Published : Nov 15, 2024, 12:26 PM ISTUpdated : Nov 15, 2024, 01:29 PM IST
This Week Bigg Boss Elimination : பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளர்களாக வந்த ஆறு பேரில் இருந்து ஒருவர் தான் இந்த வாரம் எலிமினேட் ஆக உள்ளதாக கூறப்படுகிறது.
பிக் பாஸ் நிகாழ்ச்சியின் 8-வது சீசன் கடந்த மாதம் தொடங்கி 40 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி முதல் வாரத்தில் இருந்தே அலப்பறை இல்லாமல் ஆமை வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கண்டெட் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளர்கள் என்றால் அது ரவீந்தர் சந்திரசேகர் மற்றும் தர்ஷா குப்தா தான். அவர்கள் இருவரையுமே முதல் மூன்று வாரங்களில் எலிமினேட் பண்ணி வெளியே அனுப்பிவிட்டனர்.
24
Bigg Boss Contestants
இதுதவிர அர்னவ், சுனிதா ஆகியோரும் எலிமினேட் ஆகி வெளியேறிவிட்டனர். விறுவிறுப்பே இல்லாமல் சென்றுகொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை சூடுபிடிக்க வைக்க கடந்த நவம்பர் 3ந் தேதி 6 போட்டியாளர்களை வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே அனுப்பினர். இவர்களாவது கண்டெண்ட் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தால் அனைவருமே டம்மி பீஸ் ஆகிவிட்டனர். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி வழக்கம்போல் மந்தமாக சென்றுகொண்டிருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்த போட்டியாளர்கள் முதல் வாரம் நாமினேஷனில் இருந்து தப்பித்த நிலையில், இந்த வாரம் அவர்களை தொக்காக நாமினேஷனில் சிக்க வைத்துள்ளனர் பழைய போட்டியாளர்கள். வைல்டு கார்டாக உள்ளே வந்தவர்களில் ரயான் தவிர எஞ்சியுள்ள ஐந்து பேருமே இந்த வார எலிமினேஷனுக்கு நாமினேட் ஆகி உள்ளனர். முதல் வார பர்பார்மன்ஸை வைத்து ராணவ் தான் இந்த வாரம் எலிமினேட் ஆவார் என அனைவரும் தப்பு கணக்கு போட்டுவிட்டனர்.
44
Bigg Boss This Week Elimination
ஆனால் இந்த வாரம் நடைபெற்ற ஸ்கூல் டாஸ்கில் டாப் பர்பார்மரே அவர் தான். அவரின் பங்களிப்பு இந்த டாஸ்க்கில் அதிகம் இருந்ததால் செளந்தர்யாவுக்கு அடுத்தபடியாக இந்த வாரம் அவருக்கு தான் அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. இதனால் இந்த வாரம் ராணவ் எலிமினேட் ஆக வாய்ப்பில்லை. அதேபோல் ஷிவகுமாரும் கணிசமான வாக்குகளை பெற்று தப்பி இருப்பதால், எஞ்சியுள்ள வர்ஷினி, மஞ்சரி மற்றும் ரியா ஆகியோர் தான் டேஞ்சர் ஜோனில் உள்ளனர். இவர்கள் மூவருக்குமே குறைந்த அளவிலான வாக்கு வித்தியாசமே உள்ளது. அதிலும் ரியாவுக்கு தான் கம்மியான வாக்குகள் இருக்கிறது. அதனால் அவர் எலிமினேட் ஆகவும் வாய்ப்புகள் இருக்கிறது.