
தமிழ் சினிமாவில் ஒரே மாதிரியான கதைக்களத்தை கொண்ட படங்கள் தற்போது வரை எடுக்கப்பட்டு வந்தாலும், தன்னுடைய ஒவ்வொரு திரைப்படங்களிலும், வித்தியாசத்தை புகுத்தி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி வருபவர் பார்த்திபன். ரசிகர்கள் மத்தியில் தனித்துவமான இயக்குனராகவும் திறமையான நடிகராகவும் பார்க்கப்பட்டு வருகிறார்.
சென்னையில் சேர்ந்த பார்த்திபன், 1957 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி பிறந்தவர். தன்னுடைய இளம் வயதில் இருந்தே திரைப்படங்கள் மீதான கொண்ட ஆர்வம் காரணமாக, பிரபல இயக்குனரும், நடிகருமான கே பாக்யராஜிடம் 1984 ஆம் ஆண்டு துணை இயக்குனராக சேர்ந்தார். சுமார் 20 படங்கள் அவரிடம் பணியாற்றிய பார்த்திபன், துணை இயக்குனராக பணியாற்றி கொண்டே சில படங்களிலும் நடித்தார்.
அந்த வகையில் 1981 ஆம் ஆண்டு இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளியான, ராணுவ வீரன் திரைப்படத்தில் மணமகன் கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் பறவையின் மறுபக்கம், வேடிக்கை மனிதர்கள், துரோகம் அதிகம் இல்லை, அன்புள்ள ரஜினிகாந்த், போன்ற திரைப்படங்களில் குட்டி குட்டி வேடங்களை நடிக்க இவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டது.
பார்த்திபனை ரசிகர்கள் மத்தியில் ஒரு நடிகராக பார்க்க வைத்த திரைப்படம் 'தாவணிக் கனவுகள்'. இதை தொடர்ந்து பார்த்திபன் இயக்கி - ஹீரோவாக அறிமுகமான முதல் திரைப்படம் 'புதிய பாதை '1989 ஆம் ஆண்டு வெளியான , இந்த திரைப்படத்தில் பார்த்திபனுக்கு ஜோடியாக நடிகை சீதா நடித்திருந்தார். மேலும் வி.கே ராமசாமி, மனோரமா, நாசர், ஸ்ரீதர், குயிலி, சத்யபிரியா, வெண்ணிற ஆடை மூர்த்தி, உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
ஜோதா - அக்பர் கெட்டப்பில் கணவரோடு ரொமாண்டிக் போட்டோஷூட் நடத்திய ரம்யா பாண்டியன்!
முதல் படத்திலேயே தன்னை ஒரு சிறந்த இயக்குனராக நிரூபித்த பார்த்திபன், இந்த படத்திற்காக தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் விருது, சிறந்த படத்திற்கான தேசிய விருது மற்றும் சிறந்த கதைக்கான தமிழக அரசின் விருது போன்றவற்றை வென்றார்.
இந்த படத்தின் வெற்றி, சீதா மற்றும் பார்த்திபன் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது. பார்த்திபன் - சீதா இருவரும் காதலிக்க துவங்கிய நிலையில், சீதாவின் காதலுக்கு அவருடைய பெற்றோர் எதிராக இருந்த போதும், பெற்றோரை மீறி சீதா 1990 ஆம் ஆண்டு பார்த்திபனை திருமணமும் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு அபிநயா, கீர்த்தனா, என்கிற இரண்டு மகள்கள் பிறந்த நிலையில், ராக்கி என்கிற மகனை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். மிகவும் சந்தோஷமாக இருந்த வாழ்க்கையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு 11 வருடங்களில் இவர்களுடைய திருமண வாழ்க்கை முடிவு கட்டியது.
சீதா வேறு ஒரு சீரியல் நடிகரை காதலித்து தான் சீதா - பார்த்திபன் பிரிய காரணம் என்கிற ஒரு தகவல் ஒரு பக்கம் உலா வந்தாலும், மற்றொருபுறம் பார்த்திபன் செய்த் துரோகம் தான் சீதா அவரை விட்டு பிரிய காரணம் என்றும் கூறப்பட்டது. ஆனால் இதுவரை இருவருமே வெளிப்படையாக தங்களின் விவாகரத்துக்கான காரணத்தை கூறியது இல்லை.
திமிராக பேசிய அப்பாஸ்; ஆனந்தம் படப்பிடிப்பில் அடிக்க பாய்ந்த பாவா லட்சுமணன்! என்ன நடந்தது?
வாழ்க்கையில் இருவரும் பிரிந்தாலும், தங்களுடைய பிள்ளைகள் விஷயத்தில் இருவருமே சேர்ந்து தான் முடிவெடுக்கின்றனர். கீர்த்தனா மற்றும் அபிநயா திருமணத்தில் கூட சீதா - பார்த்திபன் சேர்ந்து இருந்தனர்.
பார்த்திபன் சில படங்களை தயாரித்து அதன் தோல்வியால் நஷ்டத்தை சந்தித்திருந்தாலும், கடைசியாக இவர் இயக்கி, தயாரித்து, நடித்திருந்த, இரவின் நிழல் மற்றும் டீன்ஸ் ஆகிய படங்கள் நல்ல லாபத்தை பெற்று தந்தை. அதே போல் தான் நடிக்கும் படங்களுக்கு 3 முதல் 5 கோடி வரை சம்பளமாக பெறுகிறார்.
டீன்ஸ் படத்தின் புரோமோஷனின் போது தான் வாடகை வீட்டில் தான் வசித்து வருவதாக கூறிய பார்த்திபனின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. பார்த்திபன் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக ஹீரோவாக நடித்தும், திரைப்பட தயாரிப்பின் மூலமும் ரூ.40 முதல் ரூ.50 கோடி வரை சொத்துக்கு அதிபதியாக உள்ளார்.
ஆனால் சிறு வயதில் இருந்து ஏழ்மையில் வாழ்ந்த பார்த்திபன் ராஜ வாழ்க்கை வாழும் அளவுக்கு சொத்துக்கள் இருந்தாலும் எளிமையையே விரும்புகிறார். அதே போல் பார்த்திபன் வாடகை வீட்டில் வசிப்பதாக கூறியபோது... வாடகை வீட்டில் வசிப்பவர்கள் எல்லோரும் ஏழை இல்லை என கூறி பிஸ்மி உள்ளிட்ட திரைப்பட விமர்சகர்கள் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.
ரகசிய திருமணம்; ஊருக்கே தெரியாமல் குழந்தையை பெற்ற ரஜினி - விஜய் பட ஹீரோயினா இது?