எச்.பி.ஓ மேக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. அன்ஃபோர்டபிள் கிறிஸ்துமஸ் திரைப்படம் நவம்பர் 20-ம் தேதி பீகாக் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. யூ ஹேட் டு பி தேர் திரைப்படம் நவம்பர் 20 முதல் அமேசான் பிரைம் வீடியோவில் வாடகை அடிப்படையில் பார்க்கக் கிடைக்கிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஓடிடி
தமிழ் சினிமா
தனுஷ்
 
3rd ODI • AUS vs ENG 2026
Live
AUSAUS
(36.2 ov)178/6
ENGENG
328
AUS need 151 runs in 82 balls
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Live
PAKPAK
325
SLSL
(6.4 ov) 98 & 10/2
Day 2 - Session 3
Schedule ›
26th T20 • WBBLT20
HH-WHH-W
Thu, 19 Nov, 2026
PS-WPS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
27th T20 • WBBLT20
BH-WBH-W
Thu, 19 Nov, 2026
ST-WST-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
434 & 284/8
SLSL
446
Match drawn
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
இந்தியாவின் 'ஜுமாஞ்சி'யா விமல் நடிக்கும் 'நவோரியா'? சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள சாகச படத்தின் மிரட்டல் அப்டேட்!
Recommended image2
Suriya Gift to Naslen : சீன் பட வில்லன் நஸ்லெனுக்கு ஹீரோ சூர்யா கொடுத்த காஸ்ட்லி கிஃப்ட்... அதன் விலை எவ்வளவு தெரியுமா?
Recommended image3
Vijay Antony : மகள் இல்லாத வலி... ஒவ்வொரு அடியிலும் அவள் நினைவு! விஜய் ஆண்டனி செருப்பு அணியாததன் பின்னணியில் இப்படி ஒரு ரகசியமா?
Related Stories
Recommended image1
First OTT platform in India: இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட முதல் ஓடிடி தளம் எது தெரியுமா?
Recommended image2
வெறும் ரூ.35 போதும்.. 1GB டேட்டாவுடன் 2 ரீஜினல் ஓடிடி சந்தாக்கள் இலவசம்: வி.ஐ அதிரடி ஆஃபர்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved